தேவனோடு சேர்ந்துரையாடல் Jeffersonville, Indiana, USA 59-1220M 1கரகரப்பாயுள்ளது. இவ்வாரம் ஒரு அற்புதமான சமயத்தை நாம் கொண்டிருந்தோம். ஒரு மகத்தான ஆசீர்வாதங்களுடைய வாரமாக இது எனக்கு அமைந்திருந்தது. இங்கிருக்கும் உங்களில் அநேகருக்கும் அவ்வாறே இருந்திருக்கும் என்று நான் நிச்சயமுடையவனாக இருக்கின்றேன். அநேகர் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டனர். இந்த கூட்டத்திற்கான நம்முடைய நோக்கமும் அதுவேயாகும். ஆகவே நாங்கள் ஏன் அதற்கான விளம்பரத்தை வெளியிடவில்லை என்றால், ஜனங்களை கொள்ளத்தக்கதாக போதுமான இடவசதி இல்லாதிருப்பதின் காரணத்தால்தான். பாருங்கள்? நாம்... ஒவ்வொரு இரவும் நம்முடைய உள்ளூர் ஜனங்கள் திரும்பிச் செல்ல வேண்டியதாயிருந்தது. ஆகவே நாங்கள் இங்குள்ள மக்களுக்கு மாத்திரமே அறிவிக்க வேண்டியதாயிருந்தது. ஆகவே காணிக்கைகளுக்கான நிதியளிப்பைக் குறித்துக் கூறுவோமானால், அது நம்முடைய உள்ளூர் ஜனங்களுக்காகவே. எப்படி... அது நம்முடைய சபையின் காரியமாகும். இது நம்முடைய வழக்கமான ஞாயிறு ஆராதனையாகும். பாருங்கள்? ஆகவே அவை. அவ்வாறு எவராவது உதவும் எண்ணம் கொண்டிருப்பீர்களானால், அது தேவையுள்ளார்களுக்கே செல்லும் என்று நாங்கள் - நாங்கள் உறுதி கூறுகிறோம். தங்களிடம் ஒன்றுமே இல்லாத குடும்பங்கள் இப்பட்டணத்தில் இருக்கின்றன. கிறிஸ்மஸ்க்காகவும் (Christmas) அவர்களிடம் ஒன்றுமே இல்லை. அவர்கள் இந்தச் சபையை சார்ந்துள்ளனர். ஆகவே, அந்த பிரகாரமாகவே, என்ன? அது - அது அந்த நோக்கத்திற்காகவே உபயோகப்படுத்தப்படும். அது எதற்காக என்று நம்முடைய உதவிக்காரர்களில் (deacons) ஒருவர் அவர்களிடம் கூறுவார், அல்லது அங்கே பின்னால் இருக்கின்ற என்னுடைய சகோதரி அதை எடுத்துக் கொள்வார்கள். 2இப்பொழுது, இக்காலை நாம் ஞானஸ்நான ஆராதனை வைத்திருந்தோம் என்று நான் கேள்விப்பட்டேன். அவைகள் எனக்கு சற்று உந்தித்தள்ளுகின்ற ஒரு காரியமாக இருக்கின்றன. அப்படித்தானே? நல்லது, அப்படியானால், இன்றிரவு மற்றுமொரு ஆராதனையை நாம் வைப்போம். ஆகவே அப்படியானால் நாம் இரண்டு வைப்போம். ஆகவே நாங்கள்... அல்லது ஞானஸ்நான தொட்டி நிரப்பப்படும். ஏனென்றால் ஆராதனைக்கு பிறகு இன்றிரவு மற்றுமொரு ஞானஸ்நான ஆராதனை இருக்கும். ஆகவே, அவர்களில் சிலர் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று கூறினர். ஆதலால், சில நிமிடங்களுக்கு முன்பு பில்லி என்னிடம் ஓடி வந்து, ''உடனடியாக வந்து விடாதீர், ஏனென்றால் சகோதரன் நெவில் முதலில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்'' என்று என்னிடம் கூறினான். மேலும், ''அநேக ஜனங்கள் உடனடியாக செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றனர். நாம் இக்காலை ஞானஸ்நானம் வைப்போம் என்பதைக் குறித்து அவர்கள் நிச்சயமில்லாதிருந்தனர்“ என்று கூறினான். நினைவில் கொள்ளுங்கள், இந்த தொட்டி எப்பொழுதுமே திறந்திருக்கிறது. எப்பொழுதுமே, எந்த நேரத்திலும், பகல் அல்லது இரவின் எந்த மணி நேரத்திலும் ஞானஸ்நானத்திற்கென்று தயாராக இருக்கின்றது. மற்ற ஊழியக்காரர்களும் இங்கே ஞானஸ்நானம் கொடுப்பதற்கு இத்தொட்டியை உபயோகிக்கின்றனர். ஆகவே அதைக் குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். 3இங்கே சில காலங்களுக்கு முன்பு, ஒரு பிரசங்கிக்கும் ஆராதனைக்காக பார்க் மெதோடிஸ்டு சபைக்கு நான் சென்றிருந்தேன். அங்கே அந்த அருமையான சகோதரன், “நான் அங்கே அதை உபயோகப்படுத்தத்தக்கதாக சகோதரன். பிரான்ஹாமின் இடத்திற்கு நான் சென்றிருந்தேன். அதை நீங்கள் என்னவென்று அழைக்கிறீர்கள்?'' என்றார். நான், ''ஒரு மெதோடிஸ்டு அதை பாப்டிஸ்டரி'' (Baptistery) என்று அழைப்பது மிகவும் கடினமான ஒரு காரியமாக இருக்கும்'' என்றேன். உங்களை தெளிப்பு ஞானஸ்நானம் செய்விப்பதற்கென அவர்கள் ஒரு சிறு கிண்ணத்தை வைத்துள்ளனர். அது அதைக் குறித்ததான ஒரு சிறிய காரியம் மாத்திரமே என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் ''ஒரு மெதோடிஸ்ட், 'பாப்டிஸ்டரி' (பாப்டிஸ்டரி என்றால் தமிழில் ஞானஸ்நானம் கொடுக்கப்படும் இடம் - தமிழாக்கியோன்) என்று கூறுவது கடினமான ஒரு சொல்லாக இருக்கும்'' என்று கூறினேன். அதற்கு அவர், “அதைப் போன்ற ஒன்று இங்கிருக்க வேண்டும் என்றும், அதில் நான் விசுவாசம் கொண்டிருக்கிறேன்'' என்றும் கூறினார். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், மெதோடிஸ்டோ, பாப்டிஸ்டோ, பிரஸ்பிடேரியனோ இன்னும் யார் வேண்டுமானாலும் அதை உபயோகிக்க விருப்பமுடையவர்களாய் இருந்தால், அது அங்கேயிருக்கிறது. தண்ணீரும், தொட்டியும் தாராளமாக திறந்திருக்கிறது. ஆகவே ஒரு சிறிய வெப்பமாக்கும் சாதனத்தை நாங்கள் வைத்திருக்கின்றோம். அந்த கருவியை அதில் போட்டு அதை சிறிது வெப்பமாக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அது நீரை சூடாக்குவதில்லை என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். என்னுடைய வாழ்க்கையிலே நான் கண்டிராத மிகவும் குளிர்ந்த நீராக அது இருக்கின்றது. ஆகவே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காக நான் என்னுடைய பாதத்தைக் கொண்டு அந்த சிற்றோடையில் உள்ள உறைந்த பனிக்கட்டிகளை அதைப்போன்று உடைக்க வேண்டியதாயிருக்கும். அநேகமுறை நான் அவ்வாறு ஞானஸ்நானம் கொடுத்திருக்கின்றேன். ஆகவே அதற்கு பிறகு நான் தங்குகின்ற இடத்திற்கு நடந்து சென்று உடைகளை மாற்றிக்கொள்வேன். நான் நடந்து செல்கையில் என் உடைகள் அப்படியே என் மீது உறைந்துவிடும். என்னுடைய கால் சட்டைகள் உறைந்து கட்டியாகிவிடும். ஆதலால் என்னால் ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாமல் இருக்கும். ஆனால் இதைப் போன்று அவ்வளவு குளுமையாக இருக்காது. என்னுடைய வாழ்க்கையிலே நான் கண்டிராத ஒரு மிகவும் குளுமையான நீராக அது இருந்தது. அதைப் போன்ற தண்ணீரை எப்பொழுதுமே நான் கண்டதில்லை. சகோதரன். கெல்லி, நான் ஒவ்வொரு தடவையும் அங்கு செல்லும்போது அது என்னை ஏறக்குறைய மரித்து போகும் அளவிற்கு உறையச் செய்து விடுகிறது. ஆகவே அதற்கு பிறகு... (சகோதரி. கெல்லி, ''நீர் நலமாக உணர்வீரானால், அது பாதிக்காது'' என்று கூறுகிறார்கள் - ஆசி) அது சரி. நீங்கள் நலமாக உணர்வீர்களானால் அது உங்களை பாதிக்காது. சகோதரி. கெல்லி, நீங்கள் நலமாக உணர்ந்தால், அது பாதிப்படையச் செய்யாது என்று கூறுகிறார்கள். 4பல வித்தியாசமான ஸ்தாபனங்களிலிருந்து இங்கே கலந்து கூடியுள்ள இந்த மகிழ்ச்சிமிக்க மக்கள் கூட்டத்திற்காக நாங்கள் சந்தோஷமடைகின்றோம். இது ஒன்றாக கூட்டப்பட்டுள்ள தேவனுடைய பிள்ளைகளாவர். இங்கே, மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, நசரீன், பரிசுத்த யாத்ரீகக் குழு, கத்தோலிக்கர், யெகோவா சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானம், பெந்தெகொஸ்தேயினர், மற்றும் எல்லா ஜனங்களும் ஒன்றாக கூட்டப்பட்டுள்ளனர். (யாரோ ஒருவர், “யூதன் கூட'' என்கிறார் - ஆசி) ஒரு யூதன் கூட. அதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உமக்கு நன்றி. யூதனுக்காக நாம் மிகவும் சந்தோஷமடைகிறோம். ஆம், ஐயா. யூதன் இல்லாவிட்டால், நாம் எங்கிருப்போம் என்பது நமக்கு தெரியாதிருக்கும். அது சரி. இப்பொழுது அது மிகவும் அருமையாயிருக்கும். அவ்வாறு தான் பரலோகமும் இருக்கப்போகிறது, சரியாக, ஏனென்றால் பரலோகம் எல்லா வித்தியாசப்பட்ட ஸ்தாபனங்களிலிருந்து கூட்டப்பட்ட ஒன்றாய் இருக்கும். ஆகவே அதன் காரணமாகத்தான் நாம் எல்லோரும் ஒன்று கூட்டப்பட்டு உன்னதங்களில் அமர்ந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது, டாக், அது சிறிது மனோதத்துவ சாத்திரமாகும். அது அப்படித்தான் என்பது எனக்குத் தெரியும். அவர்... நெருங்கி நான் இல்லை. 5தொண்டை சற்று கரகரப்பாயுள்ளதால், இக்காலையில், நான் இரண்டாவது கியரில் (gear) தொடங்கி பிறகு சிறிது நேரம் கழித்து இயங்க ஆரம்பிப்பேன். நான் எப்பொழுது இயங்க ஆரம்பிப்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது, கூட்டத்தைக் குறித்ததான கேள்விகள் கடந்த இரவு என்னிடம் அளிக்கப்பட்டன. கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு வழக்கமான பிரசங்க ஆராதனைக்கு முன்பு சற்று வேகமாக அவைகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆகவே உங்களால் கூடுமானால் இன்றிரவு வரும்படி பிரயாசை எடுங்கள். பரிசுத்த ஆவியானவர் இன்னுமாக நம்மை தொடர்ந்து வழி நடத்துகையில், கர்த்தருக்கு சித்தமானால் எழுப்புதல் கூட்டங்களின் முடிவாக இன்றிரவு நமக்கு தெரிந்த அளவில், ஒரு முக்கியமான பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். 6இன்றைக்கோ அல்லது இந்த ஆராதனைக்கு பிறகு, ஒருவேளை இக்காலை வேளையிலேயே உங்களில் அநேகர் ஒருகால் உங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டியதாயிருக்கும். உங்களை நாங்கள் எவ்வளவாக மெச்சுகிறோம் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். ஆகவே உங்களுக்கு சந்தோஷமான கிறிஸ்துமஸ் மற்றும் சிறந்த புத்தாண்டு வாழ்த்துக்களை கூற நாங்கள் விரும்புகிறோம். தேவன் உங்களோடிருந்து உங்களுக்கு புதிய காரியங்களை அளித்து, நீங்கள் எதிர்பார்க்கின்ற, பசியாகவுள்ள புதிய ஜீவனை அளிப்பாராக. தேவனுக்காக மிகவுமாக பசியுடையவனாக இருக்கிறேன். அதைத்தான் நானும் செய்கின்றேன். இன்னும் அநேக கேள்விகள் உள்ளன. அங்கே... அறையில் சில கேள்விகளை நான் வைத்திருக்கிறேன், அப்பொழுது தான் அவர்கள் என்னிடம் அளித்தனர். கடந்த இரவு என் மகனிடம் சில சகோதரர் சில கேள்விகளை கொடுத்தனர். நான் அவைகளை என்னுடைய சட்டைப்பைக்குள் வைத்து விட்டதால், அவைகளைப் பார்க்க எனக்கு தருணம் கிடைக்கவில்லை. மிகவும் காலதாமதமாகியிருந்தது. ஆகவே அவைகளில் சில மறுபடியுமாக மத்... அல்லது எபிரேயர்; 6:4யைக் குறித்தவைகளாய் உள்ளன. 7சில நிமிடங்களுக்கு முன் சகோதரி. மெமி அதை புரிந்து கொண்டதற்காய் தான் மிகவும் சந்தோஷமடைந்ததாகவும், ஏனெனில் சில காலங்களுக்கு முன்பு அதே கேள்வியை கேட்டிருந்ததாகவும் கூறினார்கள். அது மிகவும், மிகவும் சிறந்த காரியமாகும். அது என்னவென்று நீங்கள் எல்லோரும் புரிந்து கொண்டீர்கள் என்று நான் நிச்சயிக்கின்றேன். நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அது ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு கிறிஸ்தவன் அல்ல. இப்பொழுது நீங்கள் எபிரேயர் 10திற்கு செல்வீர்களானால் அங்கே அவர் வேறொன்றைக் குறித்து பேசுகின்றார், அப்பொழுது கிறிஸ்தவனுக்கு மன்னிக்க முடியாத பாவத்தைக் குறித்து அவர் பேசுகின்றார், ஆனால், இதுவோ நிரப்பப்பட்ட மனுஷனுக்கான ஒன்று. ஆனால் இந்த மனுஷனோ அப்பொழுது மாத்திரமே ருசித்த ஒரு எல்லைக் கோட்டு விசுவாசி ஆவான். எல்லா சபைகளிலும் அப்படிப்பட்டவர்களை நாம் கொண்டிருக்கின்றோம். அவர்கள் சபைக்கு மாத்திரம் வந்து, ஓ, கர்த்தர் செய்கின்றதை மெச்சிக் கொண்டிருப்பார்கள், ஆனால் அதற்குள்ளாக அவர்கள் ஒரு போதும் செல்லமாட்டார்கள். யாரோ ஒருவர் சுகமாக்கப்பட்டதை அவர்கள் கண்டு அதை பாராட்டுவார்கள், ஆனால் வெளியே சென்று வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதோ அல்லது மருத்துவமனைகளை சந்தித்தல் அல்லது அதைப் போன்ற சரியான ஒன்றை செய்யத்தக்கதாக எந்த ஒரு முயற்சியும் அவர்கள் எடுக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் கண்டிருக்கின்றீர்கள். அவர்கள் ருசிபார்த்துள்ளனர். அவர்கள் கண்டுள்ளனர். 8நான் கூறினது போல, காயீனுடைய, கானானியர்கள், அல்லது அந்த இஸ்ரவேலர், அவர்கள் கானானை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், அவர்கள் ஏறக்குறைய உள்ளே சென்றுவிட்டிருந்தனர். அந்த தேசத்தின் கனியை ருசி பார்க்கின்ற அளவிற்கு அவர்கள் நெருங்கி சென்றனர், ஆனால் அவர்கள், “ஓ, எங்களால் - எங்களால் முடியவில்லை. எங்களால் - எங்களால் அதை செய்ய - செய்ய முடியாது'' என்று கூறினர். ஆனால் யோசுவாவும் காலேபும் தங்களால் அதைச் செய்ய முடியும் என்று அறிந்திருந்தனர், ஏனெனில் அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை கொண்டிருந்தனர். ஆகவே அதைக் குறித்து தான் பவுல் பேச முற்படுகின்றான், அதற்கருகில் மிகவுமாக வந்து ஆனால் அதன் மேலே தங்கள் கைகளைக்கூட வைக்க முடியாதிருந்த அவர்களைக் குறித்து குறிப்பிடுகிறான். பாருங்கள்? அவர்கள், ''ஓ, நான் - நான் சபைக்கு, சபைகளுக்கு செல்கிறேன். நான், பரிசுத்த சபைக்கு, பெந்தெகொஸ்தே சபைக்கு செல்கிறேன், நான் இதற்கு செல்கிறேன்.'' என்று கூறுவார்கள். ''ஆனால் நீங்கள் விசுவாசித்த பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்களா?'' ''ஓ, இல்லை. நான் இன்னுமாக அதை பெறவில்லை.'' பாருங்கள்? அதோ. ஆனால் ஒரு உண்மையான விசுவாசியோ அதற்குள்ளாக செல்லும் வரை ஓயவேமாட்டான். அவன் அதற்குள்ளாக சென்று தான் ஆகவேண்டும். பாருங்கள்? ஒரு - ஒரு எல்லைக் கோட்டு விசுவாசி மாத்திரமே, இப்பொழுது, அப்படிப்பட்ட நபரைக் குறித்து தான் பவுல் பேசுகின்றான். 9என்னவாயிருந்தாலும், இப்பொழுது இந்த காலை வேளையில், இது கர்த்தருக்கு சித்தமானால் இக்காலைக்கான வழக்கமான சுவிசேஷ செய்தியாயிருக்கும். அவர் எனக்கு போதுமான குரலை அளித்தார். ஆகவே அறிவிப்புகளைக் குறித்து நான் நினைப்பது என்னவென்றால், எனக்கு நிச்சயமாக தெரியவில்லை, எனக்கு தெரிந்தவரையில் நான் நினைப்பது என்னவென்றால், மற்றெல்லாவற்றையும் சகோதரன் நெவில் செய்துள்ளார். நீங்கள் எல்லோரும் இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நீங்கள் ஒரு வேளை இவ்வழியாக... மாலை ஆராதனைக்காக இருக்க இயலாதிருக்கின்ற, வீட்டிற்கு செல்லவிருக்கின்ற நீங்கள், இப்பொழுது நீங்கள் இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் சில தருணங்களில் இங்கே இருக்க நேரிட்டால், அப்படியிருக்க நான் எண்ண விரும்புகிறேன், நீங்கள் வந்து எங்கள் மேய்ப்பருடைய செய்தியைக் கேளுங்கள். இந்த கூடாரத்தில் ஒரு மிக அருமையான போதகரை நாங்கள் கொண்டிருக்கின்றோம், அவர் தான் சகோதரன். ஆர்மன் நெவில். அவர் இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கின்றார் என்பதற்காக இதை நான் கூறவில்லை. அநேக வருடங்களாக அவரை எனக்குத் தெரியும். சிறிதளவும் கூட அவர் மாறவேயில்லை. அவர் இன்னுமாக ஆர்மன் நெவிலாக, கர்த்தருடைய ஊழியக்காரனாக இருந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவர் பேரில் சார்ந்திருக்கலாம். அவர் உண்மையுள்ள, பக்தியுள்ள, ஒரு மகத்தான பிரசங்கி ஆவார். 10நான் அங்கே பின்னால் இருந்து கொண்டு.... உலக முழுவதிலும் பிரசங்கிகள் பிரசங்கம் செய்வதை நான் கேட்டிருக்கின்றேன். ஆனால் சில சமயங்களில் என்னை திகைப்பூட்டுகின்ற காரியங்களை அவர் பிரசங்கிப்பார். நான் உங்களுக்கு கூறுகிறேன், அவர் கூறுகின்ற அந்த சிறு காரியங்கள் உங்களை அப்படியே எழும்பச் செய்யும். நான் உங்களுக்கு கூறுகிறேன், நான் இங்கு வருகின்ற ஒவ்வொரு சமயமும் நான்... நான் அதை குறிப்பெடுக்கும் போது அவருடைய பிரசங்கத்திலிருந்து பதினைந்து தலைப்புகளை நான் பெற்றுக் கொள்வேன். பிறகு வீடு சென்று, “ஓ, என்னே, அதில் ஒரு செய்தியையே எடுக்கலாமே! ஓ, என்னே, ஒரு செய்தியே அமைக்கலாமே!'' என்பேன். அதை அப்படியே எழுதிக் கொள்வேன். ஆதலால் இங்கே வந்து சகோதரன். நெவில் பேசுவதைக் கேளுங்கள், எங்கள் ஜனங்களோடு ஐக்கியம் கொள்ளுங்கள். அவர்கள் ஏழை ஜனங்கள், மிக ஏழைகள். ஆனால் அவர்கள் கர்த்தரை நேசிக்கின்றனர். ஆகவே உங்களையும் அவர்கள் நேசிப்பார்கள். ஆகவே நீங்கள் எங்களுடன் இருந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், தேவன் உங்களை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம். இப்பொழுது நாம் வார்த்தையை அணுகும் முன்னர் சிறிது நேரம் நமது தலைகளை தாழ்த்துவோம். 11கிருபையுள்ள கர்த்தாவே, இப்பொழுது எங்களுக்கு தெரிந்திருக்கின்ற பிரகாரமாக பயபக்தியுடன் நாங்கள் வருகிறோம். அவருடைய நாமத்தினாலே உம்மை நோக்கி அவர் மூலமாக எதைக் கேட்டாலும் நீர் செவி கொடுப்பீர் என்ற விசுவாசத்துடன் இயேசுவின் நாமத்திலே நாங்கள் வருகின்றோம். ஆகவே தேவனே, நீர் இக்காலை எங்கள் மத்தியில் வருவீர் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கடந்த வாரத்திலே நீர் எங்களுக்கு செய்தவற்றிற்காக எங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து உமக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். அநேக துக்கம் நிறைந்த இருதயங்கள் சந்தோஷம் கொண்டதாக மாற்றப்பட்டன. அநேக ஜனங்கள் குதூகலம் செய்ய விழைந்தனர். வார்த்தையின் பேரில் குழப்பமுற்றிருந்த அநேகர் இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜெயத்தை முழங்குகின்றனர். இக்காரியங்களுக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகின்றோம். ஆகவே இன்றைக்கு உம்முடைய ஜனங்களிடம் வருவது (visit) மற்றுமொரு தடவையாக இருக்கட்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம் கர்த்தாவே. நாங்கள் இங்கே பல்வேறு பிரிவுகளாய், கூறப்போனால், ஸ்தாபன சபைகளாக எல்லோரும் இங்கே கூடி வந்திருக்கின்றோம் என்று நான் சொல்லலாம். சிலர் வித்தியாசப்பட்ட நம்பிக்கையுடைவர்களாய், ஒருவேளை வேத வசனங்களின் பேரில் சிநேக பாவமான கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களாய், அதே சமயத்தில் அது எந்தவித ஒரு தடையும் உண்டாக்காமல் இருக்கட்டும். தன் கரங்களை உயர்த்தியுள்ள ஒரு யூத சகோதரிக்கும் கூட. நாங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாக உன்னதங்களிலே ஒன்று கூடியுள்ளோம். 12இன்றைக்கு உம்முடைய ஆவி தாமே எங்கள் மீது பொழிந்தருள வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கின்றோம். கர்த்தாவே இக்காலையில் எங்களுக்கு புதிய ஞானஸ்நானத்தையும் அல்லது புதிய நிரப்புதலை தந்தருளும். வியாதியஸ்தர்களை சுகப்படுத்தும், துன்பத்தில் உள்ளவர்களையும் தேவையுள்ளோரையும் சந்தியும். இங்கே ஒரு மனிதன் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்றார், மற்றவர் அங்கே வெளியே உள்ளனர். அவர்கள் ஒருவேளை இருதயக்கோளாறு உடையவர்களாக இருக்கலாம், சிலர் புற்று நோய் உள்ளவர்களாக இருக்கலாம், கர்த்தாவே, அவர்கள் மரித்துக் கொண்டிருக்கின்றனர். எங்கள் தேசத்தினுடைய விலைமதிக்கத்தக்க மருத்துவர்கள் அவர்களுடைய வியாதிகளை கண்டுபிடித்து, அறுவை சிகிச்சைகள் மற்றும் தங்களால் இயன்றவரை மிகவும் முயற்சி செய்கின்றனர். ஆனால் அந்த பிசாசானவன் இன்னும் விடாப்பிடியாக இருந்து கொண்டிருக்கிறான். அவர்களுடைய ஜீவனை எடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கின்றான். ஆகவே அவன்.... அவர்கள் தங்கள் மிருதுவான கரங்களால் கத்தியைக் கொண்டு எங்கோ ஒரு இடத்தில் அறுக்கின்றனர். அந்த மனிதனுக்கு உதவுவதற்காக. ஆனால் அந்த பிசாசோ வேறொரு சிறிய மூலைக்கு நழுவிச் சென்று அந்த இடத்திலே மிகவும் எழும்பி வருவான். ஏனெனில் அவனால் மருத்துவரிடமிருந்து மறைந்து கொள்ளவும் முடியும். ஆனால் தேவனே, உம்மிடத்திலிருந்து அவனால் மறைந்திருக்க முடியாது. அவன், சரியாக எங்கேயிருக்கின்றான் என்பது உமக்குத் தெரியும். ஆகவே உம்முடைய விசுவாசத்தின் வார்த்தையினாலும், வல்லமையினாலும் அவன் அகன்றேயாக வேண்டும். ஆகவே தேவனே, நீர் தாமே ஒவ்வொரு தீமையான காரியங்களும் ஜனங்களை விட்டு நீங்கச் செய்து, அதனால் அவர்கள் ஆரோக்கியமுடைவர்களாய் எங்களுடைய தேவனாகிய கர்த்தரின் ஆசீர்வாதங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டுமென்று இன்றைக்கு உம்மை நோக்கி ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கின்றோம். ஆமென். 13இப்பொழுது இங்கே அநேக கைக்குட்டைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே நாங்கள் அதன் பேரில் ஜெபத்தை ஏறெடுப்போம். இங்கே உங்களுக்கு ஒன்று இருக்கவில்லையெனில், உங்களுக்கு தேவையாயிருக்கும் பட்சத்தில், நீங்கள் தபால்பெட்டி மூன்று இரண்டு ஐந்திற்கு எங்களுக்கு கடிதம் எழுதுங்கள். நாங்கள் அதை உங்களுக்கு உடனடியாக அனுப்புவோம். அது எபிரேயர் புத்தகத்தில், அப்போஸ்தலர் புத்தகத்தில் 19ஆம் அதிகாரத்தில் காணப்படுகின்றது. நாங்கள் கைக்குட்டைகள் அல்லது உறுமால்களை ஜனங்களிடமிருந்து வாங்கி அதற்காக ஜெபத்தை ஏறெடுக்கின்றோம். இப்பொழுது இந்த காலை வேளையில் நாம் வேத வசனங்களில், ஏசாயாவின் புஸ்தகம் 1ஆம் அதிகாரத்திற்கு நாம் திருப்புவோம். ஏசாயா 1, நாம் வேதாகமத்தின் ஒரு பாகத்தை வாசிக்கையில், ஆகவே நாங்கள் வாசிப்பதை கவனிக்க நீங்கள் இந்த புஸ்தகத்திற்கு திருப்புகையில் வரப்போகின்ற சுகமளிக்கும் ஆராதனைகளைக் குறித்து நாங்கள் சிலவற்றை பேச விரும்புகிறோம். இப்பொழுது, தெய்வீக சுகமளித்தல் என்பது ஒரு முக்கியத்துவமிக்க (Major) ஒன்றாக நாங்கள் செய்கின்றோம் என்று நாங்கள் கூறவிழையவில்லை. ஏனெனில் தெய்வீக சுகமளித்தல் என்பது ஒரு சிறிய (Minor) காரியமாகும். ஆகவே ஒரு சிறிய காரியத்தின் மேல் முக்கியத்துவமானதை செய்ய உங்களால் முடியாது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் எண்பத்தாறு சதவீதம் தெய்வீக சுகமளித்தலாய் இருந்தது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆகவே தெய்வீக சுகமளித்தலின் மூலம் ஜனங்களின் கவனத்தை கவரச் செய்து அவர் தான் தேவன் என்பதன் புரிந்து கொள்ளுதலை கொண்டு வந்தது. ஆகவே அவர்கள்.... அவர், ''அது நான் என்று நீங்கள் விசுவாசிக்க முடியவில்லையெனில், நான் செய்கின்ற கிரியைகளை விசுவாசியுங்கள். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஆனால் நான் பிதாவின் காரியங்களை செய்திருந்தும் நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தால், கிரியைகளை விசுவாசியுங்கள்'' என்றார். 14பாருங்கள், ஒரு மனிதனாய், அவர் தம்மைத்தாமே தேவன் ஆக்கினார். சிலுவையில், அல்லது... சிலுவைக்கு முன்னர் அவர்கள் அவரிடம், ''நீர் செய்த நல்ல காரியத்திற்காக நாங்கள் உன்னைக் கல்லெறியவில்லை, ஆனால் நீ மனிதனாயிருக்கையில், உன்னைத் தானே தேவனாக்கிக் கொள்வதற்காக நாங்கள் உன்மேல் கல்லெறிகின்றோம்'' என்று கூறினர். அவர் தேவனாய் இருந்தார். அப்படித்தான். தேவன் அவருக்குள் இருந்தார். ஆகவே அப்பொழுது அவர், ''நீங்கள் என்னை விசுவாசிக்காவிட்டால், நான் செய்கின்ற கிரியைகளை விசுவாசியுங்கள்'' என்றார். பாருங்கள்? ''அவை தேவனால் ஆனது என்ற கிரியைகளை விசுவாசியுங்கள்“ என்றார். நல்லது, அதே காரியம் தான் இப்பொழுது இன்றைக்கு இருக்கின்றது. பூமியிலுள்ள எந்த ஒரு மனிதனும் தேவன் அல்ல. நிச்சயமாக இல்லை. நாம் எல்லோரும் மானிடர்கள் ஆவோம், ஒவ்வொருவரும் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டு, பொய்கள் பேசுபவர்களாய் இவ்வுலகத்தில் வந்தோம். ஆனால் இந்த வாரத்தில் மிக தெளிவாக ஆராய்ந்து பார்த்தது என்னவென்றால், முற்காலத்தில், பாவத்தின் காரணமாக தேவன் தம்முடைய சிருஷ்டிகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருந்தார். பிறகு இயேசு கிறிஸ்து என்னும் சரீரத்தில் தம்முடைய சிருஷ்டிகளுடன் வசித்தார், நாம் படுகின்ற வேதனைகளையும், அங்கலாப்புகளையும் மற்றக் காரியங்களுடன் நம்முடன் சேர்ந்து பாடுபடுவதற்காக “மாம்சமாக” நம்முடன் இருந்தார். பிறகு தாம் உள்ளே வாசம் செய்யத்தக்கதாக ஒரு சபையை அவர் பரிசுத்தப்படுத்தினார். ஆதலால் அது தேவன் நமக்கு மேலே இருத்தல்; தேவன் நம்மோடு இருத்தல்; தேவன் நமக்குள் இருத்தல் என்பதாகும். இயேசு, ''நான் என் பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்“ என்று கூறினார். ஆகவே அது தேவன் கிரியை செய்து கொண்டிருத்தலே என்பதை நீங்கள் கவனியுங்கள். ஆதலால் முழுவதுமாக பரிசுத்த ஆவியானவரிடத்தில் தன்னை ஒப்புவித்த ஒரு நபர் பேசுகிறார் என்றால், பேசுவது அந்த நபர் அல்ல. அனுபவத்தின் மூலமாக அதை நான் அறிவேன். 15கிறிஸ்துவுடன் எனக்கிருக்கும் சிறிய அனுபவத்தில், நான் என்ன பேசுகிறேன் என்பதை நானே அறியாதபடிக்கு என்னை நான் முற்றிலுமாக அவரிடத்தில் சமர்ப்பிக்க என்னை அவர் அனுமதித்ததை அநேக முறை நான் கண்டிருக்கின்றேன். சாதாரணமாக அதை நான் கூறியிருக்க மாட்டேன். ஆனால் அவர் அதை கூறினார். அங்கே பின்னால் உட்கார்ந்திருக்கும் ஹாட்டி என்னும் பெண்மணி. அன்றொரு நாளிலே, இந்த புதிய ஊழியமானது, இந்த காலை வரும் என்று நான் நம்புகிறேன். அதைக் குறித்து நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே நாங்கள் எல்லோரும் அங்கே உட்கார்ந்திருந்த போது... அந்நேரம் உட்கார்ந்திருந்தவர்களில் சுமார் எட்டு அல்லது பத்து பேர் இப்பொழுது இங்கே இருக்கின்றனர். ஆகவே பரிசுத்த ஆவியானவர் அந்த ஸ்திரீயை நோக்கி அவள் விரும்புகின்ற எதைக்கேட்டாலும் அது அவளுக்கு கொடுக்கப்படும் என்று கூறினபோது, அதை நான் தான் கூறியிருப்பேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? என்னால் அது முடியுமானால் சரியாக இப்பொழுதே நான் கூறுவேன். ஆனால் என்னால் அதைக் கூற முடியாது. நான் நடுங்கினேன், நான் மிகவும் பலவீனமாக இருந்தேன். அங்கே நின்று கொண்டிருக்கின்ற சகோதரன். பாங்க்ஸ் உட் என் பக்த்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வியர்வைத் துளிகள் என் கைகளெல்லாம் ஓடினது. நான் மிகவும் பலவீனம் அடைந்தவனாய் எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்றேன். அது என்னை மிகவுமாக பயத்திற்குள்ளாக்கியது. ஆனால் அந்த ஸ்திரீயோ யாருமே கேட்கக் கூடாத மகத்தான காரியங்களில் ஒன்றை அவள் கேட்டாள், பெற்றுக் கொண்டாள். பாருங்கள், அது தேவன் ஆகும். அது மனிதன் அல்ல. மனிதர் இக்காரியங்களை செய்ய முடியாது. இயேசு மரத்தைப் பார்த்து, “உன்னிலிருந்து எந்த மனிதனும் கனியை புசியாதிருப்பானாக'' என்றார். ஆகவே அந்த சீஷர்கள், அடுத்த நாளிலே... அப்பொழுது அது எவ்வளவு விரைவாக கிரியை செய்ய ஆரம்பித்தது. அடுத்த நாள் அது பட்டுப்போக ஆரம்பித்தது. ஆகவே அவர்கள், ''இந்த மரம் எத்தனை சீக்கிரமாய் பட்டுப்போயிற்று'' என்றனர். அவர், ''தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். நான் மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்..., (எனக்கு என்றல்ல, ஆனால் உங்களுக்கு) “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து, ''தள்ளுண்டு போ'' என்று சொல்லி தான் சொன்னபடியே நடக்கும் என்று விசுவாசித்தால், நீங்கள் கூறினது எதுவோ அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்'' என்று கூறினார். அது தேவன் உனக்குள் இருப்பதாகும். பாருங்கள்? தேவனைத் தவிர வேறு யார் ஒரு மலையை அசையச் செய்ய முடியும்? தேவனைத் தவிர வேறு யார் இக்காரியங்களை நிறைவேறச் செய்ய முடியும்? 16ஆதலால், நீங்கள் பாருங்கள், எந்த ஒரு தர்க்கத்திற்கும் இடமில்லை. தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கின்றார். அப்படியானால் நாம் ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டும். நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். ஸ்தாபன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, எப்படியாயினும் நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். நம்மால் இணங்காமற்போகாவிட்டாலும் பரவாயில்லை. ஒருவேளை, அந்த அப்போஸ்தலர்கள், அவர்கள் ஒத்துப்போக முடியாமல் இருந்தது. யார் பெரிய நபராக இருக்கப் போகிறாரென்றும் இன்னும் மற்றக் காரியங்களையும் அவர்கள் அறிந்து கொள்ள விரும்பினர். யோவான், மாற்கு மற்றும் பவுல் அங்கே இருந்தனர். அவர்களுக்குள்... பேதுருவிற்கும், பவுலிற்கும் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், அந்த அன்பின் பிணைப்பு, அதற்காக தான் நாம் இன்றைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். எல்லா மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் என்னவாயிருந்தாலும், நாமெல்லாரும் ஒரு கிறிஸ்தவ ஐக்கியமாக ஒன்றாக இருக்கின்றோம். இப்பொழுது ஆவியில் நிறைந்து தேவனோடு நெருங்கத்தக்கதாக நாம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். அது தான் காரியமாகும். 17இப்பொழுது நீங்கள் ஏசாயா 1ம் அதிகாரத்தை எடுத்து விட்டீர்களா? 14வது வசனத்திலிருந்து நாம் ஆரம்பிப்போம். கர்த்தருக்குச் சித்தமானால் 18வது வசனத்திலிருந்து என்னுடைய பொருளை நான் எடுக்கப் போகின்றேன். உங்கள் மாதப் பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது. அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளை சுமந்து இளைத்துப் போனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும் என் கண்களை உங்களை விட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் என்ன ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றி விட்டு, தீமை செய்தலை விட்டு ஓயுங்கள். நன்மை செய்யப் படியுங்கள்; நியாயத்தை தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும்... உறைந்த மழைப்போல் வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். நீங்கள் மனம் பொருந்திச் செவி கொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். ஆனால் மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. 18நீங்கள் அறிந்துள்ளவாறே, ஜனங்கள் ஒன்றாகக் கூடி செய்கின்ற சேர்ந்துரையாடல்களைக் குறித்து நிறைய நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதைக்குறித்து தான் தேவன் இங்கே பேசுகின்றார். ''தம்முடைய ஜனங்களோடு ஒரு சேர்ந்துரையாடல்.'' கடந்த சில தினங்களாக அதைத்தான் நாம் செய்து கொண்டிருந்தோம். ஆகவே தேசத்தைக் குறித்தும், இன்றைய தேசிய விவகாரங்கள் அனைத்தும் சேர்ந்துரையாடல்களின் பேரில் தான் சார்ந்துள்ளன. இங்கே சில காலங்களுக்கு முன்னர், பெரிய நால்வரின் சேர்ந்துரையாடல் குறித்து என்னால், மற்ற ஜனங்களால், சுலபமாக நினைவு கூற முடிகின்றது, பெரிய நால்வரின் சேர்ந்துரையாடல். சமாதானத்தை விரும்பும் உலகில், உலகத்தின் நான்கு பெரிய தலைவர்கள் ஒன்று கூடி ஒரு சேர்ந்துரையாடலை நடத்தினர். இந்த சேர்ந்துரையாடலில், சிறந்ததாக என்ன செய்ய முடியும் என்று அவர்கள் தீர்மானிக்க முயற்சி செய்தனர். ஆகவே பிறகு சமீபமாக ஜெனிவாவில் ஜெனிவா சேர்ந்துரையாடலை நடத்தினர். அமைதியை விரும்பும் ஜனங்கள் எல்லாரும் தாங்களாகவே ஒன்று கூடி உலக அமைதியைக் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடினர். அது 'ஜெனிவா மாநாடு' என்று அழைக்கப்பட்டது. நான் தவறாக எண்ணப்படவில்லையெனில் சில காலத்திற்கு முன்னர் பாரீஸ் மாநாடை அவர்கள் நடத்தினர். அவர்கள் எல்லோரும் பிரச்சனைகளைக் குறித்து விவாதித்து, அமைதியை நிலை நாட்ட பாரீஸில் ஒன்று கூடி முயற்சித்தனர். 19ஆகவே இப்பொழுது நம்முடைய அருமையான ஜனாதிபதி ட்வைட் ஐசன் ஹவர் சுதந்திர உலகில் பிரயாணம் மேற்கொண்டிருக்கின்றார். செய்தித்தாள்கள் அதைப்பற்றி முழுவதுமாக பிரசுரிக்கின்றன. திரு. ஐசன் ஹவர் உலகத்தின் சுதந்திர ஜனங்களோடு நடத்தின பேச்சு வார்த்தை, அவர் செய்கின்ற முயற்சிகள், சேர்ந்துரையாடல்களுக்கு மேல் சேர்ந்துரையாடல்கள் ஆகியவைக் குறித்து வானொலியும் கூறினது. ஆகவே அந்த... அநேக இடங்களில் அவர்கள் எப்படி அமெரிக்க தேசிய கீதத்தைப் பாடுகின்றனர் என்றும் அல்லது அவர் வருகையில் எப்படி அவர்கள் கொடியை ஏற்றுகின்றனர் என்றும் செய்தித்தாள்களில் கூறப்படுகின்றது. ஆகவே அநேகர் அவருக்கு வெகுமதிகள் மற்றும் பிறவற்றைக் கொடுத்தனர். அது அமைதியை விரும்பும் ஜனங்களேயாகும். நாம் இந்த தேசத்தில் இப்படிப்பட்ட கூட்டங்களை சுதந்திரமாக நம்மால் நடத்த இயலுகின்றது என்றால் அவர்கள் எடுக்கின்ற பிரயாசைகளே ஆகும். ஆகவே நாம் திரு. ஐசன் ஹவர் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம் என்று நான் நினைக்கின்றேன். அதன் எல்லா பாவங்கள் பிரச்சனைகளின் மத்தியில் அமெரிக்கா இருந்தாலும் உலகம் கொண்டுள்ள சிறந்த ஒன்றாக அது இருக்கின்றது. அதை நான் விசுவாசிக்கின்றேன். எப்பொழுதும் அதேவிதமாக இருக்க தேவன் இதற்கு உதவி செய்வாராக, ஏனென்றால் நாம் சில அருமையான கொள்கைகளை உடையவர்களாய் இருக்கின்றோம். இக்கொள்கைளைக் காத்துக் கொள்வதற்காக இந்த பழைய பூமியானது இரத்தத்தில் நனைவிக்கப்பட்டு முழுக்கப்பட்டுள்ளது. ஆகவே நான் நினைப்பதென்னவென்றால், வயது சென்ற, ஆரோக்கியம் அவ்வளவாக இல்லாத திரு. ஐசன் ஹவர் அவர்களுக்கு எல்லா நேரத்திலும் நாம் ஜெபிக்க வேண்டும் என்பதே. சமூக அந்த ஸ்தத்தில் உள்ள அந்த மனிதன், உரைகளை நிகழ்த்திக் கொண்டு தன்னால் இயன்றவறை முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். அரசியலில் அவரோடு நீங்கள் உடன்படாதிருப்பீர்கள் என்றாலும் இப்பொழுது அவருக்காக ஜெபியுங்கள். உங்களுடைய தேசம் தான் வெற்றி தோல்வி உறுதியற்ற நிலையில் பிரயாசைப்பட வேண்டிய சூழலில் உள்ளது. 20எதற்காக சேர்ந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன? இந்த சேர்ந்துரையாடல்களுக்கான காரணம் என்ன? அதற்கு ஒரு காரணம் இருந்தாக வேண்டும், அப்படியானால் இந்த சேர்ந்துரையாடல்களை அவர்கள் நடத்தவே மாட்டார்கள். அவர்கள் என்ன செய்யப் போகின்றனர் என்பதைக் குறித்த ஒரு நிச்சயமான தீர்மானத்திற்கு அவர்கள் வரவேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஒரு முடிவை, தீர்மானத்தை எடுப்பதற்காகத் தான் சேர்ந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. ஒரு இடத்தை, மற்றொரு இடத்தை, பல்வேறு சிந்தனைகள் உடைய மனிதர் இங்கேயோ அல்லது வேறெங்கோ அல்லது அங்கோ சிறிய காரியங்கள் எழும்புகையில், அப்பொழுது இவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி ஒரு சேர்ந்துரையாடலை நடத்தி, பிறகு தாங்கள் அதைக் குறித்து என்ன செய்வது என்ற ஒரு தீர்மானத்தை எடுக்கின்றனர். ஆகவே அதற்காகத் தான் அவைகள் நடத்தப்படுகின்றன. ஆகவே அந்தத் தீர்மானத்திற்கு பிறகு அல்லது சேர்ந்துரையாடல்கள் நடத்த முடிவு செய்யப்படுகையில், இந்த சேர்ந்துரையாடலை நடத்த ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆகவே நீங்கள் கவனிப்பீர்களானால், ஒரு அழகான ஸ்தலத்தையே அவர்கள் எப்பொழுதுமே தேர்ந்தெடுக்க முயற்சிப்பர். ஜெனிவா நகரத்திற்கு நான் சென்றிருக்கின்றேன், ஜெனிவா சேர்ந்துரையாடல் மற்றும் பாரீஸ், இன்னும் - இன்னும் சேர்ந்துரையாடல்கள் நடைபெற்ற பல்வேறு இடங்களுக்கு நான் சென்றிருக்கின்றேன். ஐக்கிய நாடுகள் கட்டிடத்திற்கு நான் சென்றிருக்கின்றேன். ஆகவே, ஓ, அது மிகவும் அழகான ஒன்று, விசேஷமாக ஜெனிவா. ஆகவே அங்கே அவர்கள்... நான் நம்புகிறேன் இந்த இப்படிப்பட்ட இடங்களை அவர்கள் தேர்வு செய்வதென்னவெனில், அந்த அழகான... அங்கே ஏதோ ஒன்று இருக்கின்றது, அதாவது, அது அமைதியான சூழலில், கவர்ச்சியானதாக இருக்கும் பட்சத்தில், அது மனித ஆவியில் ஒரு கிரியை நடப்பிப்பதைப் போன்று காணப்படுகிறது. அது உண்மை என்று நான் நம்புகிறேன். அநேக முறை, நான் ஒரு மலையில் ஏறி சூரிய அஸ்தமன காட்சியை நான் காண்கையில், அது என்னை சிலிர்க்க வைக்கும், என்னுடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போனது போல் காணப்படும். ஒரு இடம், இந்த சேர்ந்துரையாடல் நடத்தப்பட தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடம். ஆகவே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியதாயிருக்கின்றன. ஆகவே ஒரு சேர்ந்துரையாடலில் உள்ள, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு காரியம் என்னவெனில், ஒரு முக்கிய தேவை இருந்தாலொழிய ஒரு சேர்ந்துரையாடலை அவர்கள் வைப்பதில்லை. ஒரு - ஒரு கடினமான சூழலில் தான் சேர்ந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன. 21பெரிய நால்வர் சந்திப்பின் போது, அது ஒரு சேர்ந்துரையாடலாக இருந்தது. ஏனெனில் இரண்டாம் உலகயுத்தமானது ஏறக்குறைய கையை விட்டு நழுவுகின்ற நிலையில் இருந்தது. ஆகவே அவர்கள் ஒன்று கூடி சந்தித்து, தங்கள் வியூகங்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஏதாவதொன்றை அவர்கள் செய்ய வேண்டியதாய் இருந்தது. திரு. சர்ச்சில், ரூஸ்வோல்ட், இன்னும் மற்றவர்கள். தங்கள் யோசனைகளை ஒன்று சேர்த்து, எது சரி என்று கண்டறிதல், ஏனெனில் அது ஒரு நெருக்கடியான சூழலாக இருந்தது. சுதந்திர உலகமானது முழுவதுமாக வெடித்து சிதறும் ஒரு சூழலாக அது இருந்தது. ஆகவே இன்றைக்கு உலகத்தின் சர்வாதிகாரியாக ஹிட்லர் இருந்திருக்கக் கூடும், அப்படியானால் இந்த கூட்டத்தை நாம் இன்று வைத்திருக்க முடியாது. இதனால் தான் சேர்ந்துரையாடல்கள் குறிப்பிட்ட இடங்களில் நடத்தப்படுகின்றன, ஆகவே - ஆகவே அதன் காரணமாகத்தான் அதை அவர்கள் நடத்துகின்றனர். ஆகவே... ஒரு சேர்ந்துரையாடலை நடத்த நாம் நிர்பந்தப்படுத்தப்படுகின்றோம். அந்த விதமாகத்தான் அவர்கள் ஒன்று கூடுகின்றனர். ஆகவே அவைகள் மகத்தான சேர்ந்துரையாடல்களாக இருந்தன. என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு சமயம் இருக்குமானால், என்னுடைய சத்தம், காலத்தினூடாக நடந்த மற்ற மகத்தான சேர்ந்துரையாடல்கள், பார்வோனின் நாட்களில் நடந்தவைபோன்ற நான் படித்துள்ளவைகளை, கூறிக்கொண்டே இருக்கும். ஆனால், உலகத்தின் அமைப்பைக் குறித்த மகத்தான சேர்ந்துரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன. 22ஆகவே, அப்படியானால் தேவனும் சில மகத்தான சேர்ந்துரையாடல்களை நடத்தியிருக்கின்றார். தேவனுடைய மகத்தான நடைமுறையாட்சியில் ஒரு சேர்ந்துரையாடல் நடத்தப்பட வேண்டிய சமயம் வந்தது. ஆகவே முதலாவதாக நான் கூறுவேனானால், இந்த பூமிக்காக ஏதேன் தோட்டத்தில் சேர்ந்துரையாடல் நடத்தப்பட்டது. தேவனுடைய தூதர்கள் அழுது கொண்டே பரம வீட்டிற்கு வந்து, “உம்முடைய பிள்ளை விழுந்து போனான். அவன் பாவம் செய்து உம்முடைய கட்டளைகளை மீறினான்'' என்று கூறினார்கள். ஏதாவது ஒன்று செய்யப்பட வேண்டிதாய் இருந்தது. தேவனுடைய சிருஷ்டியானது அவருடைய கிருபையிலிருந்து விழுந்து, தன்னுடைய சிருஷ்டிகராகிய தேவனுடைய பிரசன்னத்திலிருந்து நித்திய பிரிவினை அடைய வேண்டியதாய் இருந்தது. ''நீ அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்'' என்று கூறியிருந்த பரலோகத்தின் ராஜாவிற்கு அது நெருக்கடியான ஒரு சூழலாய் இருந்தது. தம்முடைய குமாரனின் மேல் நம்பிக்கை வைத்திருந்தார், அவருடைய குமாரனோ அவருடைய கட்டளையை மீறினான். ஏதாவது செய்யப்பட வேண்டியதாய் இருந்தது. அது அவருடைய சிருஷ்டிப்பாய் இருந்தது. தம்முடைய சொந்த கைவேலையாக அது இருந்தது. அது அவருடைய இருதயத்தின் நேசமாக, கண்ணின் கருமணியாக இருந்தது. ஏதோ ஒன்று செய்தேயாக வேண்டும். ஆகவே ஒரு சேர்ந்துரையாடல் நடத்தப்பட வேண்டியதாய் இருந்தது. 23ஏதேனில் தேவன் ஒரு குறிப்பிட்ட மரத்தை தேர்ந்தெடுத்தார். ஆகவே பிறகு அந்த இரத்தம் தோய்ந்த கச்சைகளை அதற்குள் புதர்களின் பின்னால் எறிந்தார். அவர் ஆதாமையும் ஏவாளையும் அங்கே அழைத்து ஒரு சேர்ந்துரையாடலை நடத்தினார், தம்முடைய பிள்ளைகள் செய்திருந்த இந்த மிக மோசமான காரியத்தை விவரித்து அதற்கான நிவாரணத்தை அளித்தார். ஆகவே அங்கே ஒரு தீர்மானம் செய்யப்பட்டது. எப்பொழுதுமே ஒரு சேர்ந்துரையாடலில் முடிவு ஒன்று இருக்கும். ஆகவே தேவன் ஒரு தீர்மானத்தை எடுத்தார், ஏனென்றால் ஏவாள். அவளை சாட்சி கூண்டில் நிறுத்தினார், ஏனெனில் உலகத்தினின்று அவள் ஜீவனை எடுத்துப் போட்டதால், உலகத்திற்கு அவள் ஜீவனைக் கொண்டு வர வேண்டும். பிறகு ஆதாம், பிறகு சர்ப்பம்; ஆதாம் பூமியிலிருந்த எல்லா இனத்திற்கும் அதிபதியாயிருந்தான், அவையெல்லாம் ஆதாமோடு கூட விழுந்துபோயின. 24பிறகு தன்னுடைய தீர்மானத்தில் பலவீனமாக இருந்த ஒரு ஓடிப்போகின்ற தீர்க்கதரிசி, தன்னுடைய பணி மிக பெரியதான ஒன்று என்று எண்ணிய ஒரு தீர்க்கதரிசியைக் குறித்தது. மற்றுமொரு சேர்ந்துரையாடல் என்னுடைய நினைவில் உள்ளது. ஆகவே அவன் ஓடிப்போய் ஒரு மனைவியைக் கொண்டு, பிறகு வனாந்திரத்தில் நாற்பது ஆண்டுகள் ஜீவித்தான். ஒரு தீர்க்கதரிசி, தேவனால் அபிஷேகிக்கப்பட்டு, ஒரு மகத்தான கட்டளையை உடையவனாய், உலகத்தில் தீர்க்கதரிசியாக பிறந்த ஒருவன். ஆனால் மோசே தான் செய்ய வேண்டிவகை பற்றிய தேவனுடைய குறிப்புகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக அவன் ஒரு மனிதனைக் கொன்றான். ஆகவே தன் சொந்த கரங்களாலே செய்த தவறினால் அவனுக்கு அச்சுறுத்தல் உண்டானது. ஆகவே அவன் அந்த அச்சுறுத்தலினால், பார்வோனுக்கு பயந்து வனாந்திரத்திற்கு ஓடிச் சென்று அங்கே நாற்பது வருடம் ஜீவித்தான். எகிப்தின் அடிமைகளுடைய வேலை மிக அதிகமாக இருந்தது. அவர்களுடைய முதுகுகள் புண்ணாக இருந்தன. அவர்களுடைய இருதயங்கள் மிகவுமாக நொறுங்கிப்போயின, அவர்களுடைய கூக்குரல் தேவனை எட்டியபோது, அவர் ஒரு சேர்ந்துரையாடலிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். ஒரு சேர்ந்துரையாடலை நிர்ப்பந்திக்க ஒரு வழி இருக்கின்றது. ஒரு பலப்பரீட்சை வருகையில் நீங்கள் அதை உங்கள் ஜீவியத்தில் செய்யலாம். 25ஜனங்களுடைய பாரங்களும், கூக்குரல்களும் ஒரு சேர்ந்துரையாடலை நடத்தும்படியாக தேவனை நிர்பந்தப்படுத்தும் அளவிற்கு மிக அதிகமாக இருந்தது. தேவன் ஒரு தீர்மானத்தைச் செய்தாரானால், அது அப்படியே அவ்வழியாகத்தான் இருந்தாக வேண்டும். ஆதலால் அந்த ஜனங்களை மீட்கும் பொருட்டு உலகத் தோற்றத்திற்கு முன்பே ஒரு மனிதனை ஆட்டுக்குட்டியான வருடைய ஜீவ புஸ்தகத்தில் அவர் குறித்திருந்தார். எல்லா காரியங்களும் தேவனால் முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தன. அவருடைய ஊழியக்காரனாகிய அந்த மனிதனின் பெயர் மோசே. ஆதலால், உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே, ஜனங்களை விடுவிக்கும் படியாக மோசே தெரிந்து கொள்ளப்பட்டிருந்தான். ஆனால் மோசே தோல்வியுற்றான். இது நமக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்தாக வேண்டும். தேவனுடைய பார்வையில் தோல்வியுறும் நிலையில் உள்ள நமக்கு இன்னுமாக நம்பிக்கை இருக்கின்றது. [சகோ. பிரான்ஹாம் தன் கரங்களை சேர்த்து இருமுறை கொட்டுகின்றார். ஆசி] ஒரு சபையாக அவருடைய பார்வையில் தோல்வியுறுகிறோம். ஜனங்களாக அவருடைய பார்வையில் தோல்வியுறுகிறோம். ஆனால் நாம் சேர்ந்துரையாடலை வைத்து, அவருடன் நாம் பேசுவோம், அவர் நமக்கு என்ன கூறுகின்றார் என்பதை நாம் பார்ப்போம், எந்த ஒரு தீர்மானத்திற்கு நாம் வருகிறோம் என்பதை கவனிப்போம். 26ஆகவே தேவனுடைய மனிதன் தோல்வியடைந்தான், ஆதலால் தேவன் ஒரு சேர்ந்துரையாடலை வைக்க வேண்டியதாய் இருந்தது. வேறுயாரையும் அவரால் உபயோகப்படுத்த இயலவில்லை. அவர் மோசேயை தெரிந்தெடுத்திருந்தார். ஆகவே அவன் சீனாயின் அருகாமையில் இருந்த வனாந்திரத்தில், எங்கேயோ இருந்த பாலைவனத்தின் பின்புறத்திற்கு அவன் செல்கின்றான். அவர் ஒரு மலையின் உச்சியை, ஒரு முட்புதரை, ஒரு குறிப்பிட்ட இடத்தை தெரிந்தெடுத்தார். ''நான் இங்கே மேலே மோசேயை கொண்டு வருவேன். அவன் தன்னுடைய ஆடுகளை, மனைவியை, பிள்ளைகளை, எல்லா ஜனங்களையும் விட்டு இங்கு வரத்தக்கதாக இது ஒரு அருமையான இடமாகும். அவனுடன் ஒரு சேர்ந்துரையாடலை நான் நடத்துவேன்'' என்று அவர் நினைத்தார். அங்கே அவர் அந்த தீர்க்கதரிசியிடம் பேசின போது, கடைசியாக அந்த பொருளிற்கு அவர்கள் வந்தனர். ''மோசே என்னுடைய ஜனங்களின் கூக்குரலை நான் கேட்டேன். அதற்காகத்தான் நான் உன்னை இங்கே அழைத்தேன். அங்கே கீழே இருக்கின்ற என்னுடைய ஜனங்களின் கூக்குரலை நான் கேட்டேன். நான் ஈடேற்ற வேண்டிய, நான் செய்திருந்த வாக்குத்தத்தத்தை நான் நினைவில் கொண்டுள்ளேன். இப்பொழுது நான் உன்னை அங்கே அனுப்பப் போகின்றேன்.“ 27மோசே தேவனிடமிருந்து பின்வாங்க முயற்சித்தான். அவன் ஒரு மனிதனாய் இருந்தான். அவன், ''நான் எம்மாத்திரம்? என்னால் - என்னால் சரியாக பேச முடியாதே?'' என்றான். ஆகவே அப்பொழுது இந்த - இந்த சேர்ந்துரையாடல் தேவன் மோசேயிடம் “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?மனுஷனை பேசச் செய்தவர் யார்? ஊமையை உண்டாக்கினவர் யார்? செவிடனை உண்டாக்கினவர் யார்?'' என்றார். ஆனால் மோசே இன்னுமாக முறையிட்டுக் கொண்டிருந்தான். தேவனுடைய மகிமையை அவன் காண விரும்பினான். ஆகவே அவர், “மோசே, நான் யார் என்பதை நீ அறிய விரும்பினால், அற்புதங்களை நடப்பிக்கின்ற தேவன் நானே. உன் கோலை தரையிலே போடு'' என்றார். அது சர்ப்பமாக மாறிற்று. பிறகு அவர், ”உன் கையை மடியிலே போடு'' என்றார். அவன் வெளியே எடுத்தபோது அது குஷ்டரோகமாக இருந்தது. அவன் திரும்பவுமாக தன் கையை போட்டு வெளியே எடுத்தபோது அது சொஸ்தமாகியிருந்தது. அவர், ''நான் யாரென்று இப்பொழுது தெரிகின்றதா மோசே? அற்புதங்களை செய்கின்ற தேவன் நானே. வியாதியஸ்தர்களையும் பிணியாளிகளையும் சுகமாக்குகின்ற தேவன் நானே. நான் தான் யெகோவா தேவன்'' என்றார். மோசே, ''உம்முடைய மகிமையை நான் காண்கிறேன். இந்த சேர்ந்துரையாடல் முடிவுறும் முன்னர் இன்னும் ஒரேயொரு காரியத்தை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். என்னை அனுப்பினது யார் என்று பார்வோனிடம் நான் என்ன கூற வேண்டும்?'' என்றான். அதற்கு அவர், ''அவனிடம், 'இருக்கிறேன்' என்பவர் உன்னை அனுப்பினார் என்று சொல்“ என்றார். ”இருந்தவர் அல்ல,'' அல்லது “இருக்கப் போகிறவர்,'' அல்ல. ஆனால் என்றென்றுமாக இருக்கிறவர். ”நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.'' ''இருக்கிறேன்,'' இப்பொழுது இருக்கிறேன் என்பது நிகழ்காலமாகும். வருங்காலம், நிகழ்காலம், இறந்தகாலம் எல்லாம் சேர்ந்தது. இருக்கிறேன் ''இருக்கிறேன் என்பவர் உன்னை அனுப்பினார்.'' 28மோசே தன்னுடைய கட்டளைகளை பெற்றுக் கொண்டு எகிப்திற்கு சென்றான். பிள்ளைகளை வெளியே கொண்டு வரும்போது, ஒரு சூழ்நிலை வந்தது, அப்பொழுது அவர்கள் ஒரு இக்கட்டான நிலையில் சிக்க வைக்கப்பட்டனர். ஏனைய உலகத்தினின்று வேறு பிரிக்கப்பட்ட, வெளியே அழைக்கப்பட்ட ஒரு ஜனம்! எகிப்தில் இருந்த வரைக்கும் இஸ்ரவேல் தேவனுடைய ஜனங்களாய் இருந்தனர். எகிப்தை விட்டு வெளியே வந்தபோது அவர்கள் தேவனுடைய சபையாய் இருந்தனர். ''வெளியே அழைக்கப்பட்ட'' அல்லது, ''சபை'' என்கின்ற வார்த்தையின் அர்த்தம், “வெளியே அழைக்கப்படுதல்'' என்பதே. ஆதலால் மற்ற உலகத்தாரிடமிருந்து அவர்கள் வெளியே அழைக்கப்பட்டனர், ஆகவே அவர்கள் தான் சபை. அதுதான் இந்த காலை வேளையிலும், உலகத்தாரிடமிருந்து வெளியே அழைக்கப்பட்டவர்கள், எந்த ஸ்தாபன குறியீட்டை அவர்கள் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் வெளியே அழைக்கப்பட்டார்களானால், அவர்கள் தேவனுக்கென்று வேறு பிரிக்கப்பட்டவர்களே. ஆகவே அவர்கள் அவருடைய மகத்தான சபையின் அங்கத்தினர் ஆவர். ஆதலால் இந்த ஜனங்கள், ஆட்டுக் குட்டியின் இரத்தத்தை செலுத்தி, அந்த இரத்தத்தை தங்கள் வாசலின் நிலைக் கால்களின் மேல் தெளித்து தங்களை வேறு பிரித்துக் கொண்டனர். அது ஈசோப்பினால் பூசப்பட்டது. 29கவனியுங்கள், இங்கே ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது மிகவும் கவர்ந்திழுக்கின்ற ஒன்றாகும். ஈசோப்பை எடுத்து அதை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் தோய்த்து கதவுகளின் மேல் அதை பூச வேண்டும் என்று மோசே அவர்களுக்கு கட்டளையிட்டான். அந்த இரத்தம், கிறிஸ்துவின் இரத்தத்திற்கு பிரதிநிதித்துவமாய் இருந்தது. அந்த ஈசோப்பானது சாதாரண நாணலாக (Weeds) அவைகளைக் கைநிறைய எடுக்கும் அளவிற்கு இருந்தது. நீங்கள் அவைகளை எங்கும் காணலாம். இரத்தத்தை எளிதில் பூசலாம் என்பதையே அது காண்பிக்கின்றது. அந்த நாணல்கள் விசுவாசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது, தேவன் பேரில் கொண்ட விசுவாசம். வேறெங்கும் நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. தேவனுடைய விசுவாசத்தை மாத்திரம் எடுத்து இரத்தத்தை உன் இருதயத்தில் பூசு. ''உலகத்தின் காரியங்களிலிருந்து நான் வேறு பிரிக்கப்பட்டுள்ளேன், ஏனெனில், விசுவாசத்தினால் இக்காலையில் என் காரியத்தின் மேல் இரத்தத்தை பூசுகிறேன். நான் சுகமாவேன், ஏனெனில் என் இருதயத்தின் நிலைக்கால்களின் மேல் இரத்தத்தை பூசுகிறேன். மறுபடியுமாக சந்தேகம் என்னைத் தொட நான் அனுமதிக்கமாட்டேன், ஏனென்றால் என்னுடைய கதவின் மேல் இயேசுவின் இரத்தத்தை விசுவாசத்தினால் (என்னுடைய ஈசோப்பு) பூசி என்னை பாதுகாத்துக் கொள்வேன். ஆகவே எந்த விரோதியும் உள்ளே வரமாட்டான். தேவனுடைய வார்த்தையை நான் இனிமேல் ஒருபோதும் அவிசுவாசிக்க மாட்டேன்'' என்று கூறு. அது எவ்வளவு எளிமையாய் இருக்கின்றது. 30வேறு பிரிக்கப்பட்ட பிறகு, வெளியே அழைக்கப்பட்ட ஜனங்களாய் அவர்கள் தங்கள் பிரயாணத்தில் இருந்தனர். அவர்கள் சிவந்த சமுத்திரத்திற்கு வந்தனர். ஆகவே அவர்கள் ஒரு நிறுத்தத்தை மேற்கொள்ளும்படி ஆயிற்று. அவர்களால் கடந்து செல்ல முடியவில்லை. அந்த மகத்தான தளபதி யோசுவா தன்னுடைய கரத்தை உயர்த்தி எக்காளத்தை ஊதி ''நில்லுங்கள் அணிவகுப்பதை நிறுத்துங்கள் நம் முன்னே ஒரு தடை இருக்கின்றது. நம்மை சுற்றிலும் மலைகள் இருக்கின்றன. நாம் ஒரு பள்ளத்தாக்கில் இருக்கின்றோம், நாம் நிறுத்தியாக வேண்டும்'' என்றான். அந்த சபையானது நிற்குமானால், அப்பொழுது தான் சாத்தான் அதை கட்டுக்குள் எடுத்துக் கொள்கிறான். சீயோனை நோக்கி சீராக, துடிப்பாக அணி வகுத்துச் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஜீவனுள்ள தேவனுடைய சபையானது நின்றது என்ற குற்ற உணர்வு கொள்ளத்தக்கதாக செய்து விடாதே. ஆதலால் அவர்கள் நின்றனர், “இங்கே என்ன ஆயிற்று?'' என்று கேட்டனர். ஆகவே அவர்கள் நின்று தங்கள் கூடாரங்களை அமைத்து சிறிது இளைப்பாற ஆரம்பிக்கையில் சக்கரங்களின் சத்தத்தை அவர்கள் கேட்டனர். ஆகவே அவர்கள் தப்பிச் செல்வதற்காக அவர்களுக்கு இருந்த ஒரே வழி பின்னாக இருந்தது தான். அவர்கள் அங்கு நின்றுவிட்டதால், சத்துரு அவர்கள் பின்புறமிருந்து வந்தான். 31அவர்கள் எவ்விதம் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பதை இராணுவ வியூகத்தை அறிந்துள்ள இராணுவ வீரர்களாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கே ஒருவேளை இரண்டு அல்லது மூன்று மைல்களுக்கு குறுக்கில் அவர்கள் முன்னே சிவந்த சமுத்திரம் இருந்தது. இங்கே உயர்ந்த மலைகள் இருந்தன; அதில் ஏற அவர்களால் கூடாதிருந்தது. அப்படி ஏறுவார்களானால் அங்கே சிதறடிக்கப்பட்ட ஆடுகளைப்போல, ஒவ்வொரு வில் வீரனுக்கும் எளிதான ஒரு இலக்காக இருந்திருப்பர். ஆகவே அவர்கள் நின்றுவிட்டதால் அவர்கள் பின்புறத்திலிருந்து பகைஞன் வந்தான். நண்பர்களே, அது எதைக் காண்பிக்கிறது என்றால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிரதேசத்தை நோக்கி இன்று நடந்து கொண்டிருக்கும் பிரயாணத்தில், ஒன்று அல்லது இரண்டுமுறை தாண்டுகின்ற அளவிற்கு நம் பின்னால் எதிரி இருக்கின்றான். இந்த எழுப்புதலோடு நம்மால் நின்றுவிட முடியாது. நிற்கும்படி கூறுகின்ற சமயமாக இது இருக்கக் கூடாது. சென்று கொண்டேயிருங்கள். முன்னேறிக் கொண்டேயிரு. கடந்த இரவு, அதற்கு முந்தின இரவிலிருந்து பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னத்தைக் கொண்டவர்களாய் நீங்கள் இருக்கின்றீர்கள், இப்பொழுது அதற்குள்ளாக தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள். நிறுத்தும் படியான சத்தத்தை முழங்காதே, ஏனெனில் எதிரியானவன் உன் பின்னால் அருகில் இருக்கின்றான். 32ஆகவே நிறுத்தும் படியான அறிவிப்பு செய்யப்பட்டபோது, பார்வோனும் அவனுடைய சேனையும் தூரத்தில் வருவது தெரிந்தது; இரதங்களுடைய சக்கரங்களின் இரைச்சலும், புழுதி கிளம்புவதும், யுத்த வீரர்களுடைய சத்தங்களும் கேட்டன. எப்படிப்பட்ட ஒரு நேரமாக இருந்தது! அது துயரால் கொதித்தெழுந்து கட்டு மீறுகின்ற நிலைக்கு ஜனங்களைத் தள்ளினது. ஆனால், கலக்கமடையத் தேவையே இல்லை என்பதை அறிந்திருந்த ஒரு மனிதன் அவர்களுக்குள் இருந்தான். அதற்கு முன்பாக சேர்ந்துரையாடல்களை அவன் கொண்டிருந்தவனாக இருந்தான். தேவனைப் பற்றிக் கொள்ளத்தக்கதாக என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே நாம் கூறப்போனால், அங்கே மலையின் மேலே ஒரு குறிப்பிட்ட கன்மலையில், மோசே மற்ற இஸ்ரவேல் புத்திரரிடமிருந்து தன்னை மறைத்துக் கொண்டு ஒரு சேர்ந்துரையாடலை அவன் நடத்தினான், ''கர்த்தாவே, இந்த இடம் வரைக்கும் நான் வந்துள்ளேன், ஆனால் ஒரு தடை எங்களை நிறுத்தியுள்ளது. நாங்கள் நிறுத்தும் படியாக ஆயிற்று என்றான்.'' 33இங்கே சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நம்முடைய சகோதரனைப் போல. நீர் ஒருவேளை புற்று நோயால், அல்லது இருதயக் கோளாறினால் அல்லது சீக்கிரத்தில் மரித்துப் போகின்ற நிலையில் உள்ள ஏதோ ஒன்றை நீர் கொண்டிருப்பீர். விரோதி உன்னை தடுத்து நிறுத்தியுள்ளான். உம்மை ஸ்தம்பித்துப் போகச் செய்துள்ளான். ஒருவேளை விரோதி உங்களை முந்திச் செல்வதற்கு முன்னால் நீங்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம். ஒருக்கால் உங்கள் ஜீவியத்தில் ஏதோ ஒரு காரியம் நீங்கள் நின்று போகக் காரணமாக இருக்கலாம். அது என்னவாயிருந்தாலும் சரி, ஒரு சேர்ந்துரையாடலுக்கான சிலாக்கியத்தை நீங்கள் இன்னுமாக கொண்டிருக்கின்றீர்கள். அதை அவரோடு கலந்து பேசுவோமாக. அதைக் குறித்து ஏதாவதொன்றை செய்வோமாக. விரோதி எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் சரி, நம்முடைய தேவனுடைய பார்வையில் அவன் ஒருபோதும் மகத்தானவன் அல்ல. நமக்கு ஒரு சேர்ந்துரையாடல் அவசியமாக இருக்கின்றது. ஆதலால், நாம் கூறுவோமானால் மோசே மேலே ஏறி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பின்புறமாக சென்றான், தேவனுடன் ஒரு சேர்ந்துரையாடலை நடத்தினான். என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் அறியாதிருந்தான். ஒருவேளை என்ன செய்வதென்று உங்களுக்கு தெரியாதிருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு பாவியாக, அதிக பாவங்களை நீங்கள் செய்திருக்கலாம். ஒருகால் புகைக்க முடியாத அளவிற்கு நீங்கள் புகை பிடிப்பவராய், அதை விட முடியாதவராய் நீங்கள் இருக்கலாம். ஒருகால் நீங்கள் குடிக்க முடியாத அளவிற்கு நீங்கள் குடிகாரராய், அதை விட முடியாதவராய் நீங்கள் இருக்கலாம். ஒருகால் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு ஸ்திரீயையும் தவறாக பார்க்கின்ற அளவிற்கு நீங்கள் மிகவும் பாவமும் இச்சையையும் முழுவதும் உடையவராக இருக்கும் நிலைக்கு நீங்கள் வந்திருக்கலாம். அல்லது ஒருகால் உங்கள் இயற்கையான காரியங்களையும் கூட நீங்கள் தாறுமாறாக்கியிருக்கலாம். ஒருகால் நீங்கள் முடிவான ஒரு இடத்திற்கு நீங்கள் வந்திருக்கலாம். நீங்கள் எங்கேயிருந்தாலும் அது எனக்கு ஒரு பொருட்டல்ல, ஒரு சேர்ந்துரையாடலில் உங்களிடம் வந்து அதைக்குறித்து உங்களிடம் கலந்து பேச தேவன் தயாராக இருக்கின்றார். 34ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டை உடைத்தவராக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் உங்கள் கணவரை விட்டு பிரிந்து வந்திருக்கலாம் அல்லது உங்கள் மனைவியை விட்டு பிரிந்து வந்திருக்கலாம். ஒருவேளை உங்கள் பிள்ளைகளிடமிருந்து நீங்கள் ஓடிப்போய் இருக்கலாம். விரோதியானவன் உங்களை இந்த ஜீவியத்தில் அநேக காரியங்களிற்குள்ளாக உங்களை சிக்க வைத்திருக்கலாம், ஆனால் என் சகோதரனே, சகோதரியே, நினைவில் கொள், தேவனுடன் ஒரு சேர்ந்துரையாடலை கொள்ளத்தக்கதாக இன்னுமாக உனக்கு உரிமை உள்ளது. ஆம், ஐயா. அதை அவரிடம் கலந்து பேசு. ''அவர் ஆபத்து காலத்தில் மிகவும் அனுகூலமான துணையுமானவர்.'' அப்பொழுது மோசே ஒரு சேர்ந்துரையாடலை நடத்தினான் என்பதை நாம் பார்க்கின்றோம். ஒருவேளை சேர்ந்துரையாடல் இவ்விதமாக இருந்திருக்கலாம், “ஓ இஸ்ரவேலின் மகத்தான வழி நடத்துபவரே, உம்முடைய கட்டளையின்படியே எல்லாவற்றையும் நான் செய்துள்ளேன். நான் செய்தேன். நீர் கூறின விதமாகவே நான் செய்தேன். வழி நடத்தினேன். ஜனங்களை நான் இரத்தத்தினால் மூடியுள்ளேன். வானத்திலிருந்து வாதைகளை நான் கொண்டு வந்தேன். நீர் என்னிடம் கூறின விதமாகவே நான் எல்லாவற்றையும் செய்தேன். ஆனால் நாங்கள் இங்கே கண்ணியில் அகப்பட்டுள்ளோமே. நான் என்ன செய்ய வேண்டும் கர்த்தாவே? உம்மிடம் இந்த சேர்ந்துரையாடலை நான் நடத்த வேண்டும்.'' ஆகவே ஒருவேளை கன்மலையின் உச்சியில் நின்று கொண்டு அல்லது அதற்கு அருகாமையில் நின்று கொண்டு, அல்லது கன்மலையின் வெடிப்பில், தெரிந்து கொள்ளப்பட்ட ஸ்தலத்தில், இந்த முக்கியமான கட்டிடத்தில் மோசே அங்கே ஜெபித்துக் கொண்டிருந்தான். ஏதாவதொன்று செய்தாக வேண்டும். அல்லவென்றால் இரதங்களின் சக்கரங்களின் அடியில் அவர்கள் நசுக்கப்பட்டுப் போவர். ஒவ்வொரு சிறிய எபிரேய பிள்ளைகளும் தள்ளுண்டு போகப்படுவர். ஒவ்வொரு சிறிய குழந்தைகளின் தலைகள் பாறையின் மீது மோதி நொறுக்கப்படும். அவைகளின் தாய்கள் அங்கே மானபங்கப்படுத்தப்பட்டு வெட்டப்படுவர். அவைகளுடைய - அவைகளுடைய தகப்பன்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பர். அது ஒரு நெருக்கமான சமயமாயிருந்தது. 35அதே விதமான நெருக்கமான சூழ்நிலை இருக்கலாம், ஒரு கால் அந்த விதமாக இல்லாமலிருக்கலாம், ஒருகால் புற்றுநோய் உங்களை பீடித்திருக்கலாம். வேறு ஏதோ ஒரு வியாதியாக இருக்கலாம். ஒருவேளை பாவம் உங்களை பீடித்திருக்கலாம். அது உங்களை தேவனிடமிருந்து வேறு பிரித்து, சரியாக பிசாசின் நரகத்தை நோக்கி உங்களை நசுக்கித் தள்ளலாம். சீக்கிரமாக ஒரு சேர்ந்துரையாடலை நடத்துங்கள். ஆகவே இந்த சேர்ந்துரையாடல் நடத்தப்பட்டபோது, தேவன் மோசேயின் அருகில் பாறையின் மேல் நின்றார். அவர், ''மோசே, கீழே பாளையத்திற்கு செல். நீ எங்கிருந்து ஆரம்பித்தாயோ அந்த இடத்திற்கு திரும்பிச் செல். நான் தேவன். கீழே சென்று புறப்பட்டு போங்கள் என்று ஜனங்களிடம் கூறு. வழியை உண்டாக்க வேண்டிய சமயம் வரும்போது நான் வழியை உண்டாக்குவேன். நான் வழி - உண்டாக்குகின்ற தேவன்'' என்று கூறினார். சேர்ந்துரையாடல் நிறைவுற்று, புறப்பட்டு போகத்தக்கதான கட்டளையுடன் தேவனுடைய சமுகத்திலிருந்து கீழே அனுப்பப்பட்ட மோசே, நடந்து சென்று “இஸ்ரவேலே, பயப்படாதே. நீங்கள் நின்று கொண்டு இன்றைக்கு நம்முடைய தேவனுடைய வல்லமையை பாருங்கள். சமுத்திரத்தை நோக்கிச் செல்லுங்கள். கட்டளையை விட்டு விலகாதிருங்கள். அந்த கட்டளை என்னவென்றால், 'புறப்பட்டு போங்கள்!' என்பதே. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் நமக்கு சொந்தமானது. இந்த சத்துரு நம்முடைய வழியில் நின்று நம்மை தடுத்தி நிறுத்தியிருக்கின்றான். ஆனால் தேவன், 'புறப்பட்டு போங்கள்!' என்று கூறியுள்ளார். சென்று கொண்டேயிருங்கள்.” என்று கூறினான். 36இன்றைக்கு சபைக்கும் அதைப்போன்ற ஒன்றுதான் இருக்கின்றது. தேவன் உன்னை அழைத்து, உனக்கு வரத்தின் மேல் வரமும், வல்லமைக்கு மேல் வல்லமையும், கிருபைக்கு மேல் கிருபையும் அளிக்க விரும்புகின்றார். ஆனால் நீயோ உன்னையே ஸ்தாபித்துக் கொள்கிறாய். பிறகு, “என்னால் இன்னுமாக செல்ல முடியாது. ஏனெனில் சபை என்னை அனுமதிக்காது'' என்பாய். பாருங்கள்? தேவனிடத்தில் நின்றுபோகின்ற ஒரு இடம் இல்லவே இல்லை, ஸ்தாபனத்திற்கு இடமே இல்லை. எந்த ஒரு குறிப்பிட்ட நியதிக்கும் இடமே இல்லை. காரியம் என்னவெனில் புறப்பட்டுப் போக வேண்டியதே. தேவனுடைய வார்த்தையை உரைத்து முன்னே செல்வதே ஆகும். சென்று கொண்டேயிருங்கள். சென்று கொண்டே இருங்கள். அது சரி, அது சரி என்று தேவன் கூறுகின்றார். உன்னுடைய கட்டளையை நீ பெற்றுக் கொண்டிருக்கிறாய். அவர்கள், ''நல்லது, நான் என் சபையிடம் சென்றேன், அவர்கள் என்னிடம் அந்த கூடாரத்திற்கு நான் சென்றிருக்கக் கூடாது என்று கூறினார்கள். ஒருவேளை இப்பொழுது நான் பரிசுத்த ஆவியை பெற்றிருக்க வேண்டுமா அல்லது இல்லையா என்று இப்பொழுது நான் குழப்பத்தில் இருக்கின்றேன்.“ என்று கூறினால், வாக்குத்தத்தம் உன்னுடையது. ''அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.'' என்ன? தேவனுடைய வார்த்தையை பேசு. தேவன் அவ்வாறு கூறியுள்ளார். புறப்பட்டு போங்கள். சத்துரு சிதறிப் போவதைப் பாருங்கள். செங்கடல் பிளப்பதைப் பாருங்கள். ஒரு சேர்ந்துரையாடலை நடத்துங்கள். புறப்பட்டு போங்கள். நிச்சயமாக அது இரண்டாக பிளக்கும். 37தப்பித்துக் கொள்வதற்கான வழி தேவனேயாகும். நேராக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிரதேசத்திற்கு அவர் ஒரு பாதையை உண்டாக்கினார். அவருடைய பாதையில் எது வந்தாலும் அந்தப் பாதையிலிருந்து அதை அவர் அப்புறப்படுத்தினார். உன்னுடைய பாதையில் ஏதாவதொன்று குறுக்கிடுமானால், அப்பொழுது தேவனுடன் ஒரு சேர்ந்துரையாடலை நடத்து. அதை அவருடன் விவாதித்து விடு, பிறகு முன்னே சென்று கொண்டேயிரு. அதைத்தான் தேவன் இங்கே ஏசாயாவிடம் கூறுகின்றார். ''ஓ, நீங்கள் மிகவும் பாவமுள்ளவர்களாக இருக்கின்றீர்கள். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருக்கிறன. நாம் சேர்ந்து வழக்காடும்படி (reason) நீங்கள் வரலாம் அல்லவா? நீங்கள் வந்து அதை என்னுடன் விவாதிக்கலாமே? என் கிருபை போதும்.'' அந்த சிவந்த சமுத்திர சேர்ந்துரையாடல், அநேக ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு சேர்ந்துரையாடலும் நடைபெற்றது, அதைக் குறித்து சிறிது பேச விரும்புகிறேன். கிறிஸ்துமஸ் என்பது இருக்கக் கூடுமோ, அல்லது இல்லையோ, இப்பொழுது நாம் அணுகிக் கொண்டிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைப் பருவமாக அது இருந்தது. ஆனால் இந்த மீட்பின் திட்டமானது எப்படியாயிருக்கும் என்பதைக் குறித்த ஒரு சேர்ந்துரையாடல் அங்கே பரலோகத்தில் நடந்தது. ஆகவே தாம் ஒரு மனிதனாகி, கீழே இறங்கி வந்து, தாமே தம்முடைய சொந்த சாபத்தை தம் மேலே சுமத்திக் கொள்ள வேண்டும் என்று தேவன் முடிவு செய்தார். ஒரு தூதனை அனுப்புவதென்பது அவருடைய பார்வைக்கு சரியான ஒன்றாக காணப்படவில்லை. வேறு யாரோ ஒரு நபரை அனுப்புவதென்கிற காரியமும் அவருக்கு சரியாகப்படவில்லை. தாம் ஒரு பையனை மகனை (Boy) கொண்டிருப்பரானால் சிறுவனை அனுப்புவது என்பதும் அவருக்கு சரியாக தென்பட்டிராது. என்னுடைய தீர்ப்பின் காரியங்களுக்காக ஜோசப்பை துன்பப்பட வைப்பது என்பது எனக்கு சரியான ஒரு காரியமாக தென்படாது. அவ்விதம் செய்வேனானால், நியாயமில்லாதவனாய் நான் இருப்பேன். நானே ஒரு தீர்ப்பை அளித்து, அதற்கு பரிகாரத்தை செய்ய விரும்புவேனானால், நான் செய்யக் கூடிய ஒரே ஒரு காரியம் என்னவெனில், நானே அதற்காக துன்பத்தை அனுபவிப்பதேயாகும். அது தான் அந்த அடையாளம், அதுதான் சாத்தானுக்கு மரண அடியாகும். 38இப்பொழுது, என்னுடைய கத்தோலிக்க மற்றும் என்னுடைய அநேக பிராடஸ்டென்ட் சகோதரரே, நான் உங்களை புண்படுத்த முயலவில்லை. ஆனால்... நீங்கள் இயேசுவை தேவனை விட சற்று சிறிய தேவனாக ஆக்கிவிடுகிறீர்கள், சற்று தாழ்ந்த தேவனாக ஆக்குகிறீர்கள். நீங்கள் அவருடைய பாதத்தை வெட்டி எடுத்து, தேவனுடைய தலைக்கு கீழாக அவரை சற்று கீழே இறக்கி, அவரை தாழ்ந்த தேவனாகச் செய்து விடுகிறீர்கள். நீங்கள் மிகவும் தவறாக இருக்கிறீர்கள். இயேசு மனிதன் ஆவார். அவர் தம்மை மனுஷக் குமாரன் என்று அழைத்துக் கொண்டார். அது பிசாசிற்கு மரண அடியாகும். பிசாசு உயரமாக, மிகாவேலுடையதைக் காட்டிலும் தனக்காக ஒரு மிக அழகான இராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டான். அவனுடைய குமாரனாகிய காயீன், பழங்கள் மற்றும் எல்லாக் காரியங்களைக் கொண்ட ஒரு அழகான பலிபீடத்தை அமைக்க விரும்பினான். அப்படிப்பட்ட ஒரு அழகில் தேவன் வாசம் செய்வதில்லை. ஆனால், தேவன், பாவத்திற்கு ஒரு மரண அடி கொடுக்க எப்படி அவர் வந்தார் என்பதைப் பாருங்கள். எவ்விதம் வர அவர் தெரிந்து கொண்டார்? பரலோகத்தில் ஒரு சேர்ந்துரையாடல் நடந்தது, ''எப்படி நீர் கீழே செல்லப் போகின்றீர்? பிதாவே, எவ்விதம் நீர் அதை செய்யப் போகின்றீர்?'' என்று தூதர்கள் கேட்டனர். ''அவர்களில் ஒருவராக நான் ஆகப்போகின்றேன். என்னுடைய மீட்பின் பிரமாணம் ''ஒரு நெருங்கின இனத்தான்'' என்றிருக்கின்றது. ஆகவே நானே ஒரு மனிதனாக ஆக வேண்டும்.'' 39சாத்தானை தாக்கிய அடி அதுவேயாகும். பிறத்தல்! கேரூபீன்களுடன் அவர் கீழே இறங்கி வந்திருக்கலாம். பொன் ஏணிகளைக் கொண்டு அவர் கீழே இறங்கி வந்திருக்கலாம். பரலோகத்தில் கீதங்கள் பாடப்பட்டு, அவர் பூமிக்கு நடந்து வந்து எல்லாக் காரியங்களையும் அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால் அந்த சேர்ந்துரையாடலை நடத்தின போது, ஒரு குழந்தையாக வர அவர் தீர்மானம் செய்தார். ஏசாயா 9:6ல், “நமக்கு ஒரு பாலகன் கொடுக்கப்பட்டார், ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவில்லை'' என்று நாம் காண்கிறோம். இது உங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கும், ''ஒரு குழந்தை,” ஒரு தேவன் அல்ல, “ஒரு குழந்தை.'' அவர் எங்கே பிறந்தார் என்பதை கவனியுங்கள். அந்த சேர்ந்துரையாடலில் அவர் மனிதன் தான் என்று நிச்சயப்படுத்த அவர் எங்கே பிறக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட வேண்டியதாய் இருந்தது. அவர் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். ஒரு தந்தத்திலான மாளிகையின் காவலர் அவரை கொண்டு வருவதற்கு பதிலாக, ஒரு தூதனின் மெய்க்காவலோடு வருவதற்கு பதிலாக, பரலோகத்தின் அணி அலங்காரத் தோரணையுடன், அசைகின்ற கேரூபின்களோடு வருவதற்கு பதிலாக, தம்மைத்தாமே ஒரு மாட்டுத் தொழுவத்தில், மிருகங்களின் மக்கிப்போன எருவின் மேல், உலகத்தின் அழுக்கும் நாற்றமுமான ஒன்றில் பிணைத்துக் கொண்டு இதையே அவர் தெரிந்து கொண்டார். 40அவர் மனிதனாயிருந்தார். அவர் குறைந்த தன்மைக் கொண்ட தேவன் அல்ல. அவர் ஒரு மனிதனாயிருந்தார். நம்மைப் போலவே, ஒரு ஸ்திரீயின் கர்ப்பத்திலிருந்து வருகின்ற அந்த சிக்கலான பிறப்பின் மூலமாகவே அவர் பிறந்தார். ஒரு தேவனாக அல்ல, ஒரு மனிதனாக! அவர் ஒன்றுமேயில்லை, ஆகவே அவர் அந்த மகத்தான குமாரன் என்பதில் வியப்பில்லை! கூட்டங்களில், பகுத்தறிதலின் அடையாளத்தை, ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னத்தை நீங்கள் காண்கின்றீர்கள். அவரைக் குறித்த அடையாளங்களை எல்லா இடங்களிலும் நீங்கள் காண்பீர்கள். ஆனால் என்னுடைய சகோதரனே, சகோதரியே, இதை நான் உங்களுக்கு கூறட்டும். அந்த தூதர்கள் மேய்ப்பனிடம், “கந்தைகளினால் சுற்றப்பட்டு, தொழுவத்தில் அவர் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்'' என்று கூறின... அடையாளத்தைப் போன்ற மிகவும் கவர்ந்திழுக்கின்ற ஒரு அடையாளம் இருந்ததேயில்லை. ஆகவே தேவன் என்னவாயிருக்கின்றார் என்பதை காண முடிகின்றது. 41அதுதான். இன்றைக்கும் அது என்னை திகைப்புறச் செய்கின்றது. ஒரு மகத்தான கீர்த்திப் பெற்ற சுவிசேஷகனுடைய, ஒரு எழுப்புதல் கூட்டம் பட்டணத்திற்கு வருமானால், மகத்தான மிக மிக பெரியவர்கள், பட்டணத்தின் மேயர், இன்னும் மிக மிக பிரசித்தி பெற்றவர்கள், அல்லது மிகச் சிறந்த ஆடை அணிந்தவர்கள் செல்வார்கள், ஆனால் ஏழையோ அவமாக எண்ணப்படுகின்ற நிலை? ஏதோ ஒரு மகத்தான படிப்பையுடைய, ஏழைகள் புரிந்து கொள்ளவே முடியாத மகத்தான சொற்கள் பேசுகின்ற உங்களுடைய புரிந்து கொள்ளும் தன்மைக்கு சிறந்த சரளமான வார்த்தைகளை பேசக்கூடிய ஏதோ ஒரு மகத்தான ஊழியக்காரனைக் குறித்துப் பேசுகின்றீர்கள், ஆகவே நீங்கள் அதை மகத்தானது என்று கூறுகிறீர்கள். தாழ்மையில் இருக்கின்ற அந்த தேவனை உங்களால் காண முடிகின்றதா? “இது ஒரு அடையாளமாக இருக்கும். அந்த பிள்ளை கந்தைகளால் சுற்றப்பட்டு, ஆடுகள் மற்றும் மந்தைகளுடைய மக்கிப்போன எருவின் மேல், தொழுவத்தில் கிடத்தப்பட்டிருக்கும். ”ஓ, என்னே! அது ஒரு அடையாளம். “இது உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். பிள்ளையை அங்கே நீங்கள் காண்பீர்கள்.'' 42அநேக சமயங்களில், ஜனங்கள், “ஒரு பழைய பாழடைந்த கூடாரத்தில், ABC கூட தெரியாத ஏதோ சில பிரசங்கிகள், மனந்திரும்பின கொள்ளைக்காரர்கள், கடத்தல் காரர்கள், இன்னும் மற்றவர்கள், படிப்பே இல்லாதவர்கள், இன்னும் கொச்சையான தென்பாக (Southern) உச்சரிப்பை உடையவர்கள், அங்கே தேவன் இருக்கவே மாட்டார்” என்று எண்ணுகின்றனர். கந்தை துணிகளால், மாட்டின் மேல் சுற்றப்படுகின்ற துணிகளால் (swaddling clothes) சுற்றப்பட்ட, தாழ்மையில் தான் நீங்கள் அவரைக் காண முடியும். அது ஒரு மகத்தான வழியில் வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். தேவனோடு ஒரு உண்மையான சேர்ந்துரையாடலை நீங்கள் வைக்க விரும்பினால், அப்படிப்பட்ட ஒரு ஜனங்களை வைத்து, பிறகு கலந்து பேசுங்கள். அவர் எவ்விதம் ஒரு சிற்பியையோ, ஏதோ ஒரு மகத்தான கலைஞனையோ இன்னும் யாரோ ஒருவனையோ எடுத்து அவனுக்கு ஒரு அறிவு நிறைந்த சொற்பொழிவை அவர் நடத்தவில்லை என்ற, தேவனுடைய கிரியையினை நீங்கள் காணலாம். ஆனால் அவர் ஒன்றுமே இல்லாத ஏதோ ஒன்றை எடுத்து, அவர் முதலில் செய்தபடியே இறங்கி வந்திருக்கிறார். 43யாரோ ஒருவர், சிறிது காலத்திற்கு முன்னர், ''இந்த பகுத்தறிதல், இந்த சுகமாக்குதல், இன்னும் மற்றவை தேவனாலே உண்டாயிருந்ததானால், கத்தோலிக்க உயர்மட்ட அமைப்பும் அதை கொண்டிருக்கும்'' என்று கூறினார். ஏன் அந்த யூத உயர்நிலை அதைக் கொண்டிருக்கவில்லை. அது ஒரு அரண்மனையில் பிறக்கவில்லை. அது ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது. ஊசியினால் தைக்கப்பட்ட உடைகளை அவர் அணிந்திருக்கவில்லை, ஆனால் ஒரு காளையின் நுகத்தடியின் மேல் இருந்த கந்தைகளை உடுத்தியிருந்தார். தேவன் வாசம் செய்த கூடாரமாகிய அந்த மனுஷக்குமாரன்; மக்கிப் போயிருந்த மாட்டு எருவின் குவியலின் மேல் படுத்து கிடந்தார். அப்படித்தான் வர வேண்டும் என்று அவர் தீர்மானம் செய்தார். ஆனால் நாமோ கழுத்துப் பட்டைகளை திருப்பி வைத்துக் கொண்டு, முன்புறம் வெட்டி விடப்படாத நீண்ட கோட்டுகளை அணிந்து, பெரிய, அருமையான பொன்னாலான உயர ஊசி கோபுரத்தை உடைய சபைகளை நாம் கொண்டிருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இது உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். அவர்கந்தை துணிகளை அணிந்தவராய், மாட்டின் மேல் சுற்றப்படும் துணிகளால் சுற்றப்பட்டவராய் முன்னணையில் கிடத்தப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இது உங்களுக்கு ஒரு அடையாளமாயிருக்கும்.'' 44தேவன் தாழ்மையில் வாசம் பண்ணுகிறார். ஆடம்பரத்தில் அல்ல; அது எப்பொழுதுமே பிசாசின் கருத்தாக இருந்து வருகிறது. தேவன் தாழ்மையில் வருகின்றார். ''அது ஒரு அடையாளமாக இருக்கும். ஒரு குறைந்த தேவன் அல்ல, ஆனால் ஒரு மனிதனாக. ஒரு மனிதனாக! அவர் ஒரு குழந்தையாக இருந்தபோது ஒரு குழந்தையைப் போலவே அழுதார். அவர் சிறு பையனாய் இருந்தபோது, ஒரு சிறுவனைப் போல தெருக்களில் அவர் விளையாடினார். அலுவலில் உள்ள ஒரு மனிதனாக அவர் மரவேலைக் கடையில் யோசேப்போடு தச்சு வேலை செய்தார். அவர் பசியாய் இருந்த போது சாப்பிட்டார். அவர் துக்கமடைந்து அழுதார். அவர் ஒரு மனிதனாக இருந்தார். “இது உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். தேவன் உங்களுக்குள் வாசம் செய்வார், ஒரு தாழ்மையான விதத்தில்...'' ஒரு மகத்தான, பெரிய அந்தஸ்த்தை உடைய ஒரு மனிதனாக அல்ல, ஆனால் ஒரு சிறிய, பின்னணியே இல்லாத ஒரு இழிவான மனிதனாக. ஒரு அடையாளம்! சரியாக அங்கேயே பிசாசுக்கு அது ஒரு மரண அடியாகும். ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும், ஆடம்பரத்திற்கும், இந்த உலகின் எல்லா ஆடம்பரத்திற்கும் மகிமைக்கும் அது ஒரு மரண அடியாகும். பரலோகத்தின் தேவன் அவ்வழியாக வர தெரிந்து கொண்டதே ஒரு மரண அடியாக இருந்தது. அந்த சேர்ந்துரையாடலில் இதுதான் நிகழ்ந்தது. அது முடிவு செய்யப்பட வேண்டியதாய் இருந்தது. அந்த வழியாக வரத்தான் அவர் தெரிந்து கொண்டார். அவர் அந்த வழியாக வரவேண்டிய அவசியமே இல்லை. அவர் பரலோகத்தின் தேவனாக இருந்தார், ஆனால் ஒரு குழந்தையாக வர அவர் தெரிந்து கொண்டார். பரலோகத்தில் நடந்த சேர்ந்துரையாடலில் இதுதான் சம்பவித்தது. 45இன்னும் வேறொரு, அல்லது இரண்டு சேர்ந்துரையாடல்களை நான் அழைக்கட்டும். இதை நான் அழைப்பேனாக. அங்கே ஒரு சமயத்தில்... முப்பத்து மூன்றரை வருட பரிபூரண ஜீவியம் செய்த ஒரு ஜீவியம். நான் வாழ விரும்புகின்ற, நீங்கள் வாழ விரும்புகின்ற ஒரு மனிதனாக அவர் இருந்தார். அவர் தாம் நேசித்த சகோதரருக்காக, தாம் நேசித்த ஜனங்களுக்காக, அவர் காண விரும்பிய சூரிய அஸ்தமான நாட்களுக்காக இவ்விதமாக ஏதோ ஒன்றுக்காக அவர் வாழ வேண்டியிருந்த ஒரு மனிதனாக இருந்தார். நினைவில் கொள்ளுங்கள், இயேசு ஒரு மனிதன் ஆவார். தேவன் அவருக்குள் இருந்தார். ஒரு சமயம் வந்தது.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி)... அந்த ஆட்டுக் குட்டியை வழி நடத்தின அந்த ஆவியானவர், அந்த புறா. ஆட்டுக்குட்டிக்கும் புறாவிற்கும் ஒரு சேர்ந்துரையாடல் வைக்கப்பட வேண்டியதாயிருந்தது. அதை முடிவு செய்வதற்காக அவர்கள் ஒரு இடத்தை அமைத்தனர். அந்த இராப்போஜனத்திற்குப் பிறகு, அந்த சிறிய கேரீத் நீரூற்றை அல்லது எங்கேயோ அவர்கள் கடந்து சென்றனர். ஆகவே நீரூற்றைக் கடந்து கெத்சமெனே என்றழைக்கப்பட்ட தோட்டத்திற்குள் அவர்கள் சென்றனர். அவர்கள் ஒரு சேர்ந்துரையாடலைக் கைக்கொள்ள வேண்டியதாய் இருந்தது. தேவனும் கிறிஸ்துவும் அதை கலந்தாலோசிக்க வேண்டியதாய் இருந்தது. ஆட்டுக்குட்டியும் புறாவும் ஒன்றாக உட்கார வேண்டியதாய் இருந்தது. புறா ஆட்டுக்குட்டியிடம் பேச வேண்டியதாய் இருந்தது, அது ஆட்டுக்குட்டியின் மரணமாக இருந்தது. இப்பொழுது, அவர்கள் அந்த பாறைக்கு அருகில் அமர்ந்த பொழுது, இந்த சேர்ந்துரையாடலைக் கேட்கும்படியாக பரலோகத்தின் எல்லா தூதர்களும் கீழே இறங்கி வருகின்றனர். ஓ! அங்கே காபிரியேல், மிகாவேல், எட்டி இன்னும் ஆயிரமாயிரம் தூதர்கள் அங்கே அந்த பாறையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். 46ஒருவேளை இந்த காலை வேளையில் களைத்துப் போயிருக்கின்ற உங்களைப் போலவே அவர்கள் பெரிய கூட்டங்களை அதிக அளவில் நடத்தி களைத்துப் போயிருந்த அவருடைய சீஷரிடத்தில், அவர் ''நீங்கள் என்னுடன் சேர்ந்து ஒரு மணி நேரம் விழித்திருக்கிறீர்களா? ஏனெனில் நான் ஒரு சேர்ந்துரையாடலிற்கு போகின்றேன். நான் தனியாக செல்ல வேண்டும்'' என்றார். ஆகவே என்னே அப்பொழுது அவர்கள்... அந்த சேர்ந்துரையாடல் அமைக்கப்பட்டது. ஆகவே அந்த இளமையான, ஆட்டுக்குட்டி அதன் அழகான ஜீவியம், அதைப்போன்ற ஜீவியம் ஒரு போதும் இருந்ததே இல்லை. அந்த ஆட்டுக்குட்டியானவரின் ஜீவியத்தைப் போல இருந்ததே இல்லை, இருக்கப் போவதும் இல்லை. ஆகவே இப்பொழுது பிதா “உனக்கு விருப்பமாயிருக்கிறதா? உன் சகோதரரர் மேல் உனக்கு இருக்கும் அன்பு பெரியதா? இந்த பாவம் நிறைந்த, நீ பிறந்த இந்த நாற்றமெடுக்கும் உலகிற்காக நீ கொண்டிருக்கும் அன்பு, உன்னுடைய ஜீவனை இழக்கின்ற அளவிற்கு நீ அதை நேசிக்கின்றாயா? அவர்களுடைய இடத்தை எடுத்து, அவர்களுடைய பாவங்களை சுமந்து, கடுமையான, கொடுமையான மரணத்தை சந்திக்கின்ற அளவிற்கு நீ அவர்களை நேசிக்கிறாயா?'' என்றார். நீங்கள்.... அவ்வித மரணத்தை அடைய அவரேயன்றி வேறொன்றும் இருக்க முடியாது. ஆகவே அந்த சேர்ந்துரையாடலில் அவருடைய புருவத்திலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது, ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அவர் அதிக பிரயாசை உடையவராய் இருந்தார். உலகத்தின் பாவங்கள் எல்லாம் அவர் மீது இருந்தது. ஆகவே அப்பொழுது அவர் புறாவின் முகத்தை நோக்கிப்பார்த்து, ''என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது'' என்றார். ஓ, இக்காலை நம்முடைய இருதயங்களில் அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை உடையவர்களாக நாம் இருப்போமா? உன்னுடைய நாற்றமெடுக்கும் அந்த சிறிய ஜீவியத்தை உன்னால் உதறித் தள்ள முடியுமா? அவருடைய முகத்தை நோக்கிப் பார்த்து ''என்னுடைய சித்தம் அல்ல என்று நீ கூற விரும்புகிறாயா?'' நான் ஒரு குடிகாரன், ஆனால் இனிமேல், நான் குடிக்க மாட்டேன். நான் ஒரு சூதாட்டக்காரன்; நான் இனி குடிக்க மாட்டேன். நான் ஒழுக்கங்கெட்டவன், ஆனால் இனி அவ்விதம் நான் இருக்க மாட்டேன். நான் பொய் சொல்பவன், ஆனால் இன்றிலிருந்து நான் நிறுத்தி விடுகிறேன். நான் ஒரு மோசமான ஆள். ஆனால் இந்த சேர்ந்துரையாடலில், இக்காலை வேளையில் நான் உம்முடைய முகத்தை நோக்கிப் பார்ப்பேன், எனக்காக மரித்து எனக்கு பாதையை சரியாக உண்டு பண்ணின என் எஜமானனைப் போன்று, என்னுடைய வீடே போனாலும் சரி, ''என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தம்'' என்பேன். அது என்னுடைய புருஷனையோ, என்னுடைய மனைவியையோ, என்னுடைய தந்தையையோ, என்னுடைய தாயையோ, என்னுடைய ஐக்கியத்தையோ, என்னுடைய சபை உறுப்பினர் காரியத்தையோ, எதையுமே இழக்கச் செய்தாலும் பரவாயில்லை. இந்த சேர்ந்துரையாடலில், இக்காலையில், உம்முடைய பரிசுத்த ஆவி எனக்குள் வாசம் செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன். அதைக்குறித்து நான் கேட்டிருக்கின்றேன். நீர் எனக்குள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடையதல்ல, ஆனால் உம்முடையது. அதுதான் என்னுடைய தீர்மானம் தேவன் அந்த இடத்திற்கு அழைத்திருக்கிறார், ஏதோ ஒரு உயரமான இடமோ, உப்பரிகையோ அல்ல, ஆனால் உள்ளே வரும்படியான விழுந்து போகும் நிலையிலுள்ள ஒரு தாழ்மையான சிறிய கூடாரமாகும். நாம் ஒரு சேர்ந்துரையாடலைக் கொண்டிருக்கின்றோம். 47சிறிது நேரத்திற்கு இன்னும் ஒரு சேர்ந்துரையாடலைக் குறித்து இங்கே நான் பேசட்டும். அநேகருக்கு இது ஒரு பாடமாக அமையும். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலிற்கு பிறகு ஒரு சேர்ந்துரையாடல் இருந்தது. ஏதோ ஒன்று செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அந்த மனிதர் அறிவுப்பூர்வமான சிந்தனையை உடையவர்களாய் இருந்தனர், ஆதலால் இன்னுமொரு சேர்ந்துரையாடல் அங்கே அமைந்தது. அது பெந்தெகொஸ்தே என்று வேதத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம். அவர்கள் ஒரு சேர்ந்துரையாடலை வைக்க வேண்டியதாயிருந்தது. ஆகவே ஏதோ ஒன்று செய்யப்பட வேண்டியதாயிருந்தது, ஏனெனில் இயேசு, ''இனிமேல் பிரசங்கிக்காதீர்கள். இனிமேல் பாடாதீர்கள். இனியும் வெளியே சென்று ஊழியம் செய்யாதீர்கள். ஆனால் நான் உங்களுடன் ஒரு சேர்ந்துரையாடலை வைக்க வேண்டும். ஆகவே இந்த சேர்ந்துரையாடலில் நான் பரிசுத்த ஆவியை கொண்டு வரப்போகின்றேன். ஆனால் நீங்கள் எருசலேம் நகரம் வரை சென்று நான் திரும்ப வரும் வரைக்கும் அங்கே நீங்கள் காத்துக் கொண்டிருங்கள். பரலோகம் களிகூறத்தக்கதாக நான் அங்கே போக வேண்டும். இராஜாவின் சிங்காசனம் வரை நான் போக வேண்டும்,'' என்றார், அந்த சரீரம், இயேசு, ஆனால் நான் செல்கிறேன்... அங்கே மேலே நாங்கள் ஒரு சேர்ந்துரையாடலை வைக்கப் போகிறோம். ஆகவே எனக்குள் வாசம் செய்கின்ற அந்த தேவன், நான் திரும்பவும் வந்து உங்களுக்குள் இருப்பேன்; உலகம் முடிவு பரியந்தம் உங்களுடனே கூட இருப்பேன் என்று வாக்குரைத்திருக்கின்றார். எல்லாம் முடிவடையும் வரை நான் உங்களுடன் இருப்பேன். நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்றார். ஆகவே அவர்கள் இதை எப்படி செய்ய வேண்டும் என்று அறியாதிருந்தனர், ஆகவே அவர்கள் பெந்தெகொஸ்தேவிற்கு சென்றனர், நூற்றிருபது பேர்களாக மேலறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டு காத்துக் கொண்டே, காத்துக் கொண்டேயிருந்தனர். 48தொல்லை நம்மிடம் தான் இருக்கின்றது, தேவன் நமக்கு பத்து நிமிடங்களுக்குள் செவி சாய்க்கவில்லை எனில், நாம் சோர்ந்து விடுகிறோம், நம்முடைய முழங்கால்கள் வலிக்க ஆரம்பிக்கின்றன. நாம் எழுந்துச் செல்ல முனைவோம். நாம் நினைக்கின்றவாறே, நம் தேவைகளுக்கு அவர் பதிலளிக்காமல் போனால், நாம் அவரிடம் வெறுப்புணர்ச்சி கொள்கிறோம். ''ஓ நாமெல்லாரும் ஒன்றாகக் கூடி ஆலோசிப்போம்.'' “பெந்தெகொஸ்தேயிற்கு செல்லுங்கள். நான் உங்களுடன் ஆலோசிக்க விரும்புகிறேன். நீங்கள் அங்கே மாத்திரம் சென்று காத்துக் கொண்டிருங்கள்.'' பத்து நாட்களாக அவர்கள் உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும், ஜெபித்துக் கொண்டும், மற்ற எல்லாவற்றையும் செய்து, வாக்குத்தத்தத்திற்கு காத்துக் கொண்டிருந்தனர். ''அப்பொழுது திடீரென்று, சடுதியாக, பரலோகத்தில் நடைபெற்ற சேர்ந்துரையாடலின் முடிவுகள் கீழே வந்தன. பரிசுத்த ஆவி பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டார்கள். ஆகவே அவர்கள் வார்த்தை பிரசங்கித்தவாறே முன்னே சென்றார்கள். 49நாம் உலக மாநாடுகளை, சேர்ந்துரையாடல்களை வைப்போமானால், தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மாத்திரமே அவைகளை அவர்கள் நடத்துவர். ஆகவே இப்படிப்பட்ட சேர்ந்துரையாடல்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் மதுபானங்களை அருந்துவார்கள். அவர்கள் சிகரெட்டுகளையும் சுருட்டுகளையும் புகைப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பொய் சொல்வார்கள், ஒருவரையொருவர் ஏமாற்றுவர், இது உலக அமைதிக்கான பேச்சு வார்த்தைகள். ஆனால் தேவன் ஒரு சேர்ந்துரையாடலை கூட்டுவாரென்றால், அது உபவாசம், பரிசுத்தப்படுத்தல், ஜெபம், கட்டளைகளைப் பெறுதல், பிறகு முன்னே செல்லுதல், ஆகியவைகளாக இருக்கும். அதுதான் தேவனுடைய சேர்ந்துரையாடல். விருந்து உண்பதல்ல, மாறாக உபவாசித்தல். நீங்கள் தேவனுக்கு முன் செல்லும் பொழுது, ஆபாசம் அசுத்தத்தில் ஈடுபடாமல், ஆனால் வேறுபிரிந்து, எல்லா அநீதிகளிலிருந்தும் உங்களை சுத்திகரித்துக் கொள்கிறீர்கள். விசுவாசத்தினால், ஈசோப்பை இரத்தத்தில் தோய்த்து உங்களுடைய இருதயத்தை சுத்தம் செய்து ஒரு சேர்ந்துரையாடலிற்காக தேவனுக்கு முன்பாக நடப்பது. நீங்கள் தேவனை சந்திக்கையில் அப்படிப்பட்ட சேர்ந்துரையாடல்கள் தான் இருக்கும், அப்பொழுது தேவன் உனக்கு கட்டளைகளை பிறப்பிக்கிறார். பிறகு நீ முன்னே செல்கிறாய், அவரும் உன்னோடே செல்கிறார். 50நாம் தொடர்ந்து சிந்திக்கத்தக்கதாக இன்னும் மகத்தான அநேக சேர்ந்துரையாடல்கள் உள்ளன. ஆனால் நேரம் அனுமதிக்காது. சமீபமாக ஒரு சேர்ந்துரையாடல் நடைபெற்றது. சீர்திருத்தலின் சமயத்தில் மார்டீன் லூத்தரின் நாட்களில் ஒரு சேர்ந்துரையாடல் நடந்தது. நீதிமானாக்கப்படுதலை பிரசங்கிக்க தேவன் மார்டின் லூத்தரை அழைத்தார், அவர் அதைச் செய்தார். வெஸ்லி சாட்சி பகர்ந்த, பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கிக்க வெஸ்லியின் நாட்களில் இங்கிலாந்தில் ஒரு சேர்ந்துரையாடல் நடைபெற்றது. அவர் கடைசியாக அணிந்திருந்த கோட்டை, வஸ்திரத்தை, நான் அணிந்திருக்கிறேன். தினந்தோறும் காலை ஐந்து மணி அளவில் ஆயிரத்து ஐந்நூறு பேருக்கு அவர் பிரசங்கம் செய்த பிரசங்க பீடத்தில் நான் நின்றிருக்கிறேன். அவர் மரித்த அறையில் நான் முழங்காலிட்டு அவருடைய ஜீவியத்திற்காக நான் தேவனுக்கு நன்றி செலுத்தினேன். அங்கே ஆவியானவர் என் மீது இருந்தார், ''ஆம், வெஸ்லி உண்மையானவரே'' என்று நான் நினைத்தேன். தேவனுடைய பரிசுத்த தூதர்களும், தேவனும் பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கிக் வேண்டிய சமயம் இதுவே என்று ஒரு சேர்ந்துரையாடலை நடத்தி வெஸ்லியை அவர்கள் தெரிந்தெடுத்தனர். ஆகவே அவர் அதற்கு உண்மையாக இருந்தார். பிறகு பெந்தெகொஸ்தே வந்தது. பெந்தெகொஸ்தே திரும்ப கொண்டு வரப்படும் நேரமாக அது இருந்தது. பரலோகத்திலே ஒரு சேர்ந்துரையாடல் நடத்தப்பட்டது. ''ஆவியின் நிறைவை ஊற்றுவதற்காக சமயம் இதுவா?'' ஆகவே அது விழுந்தது, அவர்கள் அதை பிரசங்கித்தனர். ஆகவே நாம் அதைப் பெற்றுக் கொண்டோம், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டோம். 51இப்பொழுது, தேவனுடைய குமாரனின் வருகையைக் குறித்த மற்றுமொரு சேர்ந்துரையாடலில் நாம் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கின்றேன், “அந்த மணி நேரத்தையும் அல்லது நாழிகையும் நான் அறியேன்; யாருமே அதை அறியார்கள், தூதர்களும் கூட அதை அறியார்கள். ஆனால் என்றாவது ஒரு நாளில் ஒரு சேர்ந்துரையாடல் நடைபெறும்.'' வேறு விதமாகக் கூறினால், ''நான் திரும்ப வரப்போகும் அந்த கணத்தை (Moment) பிதாவானவர் தாமே தீர்மானம் செய்வார். அந்த சேர்ந்துரையாடல் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும், முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் நான் நம்புகிறேன். அவருடைய ஆவி சபையோரின் மத்தியில் நின்று, சிந்தையின் எண்ணங்களை பகுத்தறியும் வகையில், மிக பலமாக பூமிக்கு வருகின்றது. வேதாகமம் கூறுவது போல், ''தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளை பகுத்தறிகிறதாயும் இருக்கிறது.'' பிலிப்பு வந்து மனமாறின பிறகு அவன் சென்று நாத்தான் வேலை சந்தித்தான். ஆகவே அந்த யூதனாகிய நாத்தான்வேல் இயேசுவின் முன்பாக கொண்டு வரப்பட்டான். ஆகவே அவரைக் குறித்து இவன் அவனிடம், சொல்லி கொண்டிருந்தான். அவன், ''நல்லது, நாத்தான்வேல், என்ன, சிறிது நாட்களுக்கு முன்னர், ஒன்றுமே அறியாத ஒரு பழைய மீனவன் அவரிடம் வந்தான், அவரோ அவனை அறிந்திருந்தார். அவர் அவனுடைய பெயரை கூறி அவன் யாரென்பதையும் கூறினார். உனக்கு தெரியுமா, மேசியா வருவார் என்று நம்முடைய தீர்க்கதரிசி கூறியிருக்கின்றாரே, அந்த மேசியா ஒரு தீர்க்கதரிசியாக, தேவன் - தீர்க்கதரிசி என்பவராக இருப்பார் என்று உன்னால் உணர முடிகின்றதா? அதோ அவர். அது அவரே தான்'' என்று கூறினான். நாத்தான்வேல் இவ்வாறு கூறியிருக்கக் கூடும். அதை நான் நம்பவில்லை. நானே சென்று அதைக் காண்பேன்.'' ஆனால் அவன் இயேசுவின் சமுகத்திற்குள்ளாக நடந்து சென்ற போது, இயேசு, “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். ஆகவே அவர் அதைக் கூறின போது, அவன், ''ரபீ, எப்பொழுது என்னை உமக்குத் தெரியும்?'' என்றான். அவர், ''பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும் போது உனனைக் கண்டேன்'' என்றார் அவன், ''நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் ராஜா'' என்றான். 52ஐந்து புருஷரைக் கொண்டிருந்த அந்த சமாரிய ஸ்திரீ அவரிடம் வந்தபோது. அவள் கூறினாள். அவள் தண்ணீர் மொள்ளத் துவங்கின பொழுது, உட்கார்ந்துக் கொண்டிருந்த இந்த யூதனை அவள் கண்டாள். அவர், ''தாகத்துக்குத்தா'' என்றார். பாருங்கள், ஒரு மனிதனைப் போலவே அவருக்கு தாகம் உண்டாயிருந்தது. அவர் ஒரு மனிதனாக இருந்தார். தம்முடைய சரீரத்தில், அவர் ஒரு மனிதனாயிருந்தார். ஆவியிலேயோ, அவர் தேவனாயிருந்தார். “தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து உலகத்தை தமக்குள் ஒப்புரவாக்கிக் கொண்டார்.” அவர், ''தாகத்துக்குத்தா“ என்றார். அவளோ, “இது பழக்க வழக்கமல்ல'' என்றாள். வேறு விதமாகக் கூறினால், ''நாங்கள் புறம்பாக்கப்பட்டவர்கள். என்னிடத்தில் நீர் அதை எப்படிக் கேட்கலாம்.'' அவர், ''நீ யாரிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை மாத்திரம் நீ அறிவாயானால்'' என்றார். ஓ, இக்காலையில் இந்த அறையில் என்ன இருக்கின்றது என்பதை நாம் அறிவோமா என்று ஆச்சரியமுறுகிறேன். நியாயத்தீர்ப்பின் நாளிலே நமக்காகவோ அல்லது நமக்கெதிராகவோ சாட்சி பகரப்போகின்ற அந்த பரிசுத்த ஆவியானவர் தாமே, நம்முடைய எண்ணங்களை அறிந்தவராய் இங்கே இந்த அறையில் இருக்கின்றார் என்பதை மாத்திரம் நாம் அறிவோமானால்.... ''உன்னுடன் பேசிக் கொண்டிருப்பது யார் என்பதை மாத்திரம் நீ அறிவாயானால், நீயே என்னிடம் கேட்டிருப்பாய்.'' அவள், ''கிணறும் ஆழமாயிருக்கின்றதே“ என்றாள். அவளுடைய ஆவியைப் பிடிக்கும் வரையில் அவர் அவளுடன் பேசிக் கொண்டே இருந்தார். பிறகு அவர், ''நீ போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு இங்கே வா“ என்றார். அதற்கு அவள், “எனக்கு ஒருவரும் இல்லை” என்றாள். அவர், “நீ சொன்னது சரிதான். உனக்கு ஐந்து பேர் இருந்தனர், இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருக்கும் ஆள் உனக்கு புருஷனல்ல'' என்று கூறினார். அவள், ''ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். மேசியா வரும்போது இக்காரியங்களை அவர் செய்வார் என்று நாங்கள் இப்பொழுது அறிந்திருக்கிறோம். ஆனால் நீர் யார்?'' என்று கூறினாள். இயேசு, ''நானே அவர்'' என்றார். ஓ, என்னே! ''உன்னுடனே பேசுகிற நானே அவர்'' ''தாகத்துக்குத்தா'' என்று கேட்கின்ற ஒரு சாதாரண மனிதனாக, பரலோகத்திலிருந்து வந்த ஏதோ ஒரு மகத்தான அழகிய இனிமையும் கவர்ச்சி மிக்கதுமான ஒன்றாக அல்ல. வெள்ளை சிங்காசனத்தில் உட்கார்ந்து கொண்டல்ல, ஆனால் ஒரு மனிதனாக. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை நான்குமுறை தட்டுகிறார் - ஆசி) தம்முடைய தாகத்தைத் தீர்த்துக் கொள்ள தண்ணீர் கேட்கின்றார். ''உன்னுடனே பேசுகிற நானே அவர்.'' ஆகவே அவள் பட்டணத்திற்குள்ளே ஓடிப்போய், ''நான் செய்த காரியங்களை ஒரு மனுஷன் எனக்கு சொன்னார். அவரை வந்து பாருங்கள். அது மேசியாவின் அடையாளம் அல்லவா? அவர் தானே?'' என்று கூறினாள். 53பழைய ஏற்பாட்டில் இருந்த தீர்க்கதரிசிகளோடு தீர்க்கதரிசனம் உரைத்த அதே ஒன்று, ''ஒருநாள் உண்டு அப்பொழுது அவர்கள் சபையை மாத்திரம் சேர்ந்துக் கொண்டு சபைக்குச் சென்று அழகான நல்ல ஜனங்களாக மாத்திரமே இருப்பர். ஸ்தாபனங்களையும் மற்ற காரியங்களையும் அவர்கள் கொண்டிருப்பர். இருளும் அல்ல அல்லது வெளிச்சமும் அல்ல, அது ஒரு மந்தாரமான நாளாக இருக்கும், ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்'' என்று கூறினது. அந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டும். கடந்த இரவு பரலோகத்தில் இருந்த நம்முடைய சேர்ந்துரையாடலை நினைவில் கொண்டிருக்கிறீர்களா? தேவன் தம்முடைய எல்லா தூதர்களையும் ஒன்றாக கூட்டி தீர்க்கதரிசியின் வார்த்தை நிறைவேறத்தக்கதாக, எலியாவை வெளியே கொண்டுவர... அல்லது என்னை மன்னிக்கவும் ஆகாபை கொல்லத்தக்கதாக யாரை உபயோகிக்க வேண்டும் என்று ஒரு சேர்ந்துரையாடலை நடத்தினார். இப்பொழுது பரலோகத்தில் ஒரு சேர்ந்துரையாடல் நடந்து கொண்டிருக்கின்றது. சாயங்கால வெளிச்சங்கள் இங்கே இருக்கின்றன. அணுகுண்டுகளும் மற்ற காரியங்களும் எல்லாவிடங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன, ஆகவே நாம் கடைசி காலத்தில் இருக்கின்றோம். உலக சேர்ந்துரையாடல்கள் எல்லாம் முடிவடையும் தருணத்தில் வந்துள்ளன. தேவனுடைய சேர்ந்துரையாடலின் நேரமோ வருகின்றது. (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கபீடத்தை நான்குமுறை தட்டுகிறார் - ஆசி) இந்த வார்த்தைகள் புறஜாதிகளுக்கு நிறைவேறியாக வேண்டும். (சகோதரன் பிரான்ஹாம் எட்டு முறை தட்டுகின்றார்). “நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' அந்த நேரமானது இங்கே இருக்கின்றது. சேர்ந்துரையாடல் நடைபெற்றாகி விட்டது. ஆவியானவர் இங்கே இருக்கின்றார். 54இப்பொழுது, முடிக்கையில் இதை நான் கூறுகிறேன் நண்பனே. இந்த காலை வேளையில் நீயும் ஒரு சேர்ந்துரையாடலில் இருக்கின்றாய். நீ இருக்கிறாய். உன்னுடைய காரியம் பரிந்து பேசப்படத்தக்கதாக தயாராக இருக்கின்றது. உன்னுடைய - உன்னுடைய வியாதியின் காரியம் இரக்கமுள்ள தேவனுக்கு முன்பாக பரிந்து பேசப்படத்தக்கதாக தயாராக இருக்கின்றது. உன்னுடைய பாவ காரியமானது இரக்கமுள்ள தேவனுக்கு முன்பாக பரிந்து பேசப்படத்தக்கதாக தயாராக உள்ளது, ஆகவே அதை நீ ஏற்றுக் கொள்ளும்படி நிச்சயமுடையவனாக இரு. நான் உங்களுக்கு கூறட்டும், நடைபெறப் போகின்ற கடைசி சேர்ந்துரையாடலைக் குறித்து நான் பேசப்போகின்றேன். தேவன் இரக்கமுள்ளவராய் இருப்பாராக. அங்கே நிற்கத்தக்கதாக ஒரேயொரு காரியம் தான் இருக்கும்; ஒப்புரவாகுதல். அதுதான் நியாயத்தீர்ப்பு. நீ எப்படி ஒப்புரவாக்கப்படுவாய் என்றால் நீ உன்னுடைய மன்னிப்பாக இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொண்டு அவருடைய ஆவியினால் நிரப்பப்படும்போது மாத்திரமே. ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஸ்திரீயும், ஒவ்வொரு குழந்தையும் சந்தித்துக்கொள்ளும் ஒரு சேர்ந்துரையாடல் உண்டு. அந்த சேர்ந்துரையாடல் நடத்தப்பட ஒரு தெரிந்தெடுக்கப்பட்ட இடம் இருக்கின்றது, அங்கே ஒரு மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு அமைக்கப்படும். தம்முடைய தீர்க்கதரிசிகள் அதைக் காணத்தக்கதாக தேவன் அனுமதித்தார், “புஸ்தகங்கள் திறக்கப்பட்டன, ஜீவ புஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகம் திறக்கப்பட்டது. ஆயிரமாயிரம் ஊழியக்காரர்கள், தூதர்கள் அவருக்கு சேவை செய்தனர்.'' ''நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால் பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே போவான்?'' என்று இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த சேர்ந்துரையாடலில் உன் நிலை என்னவாயிருக்கும்? உன்னுடைய ஜீவியத்தில் அவைகள் எல்லாவற்றையும் நீ தவிர்த்திருக்கலாம். இந்த காலை வேளையில் நீ இந்த கதவைக் கடந்து வெளியேறி இந்த காரியத்தை அசட்டை செய்யலாம். ஆனால், என் நண்பனே, அந்த காரியத்தை உன்னால் தவிர்க்கவே முடியாது. நீ அங்கே இருக்கத்தான் போகின்றாய். ''ஏனெனில், ஒரே தரம் மரிப்பதும், அதற்கு பிறகு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.'' நாமெல்லாரும் ஒன்றாக நிற்கும்படியான, ஒரு மகத்தான சேர்ந்துரையாடல் உண்டாயிருக்கும். இக்காலை நடைபெற்ற, இந்த காலை வேளையில் நாம் நடத்திய இந்த பூமிக்குரிய சேர்ந்துரையாடலைக் குறித்து நாம் கணக்கொப்புவிப்போம். 55நீ ஒரு பாவியாய் இருப்பாயானால், நீங்கள் உங்கள் தலைகளை தாழ்த்து கையில், நாங்கள் ஜெபிக்கும்போது அவருடைய இரக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஜெபிப்பதற்கு முன்னர், இந்த சேர்ந்துரையாடலில் உட்கார்ந்துக் கொண்டு, நீங்கள் உங்கள் தலைகளை தாழ்த்துகையில், பரிசுத்த ஆவியானவர் உன்னிடம், ''நீ தவறாய் இருக்கின்றாய்'' என்று கூறாமல் இருப்பாரோ என்று நான் ஆச்சரியமுறுகிறேன். நீங்களும் ஒருகால், “பரிசுத்த ஆவியானவரே, நீர் பாரும், அது இதைப்போன்று இருக்கின்றது,'' என்று கூறலாம். சிவந்தசமுத்திர சேர்ந்துரையாடலில் மோசேயும் அதைத்தான் கூறினான், ”இது தான் கர்த்தாவே, இவ்வளவு தூரம் வரை நான் வந்துள்ளேன், ஆனால் இன்னுமாக என்னால் செல்ல முடியவில்லை. என்னுடைய பாதையில் ஏதோ ஒன்று இருக்கின்றது'' என்றான். உன்னுடைய வழியில் ஏதோ ஒன்று இருக்கலாம். ஆனால் தேவன் மோசேயிடம், ''புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குப் போய் சொல்லு“ என்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெபத்தில் நீங்கள் நினைவு கூறப்பட வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி ''எனக்காக ஜெபியுங்கள் சகோதரனே“ என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னே! கட்டிடம் முழுவதிலும் டஜன் கணக்கில் அநேகக் கரங்கள். 56பரலோகப் பிதாவே, பிரசங்கம் செய்வதனால் உடைந்து போய் இருக்கின்ற அல்லவென்றால் நொறுக்கப்பட்டுள்ள இந்த குரலில், எப்படியாயினும், அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்காக கொடுக்கப்பட வேண்டிய சிந்தனையை, ஆலோசித்தலை அளித்தார். தீர்க்கதரிசி, “வழக்காடுவோம் இப்பொழுது வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' என்று கூறினான். ”இப்பொழுது வாருங்கள், நாம் உட்கார்ந்துக் கொண்டிருக்கிற இடங்களிலிருந்தே ஒருவருக்கொருவர் ஒரு சேர்ந்துரையாடலை நடத்துவோமாக. நான் உங்கள் அருகிலேயே உட்கார்ந்துக் கொண்டிருக்கின்றேன். நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்'' “ஆனாலும், கர்த்தாவே, நான் பாவம் செய்துள்ளேன்; நான் அதிகமாக செய்துள்ளேன். கர்த்தாவே நீர் என்னை மன்னிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நான் ஒரு குடிகாரன், நான் ஒரு விபசாரி. நான் ஒரு கீழ்த்தரமான நபர். எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் இருக்கும் என்று நான் நம்பவில்லை, கர்த்தாவே'' என்று பாவி கூறுகிறான். அப்பொழுது இனிமையான வார்த்தைகள் நம்மிடம் திரும்ப திரும்ப வருவதை நாம் கேட்போம், “உன்னுடைய பாவங்கள் இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும், அவைகள் பனியைப் போன்று வெண்மையாகிவிடும். அவைகள் சிவப்பாய் இருந்தாலும் கூட; பிறப்பதற்கு முன்பாக அநேக சிறிய குழந்தைகளின் வாழ்க்கையை எடுத்து விடுகின்றவைகளாய் இருக்கும், இன்னும் - இன்னும் பயங்கரமான காரியங்கள். அவைகள் மிகவும் சிவப்பாய் இருந்தாலும், ஒரு ஆட்டுக்குட்டியின் ரோமத்தைப் போன்று வெண்மையாக ஆகிவிடும். என்ன ஒரு இரக்கம்! ''நாமெல்லாரும் வழக்காடுவோம்'' என்று தேவன் இப்பொழுது கூறுகின்றார். 57கர்த்தாவே நாங்கள் வந்து இந்த சேர்ந்துரையாடலை நிகழ்த்தட்டும். ஆகவே நீர் உம்முடைய ஜனங்களிடம் பேசிக் கொண்டிருக்கின்றீர். அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர், அது நீர் அவர்கள் அருகில் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர் என்பதை காண்பிக்கிறது. ஏனெனில் “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்து கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்'' என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தாவே, தங்கள் கரங்களை உயர்த்தியுள்ள ஒவ்வொருவருக்கும், தங்கள் கரங்களை உயர்த்தாதவர்களுக்கும், இந்த கட்டிடத்தில் இப்பொழுது ஒவ்வொரு தனிப்பட்ட நபருடனும், ஜனங்களுடனும் உம்முடைய சிறிய சேர்ந்துரையாடல் எங்கெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றதோ அவர்கள் தாமே உம்முடைய மன்னிக்கின்ற கிருபையை ஏற்றுக்கொண்டு உம்முடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, உம்முடைய இரத்தத்தாலே கழுவப்படட்டும். ஆகவே பாதையின் முடிவிலே, நீர் தாமே, ”நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே. எட்டாவது பென் தெருவிலே அந்த காலையில் உண்மையாயிருந்தாய், உனக்காக உலகத்தோற்றத்திற்கு முன்பாக உண்டாக்கப்பட்டிருந்த கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் இப்பொழுது பிரவேசி'' என்று கூறும். என்னுடைய தேவனும் என்னுடைய பிதாவுமாகிய கர்த்தாவே, அவர்களை நான் உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன். இன்னுமாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் உம்முடைய பிரசங்கி மாத்திரமே, ஆகையால் இன்னுமாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் உம்முடையவர்கள். பிதாவே அவர்களுடைய இருதயத்தின் தேவைகளுக்கேற்றவாறு அவர்களுடன் ஈடுபடும். நாங்கள் அவர்களை அனுமதிக்கிறோம்... அல்லது அவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம், உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, ஆமென். 58கூடாரத்திலே நீங்கள் எப்பொழுதாவது கவனித்த துண்டா, ஜனங்கள் சென்று ஜனங்களை பீடத்தண்டை இழுத்துக் கொண்டு வரும்படிக்கு நான் அனுமதிப்பதில்லை. அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. தேவன் உங்களைக் கொண்டு வராவிட்டால், அது மற்றவருக்குக் கூட எந்த ஒரு நன்மையும் உண்டாக்காது. ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் எந்த ஒரு மனிதனும் வரமாட்டான். பிதாவானவர்...'' ஆகவே உன்னுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் இருப்பதால் பிதாவானவர் உன்னை இழுத்துக்கொள்ளுகிறார். ''அவர் எனக்கு கொடுத்த யாவும் என்னிடத்தில் வரும்.'' நீ உன்னுடைய இருக்கையிலோ, பீடத்தண்டையிலோ, எங்கே இருந்தாலும் சரி, நீ வருவாய். அது முற்றிலுமான உண்மையே. இயேசு அவ்வாறு கூறினார். ஆதலால் இப்பொழுது கரங்களை உயர்த்தியுள்ள அன்பார்ந்த ஜனங்களாகிய நீங்கள், நீங்கள் ஞானஸ்நானம் பெற்றிராவிட்டால் நீங்கள் எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கை என்னவெனில், நீங்கள் உங்கள் பாவங்களுடைய மன்னிப்பிற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும். அது தான் மருத்துவருடைய மருந்துச்சீட்டு, இராஜ்ஜியத்தினுடைய திறவு கோல்களைக் கொண்டவனாயிருந்த, நீங்கள் எப்படி உட்பிரவேசிக்க வேண்டும் என்று கூறின டாக்டர் சீமோன் பேதுருவின் மருந்துச்சீட்டு. பெந்தெகொஸ்தே நாளிலே அவர்கள், ''இரட்சிக்கப்படுவதற்கென்று நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். அவன் ''நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்ப வேண்டும்'' என்று கூறினான். அதைத்தான் நீங்கள் இப்பொழுது செய்துள்ளீர்கள். இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை எடுத்துக் கொண்டார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் (இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல்) என்று மக்களுக்கும், உலகத்திற்கும் காண்பிக்கும் படியாக, ''பிறகு பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறீர்கள். ''அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.'' 59அந்த கற்பித்தலை பின்பற்றுங்கள். இந்த கூடாரத்தில் இல்லை என்றாலும், நீங்கள் செல்லுகின்ற கூடாரத்தில், நீங்கள் செல்கின்ற சபையாயிருந்தாலும், எதுவாயிருந்தாலும், வெளியே இருந்துவிடாதேயுங்கள். ஆவிக்குரிய விசுவாசிகளுடைய ஒரு குழுவிற்கு சீக்கிரமாகச் செல்லுங்கள். தேவனுடைய சபைகளுக்கு செல்லுங்கள், தேவனுடைய சபை, பெந்தெகொஸ்தே ஒருத்துவம், பெந்தெகொஸ்தே இருத்துவம், மூன்றுத்துவம், அது எதுவாயிருந்தாலும் சரி, நீ எங்கே செல்லுகிறாய் என்பதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை, ஆனால் சீக்கிரமாக ஒரு சபைக்கு செல். உன்னுடைய ஐக்கியத்தை அங்கே வை. அவர்கள் சிறிய காரியங்களை கற்றுக் கொடுப்பார்களானால், ஒருவேளை நீங்கள் செய்யாத காரியமாயிருந்தால், ''நல்லது, சகோதரன் பிரான்ஹாம் அவ்வாறு போதிக்க வில்லையே'' என்று நீ கூறாதே. நல்லது, ஒரு வித்தியாசத்தையும் எவ்விதத்திலும் உண்டாக்காதே, நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டவராக இருந்தால், சென்று கொண்டேயிருங்கள். அவர்களோடு இருங்கள். தள்ளிக் கொண்டேயிருங்கள். எப்படியாயினும், நாமெல்லாரும் - நாமெல்லாரும் ஒன்றாவோம். சாலமோனுடைய ஆலயமானது அதைக் கட்டின பொழுது அந்த உருவில்லாத பல வித்தியாசமான கற்கள், இன்னும் மற்ற எல்லா காரியங்களும், உலக முழுவதிலுமிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டதாயிருந்தது, ஆனால் அவைகள் ஒன்றாக கூடிவரத் துவங்குகையில், வாள் அல்லது ஒரு சுத்தியலினுடைய சிறிய சத்தம் கூட உண்டாயிருக்கவில்லை. ஆலயத்தை கட்டின அந்த நாற்பது ஆண்டுகளில், ஒரு சுத்தியலின் சத்தத்தைக் கூட அல்லது ஒரு வாளின் சத்தத்தைக் கூட அவர்கள் கேட்கவில்லை. அவைகளெல்லாம் சரியாக வெட்டப்பட்டிருந்தன. பரிசுத்த ஆவியைக் கொண்ட இந்த எல்லா மகத்தான சபைகளும், அந்த நாளிலே, தங்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட பொருத்தமான இடங்களிலே, கிறிஸ்துவின் சரீரத்திலே, எடுத்துக் கொள்ளப்படுவதற்கென்று சரியாக ஒன்றாகச் செல்லும். அவர்கள் விசுவாசிக்கின்ற சுவிசேஷ இடத்திற்குச் செல்லுங்கள். 60இப்பொழுது, என்னுடைய விலையேறப்பெற்ற நண்பர்களே, உங்களுடைய நேரத்தின் பெரும் பகுதியை நான் எடுத்து விட்டேன் என்பதை நான் அறியவில்லை. நான் எப்பொழுது வந்தேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஒன்பது முப்பது அல்லது பத்து மணியா, அல்லது வேறெதாவதா? பத்து மணி. என்னால்... உண்மையாக அவ்வளவு நேரமா? என்னால் நம்பவே முடியவில்லை. வியாதியஸ்தருக்காக ஜெபிக்க மாத்திரமே நமக்கு நேரம் இருக்கின்றது. அவர்களுக்கு நாம் அதை உறுதி கூறியிருந்தோம். இப்பொழுது, ஒரு நிமிடம். நீங்கள் எங்களுக்கு பதினைந்து நிமிடங்கள் மாத்திரம் தருவீர்களா.... என்னுடைய கைக்கடிகாரத்தின்படி பதினைந்து நிமிடம் மாத்திரமே என்று நான் நம்புகிறேன். 61கவனியுங்கள். அதில்.... நீங்கள் வியாதிப்படுவீர்களானால் உங்களுடைய முதல் வேலை உங்களுடைய மருத்துவரிடம் செல்வதேயாகும். அவரால் முடிந்த எல்லாவற்றையும் அவர் செய்கின்றார். அவராலே செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் ஒரு மகத்தான நிபுணரிடம் செல்ல உங்களுக்கு உரிமையுண்டு. இப்பொழுது, நாம் மருத்துவர்களுக்கு எதிராக இல்லை. என்னுடைய சிறுவயது தோழர்களான அநேக விலையேறப்பெற்ற மருத்துவ நண்பர்கள் எனக்கு உண்டு, தேவனில் விசுவாசம் கொண்டிருக்கும் அருமையான நபர்கள். நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன், அவர்களும் கூட எனக்கு ஜெபம் செய்கின்றனர். அது சரி. அவர்களாலே எதுவுமே செய்ய முடியாத அளவிற்குரிய நோயாளிகள் அவர்களிடத்தில் வருவர். அநேக அருமையான மருத்துவர்கள், அவர்களுடைய பெயரை நான் கூறப்போவதில்லை. ஒருவேளை அவர்கள் பரிசுத்த ஆவியினாலும் மற்றவைகளாலும் நிரப்பப்படாதவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அருமையான மனிதர். அவர்கள் “சகோதரன் பிரான்ஹாம், இந்த விதமான கேஸ்களை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை; நீர் அதை எடுத்துக்கொள்வீரா?'' என்று கூறுவர். நான், ''அதை அனுப்புங்கள். நான்... என்னால் அதைச் செய்ய முடியாது. நான் அதை இயேசுவிடம் அனுமதித்து விடுகிறேன், சமர்ப்பித்து விடுகிறேன், அவர் அதைச் செய்யட்டும்'' என்று கூறுவேன். பாருங்கள்? ஆதலால் அது அருமையானது. 62ஆனால், கவனியுங்கள். சொஸ்தமாகுதல் என்பது நடந்தேறுகிறது என்றால், அதை செய்யும் ஒருவர் கிறிஸ்துவாகத்தான் இருக்கும். மருத்துவர் ஒரு தடையை நகர்த்தக்கூடும், ஒரு பல்லைப் பிடுங்கக்கூடும், அல்லது ஒரு இடத்தை அறுத்து, பெருங்குடலின் அதிகபடியான வளர்ச்சியை (appendix) எடுக்கக்கூடும், புற்று நோயை எடுக்கக்கூடும், உடம்பில் உண்டாகும் புறச்சதை வளர்ச்சியை வெட்டி எடுக்கக்கூடும், அல்லது அறுவைச் சிகிச்சை செய்யக்கூடும், அல்லது ஏதோ ஒன்றாயிருக்கக் கூடும், கிருமிகளை அழிக்கும்படியாக உனக்குள் விஷத்தை செலுத்தக்கூடும். ஆனால் தேவனைத் தவிர வேறொன்றும் சுகமளிக்காது, அது திரும்ப வளருகின்ற வகையில், அது ஒரு சிருஷ்டிப்பாக இருக்க வேண்டும். ஆகவே ஒருமருந்தும் சிருஷ்டிக்காது, பாருங்கள். ஒரே ஒரு சிருஷ்டிகர் மாத்திரமே உண்டு, அது தேவன் ஆகும். பிறகு, சங்கீதம் 103, பாருங்கள். எல்லா வேத வாக்கியங்களும் உண்மையாக இருக்கின்றன. ''உன் நோய்களை எல்லாம் குணமாக்குகிற கர்த்தர் நானே.“ மருத்துவருக்கு அதில் பங்கில்லை என்பதல்ல. ஆம், அவருக்கு உண்டு. நான் என்னுடைய புயத்தை உடைத்துக் கொள்வேனானால், அந்த புயத்தை சரியாக எவ்வாறு அமைக்க வேண்டும் என்று அறிந்திருக்கின்ற ஒரு மருத்துவரிடம் செல்ல வேண்டியது என்னுடைய கடமையாகும், ஆனால் அந்த புயத்தை அவரால் சுகமாக்க முடியாது. அந்த புயத்தை அவராலே அமைக்க மாத்திரமே தெரியும், எலும்புகளை திரும்பவுமாக சரியான இடத்தில் அமைக்க. ஆகவே பிறகு தேவன் கால்ஷியம் இன்னும் மற்றவைகளை அமைத்து, என்னுடைய புயத்தினுள் அந்த பொருளை சிருஷ்டிக்கின்றார், அது மறுபடியுமாக அதை ஒன்றாக சேர்க்கத்தக்கதாக வளர்ந்து விடுகிறது. சுகமளிப்பவர் தேவன் தான். பாருங்கள்? 63இப்பொழுது, இந்த வாரம் நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறோம். யூதரின் காலத்திலே, வியாதியஸ்தரின் மேல் கைகளை வைப்பதே ஜனங்களுக்கான யூத பாரம்பரிய பழக்கமாகும். அதைத்தான் அவர்கள் செய்தனர். எல்லா காரியத்திற்கும் கைகளை வைக்கும் பழக்கம் இருந்தது. அது ஒரு யூத முறைமையாகும். ஆனால் புறஜாதிகளிடம் அக்காரியமானது ஒருபோதும் இல்லாதிருந்தது, இல்லவே இல்லை. யூத ஆசாரியனாகிய யவீருவின் குமாரத்தி மரித்தபோது, அவன் இயேசுவிடம், ''நீர் வந்து என் குழந்தையின் மீது உமது கைகளை வையும் அப்பொழுது அவள் பிழைப்பாள், உமது கைகளை அதன் மீது வையும்'' என்றான். ஆனால் அவர் அந்த ரோம் நூற்றுக்கு அதிபதியிடம் சென்றபோது, ''நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நீர் வெளியே எங்கே நின்று கொண்டிருக்கின்றீரோ அங்கிருந்து, வார்த்தையை மாத்திரம் சொல்லும்'' என்று கூறினான். இயேசு கொண்டிருந்த அதிகாரத்தை அவன் உணர்ந்திருந்தான். அவன் கூறினான், “நான் அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டவனாயிருக்கின்ற ஒரு மனிதன், எனக்கு...'' அவன் ஒரு நூற்றுக்கு அதிபதியாக இருந்தான். அப்படியென்றால் - அப்படியென்றால் அவனுக்கு கீழே நூறு மனிதர் இருந்தனர். அவன், ''நான் இந்த மனிதனைப் பார்த்து 'இதைச் செய் என்றால் செய்கிறான். மற்றொருவனை, 'அதைச் செய் என்றால் அவன் செய்கிறான். ஆகவே எல்லா வியாதியின் மேலும் எல்லா வியாகுலத்தின் மீதும், மற்ற எல்லா காரியத்தின் மீதும் உமக்கு அதிகாரம் இருக்கின்றது. அவையெல்லாம் உம்முடைய கட்டளையின் கீழ் இருக்கின்றன. நீர்தான் மகத்தான தளபதி'' என்று கூறினான். அது எனக்கு விருப்பமானது. அது இயேசுவின் இருதயத்தையே தொட்டது. ஆகவே அப்பொழுது அவர் திரும்பி, அந்த யூத ஜனங்களிடம், “இஸ்ரவேலுக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை” என்று கூறினார். 64ஒரு புறஜாதியான கிரேக்க, சீரோபோனிக்கியா ஸ்திரீ அவரிடம் வந்து, ''கர்த்தாவே, அங்கே படுத்துக் கொண்டிருக்கின்ற ஒரு குழந்தை எனக்கு உண்டு, பிசாசு அவளை பீடித்து, அல்லல் படுகிறாள்'' என்றாள். ஒருவேளை அவளுக்கு இழுப்பு நோய் இருந்திருக்கலாம் அல்லது ஒரு விதமான மனநோய் இருந்திருக்கலாம். அவள், ''அவள் மிக மோசமான நிலையில் இருக்கின்றாள். அவளை நீர் சொஸ்தமாக்குவீரா?'' என்றாள். ஆகவே அவர் அவள் விசுவாசத்தை சோதித்தார். “என்ன,'' அவர், ''பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு கொடுக்கிறது நல்லதல்ல'' என்றார். அவளை ஒரு நாய் என்றழைத்தார். அந்நாட்களிலே ஒரு நாய் என்பது... ஒரு பன்றிக்கு இணையாக கருதப்பட்டது, இருந்த வைகளிலேயே கீழ்த்தரமான ஒன்றாக இருந்தது. ”பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களாகிய உங்களுக்கு கொடுப்பது எனக்கு உகந்த காரியம் அல்ல'' என்றார். அவள், “அது மெய்தான் ஆண்டவரே'' என்றாள். ஓ, அது எனக்கு பிடித்தமான ஒன்றாகும். ”அது தான் உண்மை. ஆனாலும் மேஜையின் கீழிருக்கும் நாய்க் குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னும் என்பது உமக்குத் தெரியுமே'' அது அவரைத் தொட்டது. அன்றொரு நாள், ஹாட்டி, நீ செய்த சரியான காரியத்தை போன்று, அவள் செய்தாள். அவர் திரும்பி ''நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப் போயிற்று'' என்று கூறினார். அவர் அவளிடம் சென்று அவள் மீது கைகளை வைக்க வேண்டிய அவசியமே இல்லாதிருந்தது. 65பெந்தெகொஸ்தேயின் நாளிலே பரிசுத்த ஆவி விழுந்த பிலிப்பு சமாரியாவிற்கு சென்றான். அவர்கள் பாதி யூதராக இருந்தனர், ஆதலால், அவன் அங்கே சென்றபோது, பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக அவர்கள் மேல் அவன் கைகளை வைக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் ஒருவர் மீதும் பரிசுத்த ஆவி இன்னுமாக வரவில்லை, ஆதலால் அவர்கள் பேதுருவை வர வழைத்தனர். அவர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர், ஆதலால் தலைமையிடமாகிய எருசலேமிற்கு அவர்கள் சென்று பேதுருவையும் யோவானையும் அழைத்து வந்தனர். ஆகவே அவர்கள் வந்து அவர்கள் மேல் கைகளை வைத்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றனர். பிறகு பேதுரு கொர்நேலியு வீட்டிற்கு சென்றான்.... பாருங்கள், அவர்கள் மீது அவன் கைகளை வைக்க வேண்டியதாய் இருந்தது. கவனியுங்கள், அப்போஸ்தலர்:19, எபேசுவிலிருந்த அந்த யூத குழுவிற்கு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக அவர்கள் மீது அவன் கைகளை வைக்க வேண்டியதாய் இருந்தது. ஆனால் கொர்நேலியுவின் வீட்டிலோ, “இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கினார். ''கைகளை வைத்தல் இருக்கவில்லை. சத்தியத்தை அவர்கள் கேட்டபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கினார். அவர்கள் பசியாயிருந்து அதற்காக காத்துக் கொண்டிருந்தனர். 66இக்காலை, சுகமளிப்பிற்காக நீ பசியாக இருக்கின்றாயா? அப்படியானால் இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்றால், பரிசுத்த ஆவியானர் தாமே பேசட்டும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி.] ''நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்று அவர் கூறினார் அல்லவா? தாம் யூதர்களின் மேசியா என்று ஜனங்களிடம் அவர் எவ்வாறு அறிவித்தார்? அதை யூதர்களுக்கு அவர் எவ்விதம் செய்தார்? அவர்களுடைய இருதயத்தின் ரகசியங்களைக் கூறினதின் மூலமே. அவர்கள் அவரை, அந்த மேசியாவை அடையாளம் கண்டு கொண்டனர். அது உண்மை என்று எத்தனைப் பேருக்கு தெரியும்? [''ஆமென். நிச்சயமாக.] பேதுரு வந்த போது, அவர், “உன்னுடைய பெயர் பேதுரு” என்றார். ஆகவே கூறினார்... அல்லது, ''நீ கேபா என்னப்படுவாய், நீ பேதுரு என்றழைக்கப்படுவாய். உன் தகப்பனுடைய பெயர் யோனா.'' அவ்வளவு தான். அவர் தான் அந்த மேசியா என்று அவன் அறிந்து கொண்டான். பிலிப்பு சென்று நாத்தான்வேலை பார்த்தபோது, அவர், ''நீ ஒரு... நீ ஒரு அருமையான, நேர்மையான மனிதன்'' என்றார். அவன், இப்பொழுது, ரபி என்னை எப்படி உமக்குத் தெரியும்?'' என்றான் . ''பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன், மரத்தின்கீழ் நீ இருந்தபோது, நான் உன்னைக் கண்டேன். மலைகளைச் சுற்றி பதினைந்து மைல்கள், ஒருநாள் பிரயாணம், ''நான் உன்னைக் கண்டேன்'' என்றார். அவன், ''நீர் தேவனுடைய குமாரன், இஸ்ரவேலின் ராஜா'' என்றான். 67அவர் சமாரியர்களிடத்திற்கு சென்றார். அவர் அங்கே செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஏன்? அவர் சமாரியர்களிடம் சென்றார். ஆகவே அங்கே ஒரு சமாரிய ஸ்திரீ இருந்தாள், ஆதலால் மேசியாவின் அடையாளத்தை அவளுக்கு அளிக்க வேண்டுமென்று அவர் எண்ணினார். ஆகவே அவர், “போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு இங்கே வா'' என்றார் அவள், “எனக்கு புருஷன் இல்லை'' என்றாள். அவர், ''நீ சரியாகச் சொன்னாய், உனக்கு ஐந்து புருஷர் உண்டு'' என்றார். அவள், ''ஐயா,'' என்றாள், அவள் இவ்விதமாகக் கூறினாள், ''மேசியா வர வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், அவர் ஒரு தேவன் - தீர்க்கதரிசியாக இருக்கப் போகின்றார். ஆகவே அவர் வரும்போது இக்காரியங்கள் எங்களுக்கு அறிவிப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆதலால், நீர் ஏதோ ஒருவிதமான தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்.'' அவர், ''நான் தான் அந்த மேசியா, நீ யாரைக் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றாயோ அவர் நானே'' என்றார். ஒரு வேசி, பதறல் கொண்டு, அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்த அவள், அந்த தண்ணீர் குடத்தை வைத்து விட்டு, பட்டணத்திற்குள் ஓடி, அந்த மனிதரிடம், “என் இருதயத்தில் இருந்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அது அந்த மேசியா அல்லவா? அது அந்த மேசியா அல்லவா?'' என்று கூறினாள். 68ஒரு சமயம் கூட அது புறஜாதிகளிடம் நடத்தப்படவேயில்லை. இல்லை, ஐயா. சாயங்கால வெளிச்சங்கள் நேரம். இது அவர்களுடைய நாள். உலகத்தை கட்டுப்படுத்துவதற்காக, யூதர்கள் இப்பொழுது ஒரு தேசத்தில் இருக்கின்றனர். ஒரு காலத்தில் அவர்கள் அதைச் செய்தனர். அவர்கள் திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர். அங்கே அத்தி மரம் தன்னுடைய துளிர்களை விடுவதை கவனியுங்கள். யூதனை கவனியுங்கள், அவன் எங்கேயிருந்தாலும் சரி, அவன் தேவனுடைய நாள் காட்டி என்று நீங்கள் கண்டு கொள்வீர்கள்.அவர் இஸ்ரவேலை ஒருபோதும் மறப்பதில்லை. ஆனால் இஸ்ரவேல் குருடாக்கப்பட வேண்டியதாயிருந்தது. இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் யூத பெண்மணியின் சார்பாக இதை நான் கூறவில்லை. நமக்கு ஒரு தருணம் அளிக்கப்படுவதற்காக இஸ்ரவேல் குருடாக்கப்பட வேண்டியதாய் இருந்தது. அவர்களை நேசியுங்கள். கவலைப்படாதீர்கள், அவர்கள் மறுபடியுமாக மலருவார்கள். ''பச்சைப்புழு விட்டதை, முசுக்கட்டைப் பூச்சி தின்றது. முசுக்கட்டைப் பூச்சி விட்டதை, வெட்டுக்கிளி தின்றது. ஆனால் நான் அதை திரும்பக் கொண்டு வருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.'' நாம் உள்ளே கொண்டு வரப்படுவதற்காக, அது சிறிதளவு அரித்தழிக்கப்பட்டது. நம் கண்கள் திறந்துள்ளன. 69இப்பொழுது அது என்ன? நம்முடைய நாள் முடிந்து கொண்டிருக்கின்றது. தேவன் கூறின விதமாகவே, யூதர்களெல்லாம் மறுபடியுமாக ஒன்று கூடத் துவங்குகின்றனர். சாயங்கால வெளிச்சங்களும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. எதன் மேல்? சாயங்காலத்திலே வெளிச்சங்கள் எங்கே பிரகாசிக்கின்றன? மேற்கின் மேல். துவக்கத்திலே, கிழக்கத்திய மக்களாகிய யூதரின் மேல் கிழக்கில் அது பிரகாசித்தது. ஸ்தாபனங்களின் நாள் மற்றும் இன்னுமாக ஒரு இருண்ட நாளாக இருந்தது, ஆனால் சாயங்கால வெளிச்சம் புறஜாதிகள் மீது, மேற்கு பாகத்தின் மீது பிரகாசிக்கும். இதோ நாம் இப்பொழுது முடிவு காலத்தில் இருக்கின்றோம். நாம் - நாம் மேற்கு கரையில் இருக்கின்றோம். நீ அதற்கு மேல் கடந்து செல்வாயானால், மறுபடியுமாக நீ கிழக்கை நோக்கிச் செல்வாய். நாகரீகமும் அவ்விதமாகத்தான் பிரயாணம் செய்தது. ஆதலால் சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசிக்கின்றன. ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கின்றார்.'' 70நாம் ஜெபம் செய்வோம். இப்பொழுது, கர்த்தாவே இவையெல்லாம் உம்முடையவைகள். ''வார்த்தை விசுவாசம் கேள்வியினாலே வரும், தேவனுடைய வார்த்தையை கேட்பதினால்“ ஆகவே, தேவனே, நீர் தேவன் என்பதை ஜனங்களுக்கு நிரூபிக்கும்படியாக உம்முடைய வார்த்தைகளை உறுதிப்படுத்தும். இப்பொழுது இந்த காலை வேளையில் நீர் தேவன் என்றும், நித்திய ஜீவனிற்குரிய உண்மைகளை அவர்களுக்குக் கூறுகின்றது. உம்முடைய ஊழியக்காரன் நான் என்றும் அறியப்படுவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். இங்கே அநேக ஜனங்கள் இருக்கிறார்கள் என்றும், நிறைய ஜெப அட்டைகள் கொடுக்கப்பட்டன என்றும் பில்லி என்னிடம் கூறினான் என்று நான் நம்புகிறேன். அதை நிருபிக்க அல்லது நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் யாவரையும் நம்மால் கொண்டு வரமுடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, தேவன் இதை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் எல்லோருக்குமே இது தெரியுமா? அவர் பூமியின் மேல் இருந்த போது, எவரையும் சுகப்படுத்த வேண்டிய அவசியம் இயேசுவிற்கு இல்லை. அது உங்களுக்கு தெரியுமா? ஆனால் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறத்தக்கதாக, அவர் அதைச் செய்தார். அது சரியா? ''சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்'' என்ற வார்த்தை நிறைவேற வேண்டி இதை அவர் செய்கின்றார். 71சோதோமின் நாளிலே பில்லிகிராஹாம், ஓரல் ராபர்ட்ஸ் போன்றவர்களை அவர்கள் கொண்டிருந்தனர் என்பதை நீங்கள் கவனியுங்கள். அவர்களைப் போன்ற மனிதர் சென்று பட்டணத்தில் இருந்த சோதோமியர்களுக்குப் பிரசங்கித்தனர். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஆபிரகாம் மற்றும் அவனுடைய குழுவும் வெளியே அழைக்கப்பட்ட, வெளியே ஒரு பக்கத்தில் குழுவாக இருந்தனர். எப்படிப்பட்ட ஒரு தூதன் அவர்களுடனே தங்கி அவர்களுக்கு பிரசங்கம் செய்தார்? கவனியுங்கள். அங்கே உட்கார்ந்திருந்த அந்த மனிதன் தாம் ஒருவேறு தேசத்திலிருந்து வந்திருக்கின்ற ஒரு அந்நியன் என்று கூறினார். அவருடைய ஆடைகளின் மேல் தூசி படிந்திருந்தது. தாயிடத்திலிருந்து பால் குடித்த ஒரு இளங்கன்றின் ஒரு பங்கை அவர் புசித்தார். ஆபிரகாமோடு சில சோள ரொட்டிகளை சாப்பிட்டார். அவர் அதைச் செய்து கொண்டிருக்கையில். ஒரு வேளை அவன் ஒரு ஈக்களை ஓட்டும் பொருளைக் கொண்டு ஈக்களை துரத்திக் கொண்டிருந்தான், அவர் அங்கே உட்கார்ந்து புசித்தார். ஆகவே பிறகு அவர்... ஆபிரகாம் அவரை, ''சர்வவல்லவரான ஏலோஹிம்'' என்றழைத்தான். ஆனால் அவர் ஒரு மனிதனாக இருந்தார். தம்முடைய ஜனங்களோடே தேவன். 72இப்பொழுது அவர் என்ன செய்தார், எப்படி அவருக்குத் தெரியும் என்பதைக் கவனியுங்கள். அவர் அங்கே உட்கார்ந்து ஆபிரகாமோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் கூறினார். இப்பொழுது முதல் முறையாக ஆபிரகாமை சந்தித்தார், தான் அறிந்திருந்தவாரே, ஆபிரகாம் அவரை முதல் முறையாகக் கண்டான். ஆகவே இந்த மற்ற புருஷர் சோதோமிற்குள் செல்ல வேண்டியவர்களாக இருந்தனர். ஆகவே அவர்கள் அங்கே சென்று, பிரசங்கித்து ஜனங்களைக் குருடாக்கினர். சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல் அதைத்தான் செய்கின்றதல்லவா, அவிசுவாசியை குருடாக்குதல்? கவனியுங்கள். உண்மையான, விருத்தசேதனம் பண்ணப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட சபையாகிய ஆபிரகாமுடனும் அவனுடைய குழுவுடனும் இந்த ஒருவர் அங்கே தங்கிவிட்டார். அவர் கூறினார். லோத்து பட்டணத்தில் வாழ்ந்து கொண்டு சிறந்த பொழுதுகளைக் கொண்டிருந்தவனாக இருந்தான். அவனுடைய குமாரத்திகள் அவனுடைய குமாரர் மற்ற காரியமும் எப்படியிருந்தன என்பதைப் பாருங்கள். சோதோம், பாவம்மற்ற எல்லா காரியமும். அதுதான் பெயரளவில் இருக்கின்ற சபையாகும். இன்றைய உலகத்தைப் போலவே இருந்தன. ஆனால் ஆவிக்குரிய சபையோ, வெளியே அழைக்கப்பட்ட, வேறு பிரிக்கப்பட்ட குழுவாகும். அவர்களிடம் எப்படிப்பட்ட ஒரு தூதன் வந்தார்? இப்பொழுது அதை நாம் கவனிப்போம். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், ''அப்பொழுது எப்படியிருந்ததோ, மனுஷகுமாரன் வெளிபடும் போதும் அவ்வாறே இருக்கும்'' என்று உங்களுடைய கர்த்தர் கூறினார். இயேசு அவ்விதம் கூறினார். “வானங்களும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் என்னுடைய வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.'' இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், அமைதியாயிருங்கள். 73இப்பொழுது, இந்த தூதன் ஆபிரகாமோடே பேசினார். அவர், ''ஆபிரகாமே, உன்னுடைய மனைவியாகிய சாராள் எங்கே?'' அவன் விவாகமானவன் என்பது எப்படி அவருக்குத் தெரியும்? அவனுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்பது எப்படி அவருக்குத் தெரியும்? அவளுடைய பெயர் சாராள் என்பதும் எப்படி அவருக்குத் தெரியும்? அது வினோதமாய் இருக்கிறதல்லவா? ஆபிரகாம், “அதோ அவள் உமக்கு பின்பாக கூடாரத்தில் இருக்கிறாள்'' என்று கூறினான். அவர் ''ஆபிரகாம், நீ தேவனை விசுவாசிக்கிறாய் என்பதை பார்க்கும் போது, நீ உலகத்திற்கு, எல்லா புறஜாதிகளுக்கும் சுதந்திரவாளியாக இருக்கப் போகின்றாய், எல்லாம் உன்னுடைய வித்தின் மூலமாக இராஜ்ஜியத்திற்குள் கொண்டு வரப்படும். உன்னுடைய வாக்குத்தத்தம் உனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த வாக்குத்தத்தத்தையும் நான்... எந்த காரியத்தையும் உனக்கு மறைத்து வைக்க மாட்டேன் ஆபிரகாம்'' என்று கூறினார். ஓ, அது எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உனக்கு நான் மறைக்க மாட்டேன் ஆபிரகாம். ஆனால் அந்த குழந்தைக்காக இருபத்தைந்து வருஷமாக நீ என்னை விசுவாசித்தாய். இப்பொழுது உனக்கு நூறு வயதாகின்றது. அவளுக்கு தொண்ணூறாகின்றது. ஆனால், ஆபிரகாம் உற்பவக் காலத்திட்டத்தில்... ஆண் பெண் இருபாலாரும் இருக்கின்ற கூட்டத்தில், நான் என்ன கூற வருகிறேன் என்பது உங்களுக்குப் புரிகின்றதா, அந்த இருபத்தெட்டு நாட்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக அல்லது இன்னுமாக, ஆம், அதற்கு முன்பாக அறுபதாண்டுகள் அவளுக்கு நின்று போயிருந்தது, “சாராளோடு உற்பவ காலத் திட்டத்தில் நான் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன், நீ அந்தக் குழந்தையை கொண்டு வரப்போகிறாய்'' என்றார். ஆகவே, அவருக்கு பின்னால் மூடப்பட்டிருந்த அந்த கூடாரத்தில் இருந்த சாராள் தன் உள்ளத்திலே நகைத்தாள். அப்படியே.. (உள்ளுக்குள்ளே சிரிக்கின்ற சிரிப்பை சகோ. பிரான்ஹாம் பாவனை செய்து காட்டுகின்றார்-ஆசி). அவள் “என் ஆண்டவனுடன் எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ?'' என்று தனக்குள்ளாக நினைத்துக் கொண்டாள். உங்களுடைய புருஷனை நீங்கள் எவ்வாறு அழைக்கிறீர்கள்? ''நான் கிழவியும், அவர் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, என் ஆண்டவனுடன் எனக்கு மறுபடியும் இன்பம் உண்டாயிருக்குமோ?'' அந்த தூதன், அவருடைய முதுகு பின்புறமாக திரும்பியிருக்க, “ஏன் சாராள் நகைத்தாள்? எது அவளை நகைக்கும் படிக்குச் செய்கின்றது?'' என்றார். உங்களால் பார்க்க முடிகின்றதா? அங்கேயிருந்த தெரிந்து கொள்ளப்பட்ட சபையை சந்தித்த அவர், எவ்விதமான ஆவியாக எப்படிப்பட்ட ஒரு தூதனாக அவர் இருந்தார்? இப்பொழுது, அவருடைய வருகைக்கு முன்பாக அதே காரியம் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். அவருடைய வருகையின் அடையாளம் அதுவாக இருக்கும். 74ஜெப வரிசையை நாம் அழைப்போம். அவர் வாக்குத்தத்தத்தை செய்தார். அவர் அதை காத்துக் கொள்கிறார். இப்பொழுது, இங்கே எவ்வளவு நிற்க முடியுமோ அந்த அளவிற்கு நான் ஐந்து அல்லது ஆறு பேர்களை கூப்பிட வேண்டும். மற்ற எல்லோரும் விசுவாசியுங்கள். கவனியுங்கள். உங்களுக்கு ஜெப அட்டை இல்லாமல் இங்கே வருவீர்களானால், அதற்கு ஒரு அர்த்தமும் இல்லை. நான் உங்களுக்கு சவாலிடுகிறேன். இங்கே... இங்கே, ஆபிரகாமின் வித்து இயேசு, அவர் பூமியில் இருந்தபோது. இதைத்தான் செய்தார். ஒரு நாள், அவர் ஒரு ஜனக்கூட்டத்தின் நடுவே கடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் எல்லோரும், “ஹலோ, ரபி. காலை வணக்கம், டாக்டர். எப்படி இருக்கிறீர்கள், சங்கை அவர்களே? (Reverend - ரெவரென்ட்), உம்மை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, சங்கை அவர்களே. நீர் இங்கு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இங்கிருக்கையில் ஒரு கூட்டத்தை நடத்தப் போகின்றீர்களா?'' என்றனர். ஒரு சிறிய ஏழை ஸ்திரீக்கு ஒரு தேவை இருந்தது, ஆதலால் அவள் அந்த கூட்டத்தினிடையே புகுந்து அவருடைய வஸ்திரத்தை தொட்டாள். ஏனெனில் அவள் அந்த பரிசுத்த மனிதனை மாத்திரம் நான் தொட்டால்'' என்று தனக்குள்ளாகக் கூறிக்கொண்டாள். பாருங்கள்? அவளுடைய விசுவாசத்தைப் பாருங்கள்? ''நான் அவரைத் தொட்டால் சொஸ்தமடைவேன்'' ஆகவே அவள் அவரை தொட்டாள். பிறகு கூட்டத்திற்குள்ளாக அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அவள் “ஓ, நான் சொஸ்தமாக்கப்பட்டிருப்பது நிச்சயம், ஏனெனில் நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசித்தேன், நான் சுகப்படுத்தப்பட்டேன் என்பது எனக்குத் தெரியும். சரியாக இப்பொழுதே அந்த பெரும்பாடு நின்று போகின்றது என்பதை நான் விசுவாசிக்கிறேன். நான் அப்படியே விசுவாசிக்கிறேன்'' என்றாள். இயேசு நின்று, “என்னைத் தொட்டது யார்?'' என்று கேட்டார். எப்படிப்பட்ட ஒரு கேள்வி! பேதுரு, ''ஐயரே, உமக்கு என்ன ஆயிற்று?'' என்று கூற ஆரம்பித்தான். அவரை அவன் கடிந்து கொண்டான் என்று வேதம் கூறுகின்றது. ''நீர் என்ன கூறுகிறீர்? என்ன, எல்லோரும் உம்மை தொட்டுக் கொண்டிருக்கிறார்களே? எப்படி நீர் கூறலாம். நீர் மேசியாவாயிருக்கையில் இந்த ஜனங்களுக்கு முன்பாக உம்மைக் குறித்து தெரியப்படுத்த பயப்படுகிறீரா? ''என்னைத் தொட்டது யார்?'' என்கிறீர். கடந்த நிமிடத்தில் ஐந்நூறு பேர்கள் உம்மைத் தொட்டிருப்பார்கள் என்று நான் பந்தயம் கட்டுகிறேன். அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நீர் எப்படி கூறலாம்?'' என்றான். அவர், ஆனால் இது ஒரு வித்தியாசமான தொடுதலாக இருந்தது. நான் பலவீனமடைந்ததை பகுத்தறிய முடிகிறது,'' என்றார். வல்லமை, வல்லமை என்பது பலம் என்று எவரும் அறிவர். “நான் பலவீனமடைந்தேன். பலம் என்னை விட்டு வெளியே சென்றது'' ஆகவே அவர் சுற்றி, சுற்றி பார்த்தார். பாருங்கள், அங்கே எங்கோ விசுவாசம் இருந்தது. அவர் சுற்றிப் பார்த்தார், அந்த சிறிய ஸ்திரீயை அவர் கண்டார். அவருக்குள் இருந்த பரிசுத்த ஆவி முழுமையாய் அவரை சரியாக அந்த சிறிய ஸ்திரீயிடம் நடத்தினது. அவள் கொண்டிருந்த அந்த பெரும்பாடு, அவர், ''உன்னுடைய விசுவாசம்! இப்பொழுது, நான் உன்னை சொஸ்தபடுத்தவில்லை. உன்னிடம் அதைச் செய்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை, ஆனால் உன்னுடைய விசுவாசமே, (யாரிடத்தில்) ”நான் பிரதிநிதித்துவம் செய்கின்ற தேவனுக்குள்ளான, உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது'' என்று கூறினார். 75இப்பொழுது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று வேதம் கூறுகின்றது. அது, கோட்பாட்டிலும் மாறாதவர், வல்லமையிலும் மாறாதவர், தன்மையிலும் மாறாதவர் என்பதே. கிறிஸ்துவுக்குள் வாசம் செய்த அதே தேவன், சபையினுள் வாசம் செய்கிறார், அதற்கும் மேலாக அல்ல. அவர் அளவில்லாமல் கொண்டிருந்தார், நாமோ அதை அளவின்படி கொண்டிருக்கிறோம். ஆனால் சமுத்திரத்திலிருந்து ஒரு கரண்டி அளவு தண்ணீரை நீங்கள் எடுத்தால், முழு சமுத்திரத்தில் இருக்கின்ற அதே ரசாயனங்கள் கரண்டியில் இருக்கின்ற தண்ணீரிலும் இருக்கும். அதை நினைவில் கொள்ளுங்கள். அது சரி. அதே தேவன் தான். இப்பொழுது வேதாகமம் எபிரேயரில், ''இயேசு கிறிஸ்து சரியாக இப்பொழுது நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராக இருக்கிறார்'' என்று கூறுகிறது. எத்தனைப் பேர் அதை அறிவீர்கள்? [சபையார், ''ஆமென்“ என்கின்றனர்- ஆசி] நல்லது, அவர் அதே பிரதான ஆசாரியராக இருப்பாரானால், அவர் தொடப்பட்டால் அதே விதமாகத்தான் செய்வாரல்லவா? நாம் என்னவாயிருக்கிறோம்? அவருடைய வாயாக இருக்கிறோம். நாம் நம்மை அவரிடம் அர்ப்பணிப்போம். ஆகவே நம்முடைய வார்த்தைகள் நம்முடைய வார்த்தைகள் அல்ல. ”என்னத்தைப் பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள், பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, அது உங்களுக்குள் வாசம் செய்யும் பிதாவானவரே. அவரே பேசுகிறார்.'' 76பில்லி, அது ஒன்றிலிருந்து ஐம்பது அல்லது ஒன்றிலிருந்து நூறு வரையா? அது எங்கேயிருந்து? (சகோதரன் பில்லி பால் பிரான்ஹாம் ''நூறு'' என்கிறார் - ஆசி). ஒன்றிலிருந்து நூறு. வழக்கமாக, முதல் அட்டைக்கு ஜனங்கள் போட்டி போடுவதுண்டு, ஆதலால் அதை ஒரு நிமிடத்திற்கு தனியே விட்டு விடுவோம். ஒரு விநோத எண்ணிலிருந்து நாம் துவக்குவோம், முப்பது என்று வைத்துக் கொள்வோம். எண் முப்பது அட்டையை வைத்திருப்பது யார்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். என்ன - என்ன எழுத்து? (சகோதரன் பில்லி பால் 'பி' என்கிறார் - ஆசி). B, B முப்பது. சரி. உங்களுடைய சட்டைப் பைகளில் பாருங்கள், உங்கள் ஜெப அட்டையை வெளியில் எடுங்கள். ஆகவே அங்கே.... ஒரு சகோதரர் ''அங்கே'' என்கிறார் - ஆசி). நல்லது கவனியுங்கள். முப்பது இல்லாவிட்டால் என்ன, வேறொன்றிலிருந்து நாம் துவக்கலாமே. நாம் துவங்குவோம்.... (சகோதரன் பில்லி பால், ''அங்கே பின்னால்“ என்கிறார்-ஆசி) என்ன கூறுகிறார்? (சகோதரன் நெவில், ”அதோ அங்கிருக்கிறார்“ என்று கூறுகிறார். சகோதரன் பில்லி பால் ''இடது புறமாக, பின்புறத்தில்'' என்கிறார்) ஓ, என்னை மன்னிக்கவும். என்னை மன்னிக்கவும். சரி. இங்கே வாருங்கள், ஐயா. முப்பத்தொன்று. ஜெப அட்டை முப்பத்தொன்றை வைத்திருப்பது யார்? முப்பத்தொன்று, உங்கள் கையை உயர்த்துவீரா. ஐயா, இங்கே வாருங்கள். முப்பத்திரண்டு. [ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.]... சொற்களை அவருடன் கொண்டிருந்தார். அவருடைய பெயரைக்கூட எனக்குத் தெரியாது. ஆனால் நான்... ஆகவே, வெளிப்படையாகக் கூறுவேனானால், அவருக்கு என்ன பிரச்சனை என்பது எனக்கு - எனக்கு தெரியாது. தேவன் அதை அறிவார். அவருக்கு என்ன தொந்தரவு என்று என்னால் உங்களுக்கு கூற முடியவில்லை. ஆனால் மற்ற எல்லோரும் எனக்கு அந்நியர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களை நான் அறியேன். உங்களைக் குறித்து எதுவும் எனக்கு தெரியாது என்று இங்கே உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஆம், ஐயா. 77இப்பொழுது, வேதாகமம் கூறுகிறது: ''பரிசுத்த ஆவியானவர் வரும் போது, அவர்...'' முதல் காரியமாக பரிசுத்த ஆவியானவர் செய்வார், என்ன? ''நான் போதித்தவைகளை, இந்த காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்துவார்.'' அது சரியா? பிறகு அவர் என்ன செய்வார், “வரப்போகும் காரியங்களை உங்களுக்கு காண்பிப்பார், இருதயத்தின் ரகசியங்களை வெளிப்படுத்துபவராக இருப்பார். '' இயேசு செய்த அதே கிரியைகளை அவர் செய்வார். இப்பொழுது, இயேசு, இரட்சிப்பின் திட்டத்தையும், சுகமளித்தலையும் கல்வாரியில் நிறைவேற்றினார் என்பது எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்-ஆசி). நிச்சயமாக. ஆகவே அது நிறைவேறியாகி விட்டது. அப்படித்தானே? ('ஆமென்') அது எல்லாம் முடிவடைந்து விட்டது. ஆனால் அவர் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவெனில் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவது அல்லது இன்னுமாக அவர் தேவன் என்றும் அவருடைய வாக்குத்தத்தத்தை காத்துக் கொள்பவர் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளும் நிலைக்கு கொண்டு வருவதேயாகும். ஆதலால் அப்படிச் செய்யும் போது பிரசங்கிகளை அவர் அபிஷேகிக்கிறார். இங்கே சுற்றிலும் நின்று கொண்டிருக்கிற இன்னும் பின்னால் இருக்கின்ற அருமையான மனிதர் தான் அவர்களாகும். அவர்கள் பிரசங்கிக்க அவர் அவர்களை அபிஷேகிக்கின்றார். ஒரு பிரசங்கியினுடைய ஏழை பதிலாள் (substitute) நான். நீங்கள் பாருங்கள், அதற்கு பதிலாக என்னுடைய பிரசங்கத்திற்கென்று அவர் இதை எனக்கு கொடுத்தார், ஏனெனில் நான் கல்வியறிவு இல்லாதவனும் ஒன்றும் அறியாதவனுமாய், ஒரு அறிவாளியாக, அல்லது ஒரு மாணவனாக, அல்லது ஏதோ ஒன்றாக இல்லாதவனாய் இருக்கிறேன். நான் என்ன கூற விழைகிறேன் என்று தெரிகிறதா? ஆனால் இந்த மனிதருக்கு அதைச் செய்வதற்காக வாய்ப்புகளை அவர் அளிக்கிறார், அவர்கள் எழும்பி ஏவுதலினால் ஊக்குவிக்கப்பட்டு பிரசங்கிக்கின்றனர். ஓ, நான் ஒருமணி நேரம் கூறும் காரியத்தை அவர்களால் ஐந்து நிமிடங்களில் இன்னும் அதிகமாக கூறமுடியும். ஏனெனில் ஊக்கத்தின் கீழே, ஒரு பீரங்கி அல்லது ஒரு இயந்திர துப்பாக்கி அதி வேகமாக சுடுவது போல, வேக சுத்தியலைப்போல காரியங்களை பதியவைப்பர். பாருங்கள்? ஏனெ... பாருங்கள் என்னுடைய வரம் வேறொன்றாக இருக்கின்றது. நான் என்னுடைய நேரத்தை எடுத்து அதை தியானித்து, காத்திருந்து பரிசுத்த ஆவியானவர் என்ன காட்டுகிறார்... (ஒலி நாடாவில் காலியிடம்)... 78ஏற்கெனவே முடிவு பெற்று விட்டது. ஆனால் இயேசு இங்கே இருக்கிறார் என்பதை ஏதோ ஒரு வழியில் இவரை விசுவாசிக்க செய்ய வேண்டும். இப்பொழுது இயேசு என்ன கூறினார்? ''அந்த அடையாளம், சோதோமில் இருந்தது போலவே கடைசி நாட்களிலும் செய்யப்படும்.'' ''நான் செய்கின்ற கிரியைகள்,'' ஆபிரகாமுடன் இருந்த அதே நபர், தாம் தான் என்பதை காண்பிக்கின்றார். “ஆபிரகாமிற்கு முன்னே, இருக்கிறேன் அவர் தான் அந்த தூதன். ஆகவே இங்கே அவர். இக்காலை வேளையில் நமக்குள் வாசம் செய்கின்ற அதே தூதன் இங்கே இருக்கிறார். இப்பொழுது, இந்த மனிதன் ஒருபொய்க்காரனாக இருக்கக்கூடும். இவர் ஒரு மாய்மாலக்காரனாக இருக்கக்கூடும். ஒருநாத்திகனாக இருக்கக்கூடும். ஒருக்கால் ஒரு- ஒரு பரிசுத்தவானாக இருக்கக்கூடும். இவர், இவரைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. இவர் இங்கே நின்று கொண்டிருக்கின்றார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து இவருக்கு வெளிப்படுத்துவாரானால், அப்படியானால் இவரே நீதிபதியாக இருக்கக்கட்டும். அவர் அறிவார். இவருடைய வாழ்க்கையில் என்ன இருந்தது என்பதை பரிசுத்த ஆவியானவர் தாமே இவருக்கு கூறுவாரானால், நிச்சயமாக கூறுவார், அது உண்மையாய் இருக்குமானால், தன்னுடைய ஜீவியத்தில் என்ன இருக்கும் என்பதை இவராலே விசுவாசிக்கக் கூடும். அது சரியா?அவர் வாழ்க்கையில் என்ன இருந்தது, என்ன இருக்கப் போகின்றது என்பதைக் குறித்து அவர் கூறுவாரானால், இப்பொழுது, அது சரியா அல்லது தவறா, அது இருந்ததா என்பதை இவர் அறிந்து கொள்வார். 79டாக்டர், இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்களும் தாயும், இருவரும், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் மற்றொரு டாக்டர், அவரும் ஸ்பிரிங்பீல்ட், மிசெளரியைச் சேர்ந்தவர். பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். அங்கே வெளியில் ஆல்பன் விடுதியில் தங்கியிருக்கும் நரைத்த தலையை உடைய மனிதன், உங்கள் பக்கத்தில் ஏதோ ஒன்றில் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் [அந்த சகோதரன் ''அது சரியே'' என்கிறார் - ஆசி]. கூறப்போனால் நீங்கள் இந்த இடத்தைச் சார்ந்தவரல்ல. நீங்கள் கனடாவைச் சார்ந்தவர்கள். ['ஆம். அது சரி'] பிரிட்டிஷ் கொலம்பியா. [''அது சரி] வான்கூவர். ['அது சரி'] நீங்கள் பின்லாந்திலிருந்து வருகிறீர்கள். ['ஆம்'] கீட்டோஸ். [பின்லாந்து பாஷையில் கீட்டோஸ் [Kiitos] என்றால், “உமக்கு நன்றி'' என்று அர்த்தம் - ஆசி]. [அந்த சகோதரன்” கீட்டோஸ், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக“ என்கிறார் - ஆசி]. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வீட்டிற்கு செல்லுங்கள்; நீங்கள் நலமாய் இருக்கிறீர்கள். இயேசுகிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார் [''ஆமென்'']. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த மனிதனை எனக்குத் தெரியாது. இப்பொழுது இவரிடம் நான் என்ன கூறினேன் என்பது எனக்குத் தெரியாது. அது பரிசுத்த ஆவியானவர் பேசுவதாகும். 80மற்றுமொரு அந்நியர். இந்த மனிதனை எனக்குத் தெரியாது, என்னுடைய வாழ்க்கையில் இவரை நான் கண்டதே இல்லை. நாம் அந்நியர்கள் தானே. அது சரியல்லவா, ஐயா? (அந்த சகோதரன் ''சரி. அது சரியே'' - என்கிறார் ஆசி). இந்த மனிதனை நான் பார்த்ததே கிடையாது, இவரைக் குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுது மிக பயபக்தியாக இருங்கள். இந்த மனிதனைக் குறித்து எதுவும் எனக்குத் தெரியவில்லை என்றால், கர்த்தர் இவரைக் குறித்து சிலவற்றை எனக்குக் கூறுவார். அப்படியானால் அதை செய்வது மனிதனுக்கு மேலாக ஏதோ ஒன்று என்பதை அது உறுதிபடுத்தும். அது சரியா? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி]. இப்பொழுது நீங்கள் மிக பயபக்தியாக இருந்து கவனிப்பீர்களானால், கவனமாயிருங்கள், எச்சரிக்கையாயிருங்கள். ஆகவே பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது கூக்குரலிடுவார், (brays), அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள். ஒரு அந்நியர். [அந்த சகோதரன் ''ஆம் ஐயா என்கிறார்'' - ஆசி]. முதலாவதாக, நீர் இரட்சிப்பை நாடுகிறீர். நீங்கள் ஒரு குடிகாரர். [''அது சரி''] அது முற்றிலும் சரி. ['அது சரி']. நீங்கள் இப்பட்டணத்தை சேர்ந்தவர் அல்ல. நீங்கள் வேறொரு பட்டணத்திலிருந்து வருகின்றீர், ஒரு இந்தியானா பட்டணம். ஆம். அது நியூ காஸில் அதைப் போன்ற ஏதோ ஒன்று என்று நான் நம்புகிறேன். [''நியூகாஸில். அது சரி. ஆம் ஐயா“] சரியாக. உ-ஊம். உங்களுடன் வேறு ஒருவரும்இருப்பதை நான் காண்கிறேன் யாரோ... நீங்கள் ஒரு ஸ்திரீயுடன் இருக்கிறீர்கள். அதுதொடர்... லைல் உட்ஸ் எங்கே? அது அவருடைய மனைவி ஆகும். [அந்த சகோதரன் ”அதுசரி' என்கிறார் - ஆசி]. அவள் இப்பொழுது இங்கே இருக்கிறாள். ['அது சரி] அவளுக்கும்ஜெபம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறாள். ஆம், ஐயா. உம்முடைய பிரச்சனை என்ன என்பதை தேவன் என்னிடம் கூறுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ''ஆம் ஐயா இருதயக் கோளாறு. தன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் அவள் சுகமாக்கப்படுவாள். உங்களை சாராயம் குடிக்கச் செய்கின்ற, உமக்குள் இருக்கின்ற அந்த பிசாசை நான் கடிந்து கொள்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள், மறுபடியும் குடிக்காதீர்கள். பாவங்களை எடுக்கும் அந்த விலையேறப் பெற்ற நாமத்திலே ஞானஸ்நானம் எடுங்கள். அந்த பிசாசை நான் கடிந்து கொள்கிறேன். அவன் உங்களை விட்டு கடந்து செல்வானாக. ஆமென். [அந்த சகோதரன் “உமக்கு நன்றி சகோதரனே” என்று கூறுகிறார் - ஆசி]. சென்று கொண்டேயிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. உங்கள் பாவங்கள் இப்பொழுது மன்னிக்கப்பட்டன. செல்லுங்கள், இனி பாவம் செய்யாதீர்கள். தேவனில் விசுவாசம் கொள்ளுங்கள். சந்தேகப்படாதீர்கள். உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் கொண்டு அதை விசுவாசியுங்கள். 81வாலிப ஸ்திரீயே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். கிறிஸ்து நம் இருவரையும் அறிந்திருக்கிறார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? கிணற்றடியிலிருந்த ஸ்திரீயையும் நம்முடைய இரட்சகரைப் போலவும் இங்கே இருக்கின்றது. நீ அவள் அல்ல, நான் அவர் அல்ல. ஆனால் அவருடைய ஆவி என்றென்றுமாக ஜீவிக்கிறது. இந்த ஸ்திரீ, இங்கே நின்று கொண்டிருக்கின்ற இந்த வாலிபஸ்திரீக்கு... உங்களால் அதைக் காணமுடியுமானால், இவளுக்கும் எனக்கும் இடையே இங்கே அந்த தூதனுடைய ஒளி நின்று கொண்டிருக்கின்றது. அந்த தூதனுடைய ஒளி. ஆனால் அதற்கும் கடந்து ஒரு நிழல் இருக்கின்றது, அந்த நிழல் மரணம், இருள். அது புற்று நோய். அந்த புற்றுநோய் பெருங்குடலின் அடிக்கூறில் [Rectum] இருக்கின்றது. [அந்த சகோதரி “அது சரி'' என்கிறார்கள் - ஆசி]. நீங்கள் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் அல்ல. நீங்கள் ஒரு கென்டக்கிகாரர் ஆவீர்கள். ['அது சரி']. லாகிராஞ்ச், கென்டக்கியிலிருந்து. ['அது சரி'] அது சரி. திருமதி. ஜான்சன், என்ன என்று உமக்கு கூறுகிறேன். நீங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்தீர்களானால், வீடு செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [''நான் விசுவாசிக்கிறேன்'']. இந்த ஸ்திரீயின் ஜீவனை எடுத்துக் கொண்டிருக்கின்ற அந்த பிசாசை நான் கடிந்துகொள்கிறேன். இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் அடிப்படையில், நான் இப்பொழுது சாத்தானிற்கு சவாலிடுகிறேன். அவன் தோற்றகடிக்கப்பட்ட ஒருவன் என்றும் இயேசு கிறிஸ்து அவனை கல்வாரியில் தோற்கடித்துவிட்டார் என்றும் நான் அவனுக்கு கூறிக்கொள்கிறேன். ஆகவே பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தின் கீழ் இருக்கின்ற ஒரு தேவனுடைய ஊழியக்காரனாக, ஒரு தூதனால் எனக்கு அளிக்கப்பட்ட கட்டளை உடையவனாக இந்த ஸ்திரீயின் ஜீவனுக்காக, இந்த பிசாசை நான் கடிந்து கொள்கிறேன். ஓ, கர்த்தாவே, இவள் ஜீவிக்கட்டும். ஆமென். கர்த்தருக்கு நன்றி செலுத்திக் கொண்டு களிகூர்ந்து வீட்டிற்கு சென்று சந்தோஷமாயிருங்கள். இப்பொழுது சந்தேகம் கொள்ளாதீர்கள். உங்களுடைய மனதில் சந்தேகம் கொண்டிருக்காதீர்கள். 82அதைக்குறித்து ஒன்றுமே அறியாத அப்பாவியாக, மிகவும் உத்தமமாக நீங்கள் காணப்படுகிறீர்கள். ஸ்திரீயே. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் அவதிப்படுகின்ற சுரப்பிகோளாறு, மூட்டு வீக்கம், உங்களை விட்டு சென்று விடும். இப்பொழுது, இந்த சிறிய ஸ்திரீ இங்கே ஏதோ ஒன்றை உணர்ந்தார்கள். ஏனெனில் அவர்கள் இருவருக்குமிடையே ஒரு ஆவி இருக்கின்றது, நீங்கள் பாருங்கள். நீங்கள், உங்களுக்கும் எல்லாம் சரியாகி விட்டது. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். ஆகவே சரி, அங்கே அவர்களுக்கு அடுத்ததாக இருக்கும் அந்த சிறிய ஸ்திரீ. ஆம், அங்கே உட்கார்ந்து கொண்டு மேல் நோக்கிப் பார்த்து ஜெபித்துக் கொண்டிருக்கும் நீங்கள். உ-ஊம். அந்த முதுகு கோளாறு, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். ஆகவே உங்களுக்கும் கூட முதுகு கோளாறு இருந்தது. இப்பொழுது வீட்டிற்குச் சென்று சுகமாயிருங்கள். 83உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் மகளுக்காக நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். [அந்த சகோதரி “அது சரி'' என்கிறார்கள் - ஆசி]. உங்கள் மகள் மரண நிழலால்மூடப்பட்டுள்ளாள். [''அது சரி''] அது புற்று நோய் ['ஆம்'] அவளுடைய ஆவிக்குரிய நிலைமைகளும் சரியாக இல்லை. [''அது சரி''] ஆம், ஐயா. அவள் மேலும் கீழும், உள்ளும் புறம்புமாய் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகிறாள். ['ஆம் ஐயா'] உங்கள்கரத்திலுள்ள கைக்குட்டையை நீங்கள் காண்கிறீர்களா? இங்கே பேசிக் கொண்டிருப்பது பரிசுத்த ஆவியானவர் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [''விசுவாசிக்கிறேன்”] கைக்குட்டையை என்னிடம் தாருங்கள். கர்த்தாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே இவர்களுடைய மகளின் நிலையை நான் கடிந்து கொள்கிறேன். அவளுடைய தாயின் வார்த்தைகளின்படியே, அது அவளின் மேல் பலனளிக்கட்டும், இயேசுவின் நாமத்தில். ஆமென். செல்லுங்கள், சந்தேகம்கொள்ளாதீர்கள். விசுவாசம் கொள்ளுங்கள். இப்பொழுது அவள் வீட்டிற்குச் செல்லலாம். அவளின் மீது இந்த கைக்குட்டையை வையுங்கள். விசுவாசியுங்கள் [அந்த சகோதரி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்'' என்கிறார்கள் - ஆசி]. தேவனில் விசுவாசம்கொள்ளுங்கள். [சகோதரன் பிரான்ஹாம் பதினைந்து வினாடிகள் அமைதியாகின்றார் - ஆசி]. உங்களால் காணமுடிகிறதென்றால், அங்கே ஒரு ஸ்திரீ இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கைகுட்டை மேலே இருக்கிறது, ஜெபித்துக் கொண்டு, தன்னுடைய கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். சகோதரியே நீங்கள் ஏதோ ஒன்றை தொட்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னைத் தொடவில்லை, ஆனால் நீங்கள் அவரை தொட்டிருக்கிறீர்கள். இப்பொழுது உங்கள் இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக்குழாய் வீங்கியுள்ளது. பெண்களுக்கான கோளாறு, மற்றும் எல்லாவிதமான சிக்கல்கள். அது சரியே. அப்படித்தானே? அது உண்மையானால் உங்கள் கையை உயர்த்துங்கள். அது சரி. இப்பொழுது, சுகமடைந்து வீடு திரும்புங்கள். அவர்கள் எதைத் தொட்டார்கள்? நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். யாரை, எதை அந்த ஸ்திரீ தொட்டார்கள்? அந்த பிரதான ஆசாரியரை. உங்களால் அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றதா? இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன், இங்கு இருக்கின்றார். ''நீங்கள் விசுவாசிக்கக் கூடுமானால் ஆவியானவர் கூட்டத்தில் இருக்கின்றார். விசுவாசித்துக் கொண்டிருங்கள். இந்த படத்தில் இருக்கின்ற அந்த அக்கினி ஸ்தம்பம், கூட்டத்தினிடையே சென்று கொண்டிருக்கின்றது. 84என்னை உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஸ்திரீ. அவர்களின் மீது அது நிற்கின்றது. இப்படி கரங்களை உயர்த்தியுள்ளார்கள், வாயில் கை குட்டையை வைத்துள்ளார்கள். தலையில் கோளாறு, தலையில் ஒருவித நரம்பு கோளாறு. அது சரி. அவருடைய தீர்க்கதரிசி என்று என்னை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களிடம் பேசிக் கொண்டிருப்பவர் கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வீடு செல்லுங்கள், அதை நீங்கள் மேற்கொள்ளப் போகிறீர்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். அங்கே அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் மனிதன், காம்ப்பெல்ஸ்வில்ல், கென்டக்கியுடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடையவர். உ, ஊம். உங்களுக்கும் நரம்பு கோளாறு இருக்கின்றது, முழுவதும் வலுவிழந்திருக்கின்றீர். உயர் இரத்த அழுத்தம். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா, ஐயா? அப்படியானால், அந்த காரியங்கள் சரியானது தானா என்றால் உங்களுடைய கையை உயர்த்துங்கள். நீங்கள் எதைத் தொட்டீர்கள்? யாரோ ஒருவரை, அந்த பிரதான ஆசாரியரை நீங்கள் தொட்டீர்கள். செல்லுங்கள், விசுவாசியுங்கள், சொஸ்தமாகுங்கள். இங்கே ஒரு கனத்த ஸ்திரீ, தன்னுடைய கையை உயர்த்தி இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஸ்திரீயை எனக்கு தெரியும் என்று நான் நம்புகிறேன். அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய தலையில் கோளாறை உடையவர்களாக இருக்கிறார்கள். நான் அந்த வேறொரு ஸ்திரீக்கு 'தலை' என்று சில நிமிடங்களுக்கு முன்பு நான் கூறினபோது, அது இவர்களை பாதித்தது. இவர்களுக்கும் கூட தலையில் கோளாறு உள்ளது. நான் இந்த ஸ்திரீயை எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கு என்று தெரியவில்லை. ஆனால் நான் இவர்களைப் பார்த்திருக்கிறேன். ஓ, ஆம், எனக்கு தெரிகிறது. இப்பொழுது ஆவிக்குரிய விதத்தில் இப்பொழுது நான் அறிகிறேன். இவர்கள் லூயிவில், கென்டக்கியைச் சேர்ந்த ரோஸ் ஆஸ்டின். இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? வீடு செல்லுங்கள், சுகமாயிருங்கள். 85உங்களை எனக்குத் தெரியும். நான் உங்கள்... உங்கள் முகத்தை நான் அறிவேன். ஒரு பேட்டியின் போது, ஒரு வாகனத்தில், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது நான் உங்களுடன் இருந்தேன். அது சரி. நான் உங்கள் மீது கரங்களை வைத்தபோது நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். இப்பொழுது உங்களுடைய பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் கார் வியாபாரம் செய்பவர். அவ்வளவு தான் எனக்குத் தெரியும். உங்களிடம் என்ன கோளாறு இருக்கிறது என்பதை குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. உங்களுக்கு அது தெரியும். அது சரி. சிறு எண்ணம் கூட இல்லை. [''அந்த சகோதரன் இல்லை'' என்கிறார் - ஆசி]. அந்த பிரச்சனை என்ன என்பதை தேவன் வெளிப்படுத்துவாரானால், உமக்கு பரிசுத்த ஆவியை அளித்த அதே ஒருவர் உம்மை சுகப்படுத்துவார், உம்முடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்கு அளிப்பார். அதை விசுவாசிக்கிறீர்களா? ['ஆம் ஐயா'] நீங்கள் உங்களுக்காக இங்கே இருக்கவில்லை. [''இல்லை ஐயா''] அது உம்முடைய நிலைமை அல்ல. அது நீர் நேசிக்கிற ஒருவருக்கு. அது வர்ஜீனியாவில் இருக்கின்ற ஒரு சகோதரி. ஏதோ ஒருவித முதுகு கோளாறு. உங்களுக்கு மனைவி அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை இருக்கின்றது. அவர்கள் விசுவாசிப்பார்களானால், அந்த பழைய இருதயக் கோளாறும் காரியங்களும் அவர்களை விட்டு நீங்கி விடும். அவர்கள்... 86இங்கே இருக்கின்ற ஸ்திரீக்கும் நீங்கள் தொடர்புடையவராய் இருக்கிறீர்கள். (அந்த சகோதரன் ''ஆம்'' என்கிறார் - ஆசி). அது உங்களுடைய தாயார் ஆகும் (''ஆம்'') அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறார்களா? அல்லது இல்லையா என்று கவலை கொண்டுள்ளார். (''ஆம்'' மேலும், அவர்களுக்கு கர்ப்பப்பை கோளாறு உள்ளது, வேறெதோ ஒன்று. அங்கே இருந்த டாக்டர், மிகவும் பலம் வாய்ந்த ஆள், ''அது கர்ப்பப்பை சரிவு'' என்று கூறியிருக்கிறார். சில காலத்திற்கு முன்பு உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்க வேண்டியதாய் இருந்தது. உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாத காரணம் அவரே ஆகும். (அந்த தாய் ''ஆமாம்'' என்கிறார்கள்.) நீ இங்கு ஜெபிக்கப்பட்ட இவர் விரும்பினார். [“ஆம் அது சரி''.] அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டிருப்பவர்களும் உறவினர் ஆவர். அந்த உறவினர் வாலிப ஸ்திரீ, விவாகத்தின் மூலமாகத்தான் அவள் உறவினர். [அந்த சகோதரன், ''உம் - ஊம்'' - என்கிறார் - ஆசி]. விவாகத்தின் மூலம் அவள் உங்களுக்கு தமக்கை ஆவாள். அவர்கள் தன்னுடைய இரட்சிப்பைக் குறித்தும் கவலைப்படுகிறார்கள். அது சரி. ஒரு வாலிப ஸ்திரீ, அவளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. [''ஆம்''] முற்றிலும் உண்மை. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஓ, ஆம் ஐயா” என்கின்றார்கள் - ஆசி]. (சபையார் களிகூருகின்றனர் - ஆசி). நாம் தேவனிடத்திற்கு நம்முடைய கரங்களை உயர்த்துவோம். ஓ கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, ஜீவனிற்கு காரணரே. ஒவ்வொரு அருமையான வரத்தை அளிப்பவரே, இப்பொழுது ஜனங்களின் மத்தியில் உம்முடைய பிரசன்னத்தை அனுப்பும். கர்த்தாவே, அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையை அவர்களுக்கு அளியும். இதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இந்த ஜனங்களுக்கு என்ன தேவையுள்ளதோ அதை அவர்களுக்கு அளித்து அவர்களை ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம், எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, ஆமென். 87எத்தனைப்பேர் விசுவாசிக்கிறீர்கள்? [சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி]. எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் எப்படியாயினும், இந்த வரிசையினூடாக அது யார் மீதோ சென்றது. அது எல்லாம் உண்மை தானே? உங்கள் கைகளை உயர்த்துங்கள். யார் யாரிடம் அது பேசினது, அது உண்மையானதல்லவா? (தனிப்பட்ட ஒவ்வொருவரும் “ஆமென், அதன் ஒவ்வொரு வார்த்தையும்! அதன் எல்லா காரியமும் உண்மையே!'' என்று கூறுகின்றனர் - ஆசி) அனைத்தும் உண்மை . அப்படியானால் பரிசுத்த ஆவியானர் இங்கே இருப்பது உண்மையாகும். அது உண்மை தானே? [''ஆமென்”] இப்பொழுது அவருடைய ஊழியக்காரனாக என்னை விசுவாசியுங்கள். எனக்கு தெரியும் அந்த நீங்கள் சலசலப்படைந்திருக்கிறீர்கள். நீங்கள் களைத்திருக்கிறீர்கள். பாருங்கள்?சந்தேகம் கொள்ளாதீர்கள். இது அவர் தான் என்று இப்பொழுது விசுவாசியுங்கள். பெந்தெகொஸ்தே நாளிலே மேலறையில் வேகமாக வந்த அந்த பலத்த காற்றுதான், அதேகாரியம் தான், அதே பரிசுத்த ஆவிதான், இந்த ஜனங்கள் ஏற்று கொண்ட போது இவர்களை பாதித்துள்ளது. இப்பொழுது, சரியாக உங்கள் மீது, ஒவ்வொருவரை சுற்றிலும் அது அசைந்து கொண்டிருக்கிறது. ஜனத்திரளின் இடையே பரிசுத்த ஆவியானவர் உங்கள் மத்தியிலே அசைவாடுகிறார். எத்தனை பேர்... இந்த வேதாகமம் எனக்கு முன்பாக இருக்கையில், இதனோடு எப்படி உத்தமமாய் இருக்கிறீர்களோ அவ்விதமாக நீங்கள் என்னுடன் உத்தமமாக இருக்க நான் விரும்புகிறேன். ஏதோ ஒன்று வந்துள்ளதைப் போன்ற ஒரு உண்மையான வினோதமான உணர்வை எத்தனைப் பேர் உணருகிறீர்கள்? [சபையார் “ஆமென்'' என்கின்றனர்- ஆசி] அதுதான் அந்த பரிசுத்த ஆவியாகும். அது அவரேயாகும். 88இப்பொழுது என்னை விசுவாசியுங்கள். என்னுடைய வார்த்தைகள் உண்மையாயிருக்கின்றன. ஏனெனில், தேவன் தம்முடைய சத்தியத்தை வேதத்தின் மூலமாக உறுதிபடுத்தியுள்ளார், அதை தம்முடைய உயிர்தெழுந்த வல்லமையால் உறுதிபடுத்தியுள்ளார், விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் அதை உறுதிபடுத்தியுள்ளார், அப்படியானால் அதை இன்னுமாய் நிரூபிக்க வேறு ஏதும் மீதம் இல்லை. அவர் தேவன். அது இங்கே இருக்கின்றது. அப்படியானால், எனக்கு செவி கொடுங்கள். நான் உங்களுக்கு சத்தியத்தை உரைக்கிறேன். உங்களில் ஒவ்வொருவரும் சரியாக இப்பொழுது சுகமாக்கப்படத்தக்கதாக தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறீர்கள், முழு குழுவாகிய நீங்கள், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ['ஆமென்'.] இப்பொழுது, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, நீங்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைக்க நான் விரும்புகிறேன், ஆதலால் அது நான் அல்ல என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் - நீங்களும் திறன்மிக்கவர்கள். நீங்களும் ஒரு விசுவாசி. அந்த பரிசுத்த ஆவியை நீங்கள் உணர்வீர்களானால், அது உங்கள் மேல் உள்ளது. ஒருவேளை இந்த வாரம் போன்றதில்லாமல் இருக்கலாம், ஆனால் அந்த பரிசுத்த ஆவி உங்கள் மீது இருக்கின்றது. யாரோ ஒருவர், யாராயிருந்தாலும் பரவாயில்லை, யாராவது ஒருவர் மீது கைகளை வையுங்கள், பிறகு உங்கள் தலையை வணங்குங்கள். யாராவது ஒருவர் மீது உங்களுடைய கைகளை வைத்து, தலையை தாழ்த்துங்கள். இதை செய்ய நான் நடத்தப்படுகிறேன். உங்கள் சுகமளித்தலுக்கான நேரம் இது என்று நான் உணருகிறேன். நீ விசுவாசிக்க கூடுமானால் ஓ, அந்த பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தின் மீது அசைவாடுகிறார்! 89பின்னால் அமர்ந்திருக்கிற உங்கள் சகோதரனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும், ஜார்ஜியாவைச் சேர்ந்த அங்கேயுள்ள, அந்த சிறிய நபர்; விசுவாசம் கொள், விசுவாசி. ஓ, அது எல்லா இடங்களிலும் உள்ளது, எல்லா இடங்களிலும் இருக்கிறது. இப்பொழுது, உங்களுக்காக. நீங்கள் ஜெபித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் யார் மீது கைகளை வைத்துள்ளீர்களோ அந்த நபருக்காக ஜெபியுங்கள். அது ஒவ்வொருவரும், ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும்படி உங்களை அது செய்யும். இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவே, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவராகிய, அந்த மனுஷக்குமாரனே, பொந்தியு பிலாத்துவின் மிரட்டல்களும் ரோம அரசாங்கத்தின் முத்திரையும் கல்லறையில் உம்மை அடைத்துவைக்கக் கூடாமற்போயிற்று. ஈஸ்டரின் நாளிலே சர்வவல்லமையுள்ள தேவன் கீழே இறங்கி வந்து முத்திரையை உடைத்து கல்லைப் புரட்டிப்போட்டார். நீர் எழுந்து உம்முடைய சீஷரோடு நாற்பது நாள் தங்கியிருந்து, உலகத்திற்குள் சென்று இப்பொழுது செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காரியங்களைச் செய்யும்படி அவர்களுக்கு கட்டளை கொடுத்தீர். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று. கர்த்தாவே, நீர் தேவன். உம்மால் தவற முடியாது. நீர் இங்கேயிருக்கிறீர். இக்காலை நாங்கள் கொண்டிருந்த, இக்காரியங்களைக் குறித்து ஒன்றாக ஆலோசனை செய்த இந்த சேர்ந்துரையாடலில் நீர் தேவன் என்பதை நாங்கள் ஆலோசித்தோம், நீர் தேவன் என்று நாங்கள் ஆலோசனை செய்தோம், நீர் இங்கே இருந்த காரணத்தால் நாங்கள் ஆலோசித்தோம். ஆகவே இப்பொழுது, ஒருவரின் மேல் ஒருவர் கைகளை வைக்கத்தக்கதான உம்மிடமிருந்து வந்த கட்டளையை நாங்கள் கொண்டிருக்கிறோம். அதைத்தான் நாங்கள் செய்யும்படியாக நீர் எங்களைப் பணியில் அமர்த்தியிருக்கிறீர். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள். அவர்கள் சொஸ்தமடைவார்கள்'' என்று நீர் கூறினீர். சேர்ந்துரையாடலில் எங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை அதுவே. இப்பொழுது கர்த்தாவே, ''பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவி கொடுத்தலே உத்தமம்.'' 90இப்பொழுது கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனாக, ஒவ்வொரு பிசாசையும், ஒவ்வொரு ஆவியையும், ஒவ்வொரு வியாதியையும், எல்லா பிரச்சனைகளையும், இந்த ஜனங்களை கவலைக்குள்ளாக்குகின்ற ஒவ்வொரு மாறுபாடான காரியத்திற்கும், நான் கட்டளையிட்டு, ஆணையிடுகிறேன். தேவனுடைய பிரசன்னத்தில், பரிசுத்த ஆவியின் சாட்சியின்படி, என்னிடம் அனுப்பப்பட்ட தூதனின் கட்டளையின்படி தேவனுடைய வார்த்தையைக் கொண்டு அந்த ஆவியை நான் சவாலிடுகிறேன். வியாதி மற்றும் வேதனைகளின் ஆவியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வெளியே வா, அவர்கள் தாமே சுகமடையட்டும். அவர்கள் செல்லட்டும். சாத்தானே, நீ ஒரு பொய்க்காரன். உன்னை நாங்கள் வீழ்த்தியுள்ளோம். (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை அநேகமுறை தட்டுகிறார் - ஆசி) புறஜாதிகளில் சமுகத்திலே இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே வெளிப்படுத்தும் நேரமானது வந்துவிட்டது. இப்பொழுது, சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டாய். ஒரு காலத்திலே ஜனங்களை நீ பிடித்திருந்தாய். சட்டப்படியான உரிமைகள் உனக்கு இப்பொழுது இல்லை. நீ கொண்டிருந்த ஒவ்வொரு உரிமையையும் இயேசுகிறிஸ்து கல்வாரியில் உன்னைவிட்டு எடுத்துவிட்டார். அவர் முழு கிரயத்தை செலுத்தி, “முடிந்தது'' என்று கூறினார். இரட்சிப்பின் முழு திட்டமும், எல்லா சுகமளித்தலும், எல்லாமும் கல்வாரியில் முடிக்கப்பட்டது. பாவத்தின் மூலம், வீழ்ச்சியின் மூலம் நீ ஒரு காலத்தில் கொண்டிருந்த எல்லா காரியமும் உன்னிடமிருந்து எடுக்கப்பட்டாயிற்று. இப்பொழுது இயேசுவின் இரத்தத்தால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம். (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஒருமுறை தட்டுகிறார் - ஆசி). இன்னுமாக எங்களை உன்னால் பிடித்து வைக்க முடியாது. நாங்கள் ”கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்களை விட்டு நீங்கு'' என்று கூறுகிறோம். 91இப்பொழுது உங்கள் கைகளை ஒருவர் மீது ஒருவர் வைத்திருங்கள். ஜெபித்துக் கொண்டிருங்கள். நீங்கள் கைகளை வைத்திருங்கள்; ஜெபித்துக் கொண்டிருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும், “தேவன் அருகில் இருக்கிறார். தேவனுடைய ஆவி இங்கே இருக்கிறது. தேவன் என்னை சுகமாக்குகிறார். அவருடைய கருணை, அவருடைய இரக்கம், அவருடைய கனிவு, அவருடைய வாக்குத்தத்தம் என்னுள் உண்மையாக்கப்பட்டிருக்கிறது'' என்று சிந்தித்துக் கொண்டிருங்கள். நாம் வாரக்கணக்காக பிரசங்கித்துக் கொண்டேயிருக்கலாம், அது இப்பொழுது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது. பரிசுத்த ஆவி இங்கே இருக்கிறது. இப்பொழுது சரியாக இங்கே இருப்பதைப் போல, எந்த நேரத்திலும் அதைத்தான் அதனால் செய்ய முடியும். “சரியாக இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார், தேவன் இங்கே இருக்கிறார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நான் அவரை விசுவாசிக்கிறேன். அது முடிவு பெற்ற ஒன்று. நான் அதை வைத்திருக்கிறேன். அது என்னுடைய சுதந்தரம். பரிசுத்த ஆவியால் நான் இப்பொழுது நிரப்பப்படுகிறேன். என்னுடைய வியாதிகள், என்னுடைய வலிகள், தொந்தரவுகள் எல்லாம் போகின்றன. என்னுடைய எல்லா தொந்தரவுகளும் என்னைவிட்டகன்று விடுகின்றன உங்களுடைய தலைகளை தாழ்த்தியவாறு, உங்கள் கண்கள் மூடியவாறு. அப்படித்தான் ஜெபிக்க வேண்டும். (நம்பிடுவாய்,) இப்பொழுது. உங்கள் தலைகளைத் தாழ்த்திக் கொண்டிருங்கள். இப்பொழுது. நாம் இப்பொழுது அமைதியாகப்பாடப் போகிறோம். நம்பிடுவாய் ...... மலையை விட்டு கீழே இறங்கின பொழுது, வலிப்பு நோய் உடைய பிள்ளையை... சீஷர்கள் அங்கே இருந்தனர். ஆலோ...